கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இணைக்க வீடு தேடிச் சென்ற அதிமுக – மறுப்பு தெரிவித்த சீமான் !

சீமான் எண்ணப்படி நாம் தமிழர் கட்சி 12% - 15% வாக்குவங்கி உயர்ந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியைப் பிடிக்கமுடியாது போல் உள்ளது. “இந்தச் சிறுத்தை யாரிடமும் சிக்காது” என்பது காதில் விழுகிறது.

0

கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இணைக்க வீடு தேடிச் சென்ற அதிமுக – மறுப்பு தெரிவித்த சீமான் !

ரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் கூறியபடி ‘மெகா’ கூட்டணி அமைக்க, கட்சிகளின் வீடுகளைத் தேடிக் கூட்டணி அமைக்க அதிமுக அழைப்பு விடுத்து வருகின்றது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி சீமானை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயப் பாஸ்கர் மற்றும் அதிமுகவின் முக்கியப் பொறுப்பில் உள்ள சீமானின் மாமனார் காளிமுத்து அவர்களின் தம்பி (சின்ன மாமனார்) ஆகியோர் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைய வேண்டுகோள் விடுத்தனர்.

அதிமுக கூட்டணியில் 1% வாக்குவங்கியைக் கொண்ட தேமுதிகவை இணைக்கவே அதிமுக பாடதாதபாடுபட்டு விட்டது. அவர்கள் கேட்ட 6 தொகுதியில் 4 தொகுதியைத் தருவது என்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு, தேமுதிக – அதிமுக கூட்டணி தற்போது ஏற்பட்டுள்ளது. 5% வாக்கு வங்கியை வைத்துள்ள பாமக அதிமுகவோடும் பாஜகவோடும் ஒரே நேரத்தில் கூட்டணி பேசி வருவது அதிமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. என்றாலும் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பாமகவோடு கூட்டணிப் பேச்சுவார்த்தையை அதிமுக தொடர்ந்து நடத்தி வருகின்றது. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆட்சி அதிகாரத்தில் அமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் பாஜக பக்கம் பாமக போய்விட்டால் என்ன செய்வது என்ற இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக இருந்து வருகின்றது.

இதையும் படிங்க:

- Advertisement -

- Advertisement -

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான செய்திகளை படிக்க !

4 bismi svs

இந்நிலையில்தான், 7% வாக்குவங்கியை வைத்துள்ள நாம் தமிழர் கட்சியை அதிமுக கூட்டணியில் இணைத்தால் நல்லது என்ற எண்ணத்தில்தான் நாம் தமிழர் கட்சி, அதிமுக கூட்டணியில் இணையவேண்டும் என்ற வேண்டுகோள் 07.03.24 ஆம் நாள் சீமான் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயப் பாஸ்கர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் போட்டியிட 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் விஜயப் பாஸ்கர் தெரிவித்துள்ளார். சின்ன மாமனாரும் உடன் வந்திருப்பதால், சீமான் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று நாம் தமிழர் முடிவெடுத்த 2016 தொடங்கி, தனித்துப் போட்டியிடவேண்டும் என்றும் எந்தச் சூழ்நிலையிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, நாம் தமிழர் தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது என்று அப்போது எடுத்த முடிவின்படியே நாங்கள் இயங்கி வருகிறோம். கூட்டணியில் நாம் தமிழர் இணைந்து போட்டியிடுவது என்பது தற்கொலைக்குச் சமம் என்றே எண்ணுகிறது” என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி - சீமான்
எடப்பாடி பழனிச்சாமி – சீமான்

மேலும், அவர் பேசும்போது,“கூட்டணியில் இணைந்துகொள்ளுங்கள். 6 நாடாளுமன்றத் தொகுதிகள் வழங்கப்படும் என்று கூறுகின்றீர்கள். நான் கடந்த 6 மாதக் காலம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டு, பொதுக்கூட்டங்கள் நடத்தி வேட்பாளர்களைத் தேர்வு செய்து இதுவரை 30 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டேன். அவர்கள் தொகுதிகளில் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கிச் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். உங்களோடு கூட்டணியில் இணைந்து 6 தொகுதியைப் பெற்றுக்கொண்டால், 34 தொகுதிகளில் வேட்பாளராக நிற்கும் என் தம்பி, தங்கைகள் வேறு மாநிலத்திலா போட்டியிடுவார்கள். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் சட்டமன்றத்திற்கும் கூட்டணியில் இணைந்துகொள்ளுங்கள் என்று வேண்டுகோள் வைக்கவேண்டாம் என்பதை இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சீமான் முடித்துக்கொண்டார்.

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் சீமான் எண்ணப்படி நாம் தமிழர் கட்சி 12% – 15% வாக்குவங்கி உயர்ந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியைப் பிடிக்கமுடியாது போல் உள்ளது. “இந்தச் சிறுத்தை யாரிடமும் சிக்காது” என்பது காதில் விழுகிறது.

-ஆதவன்

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.