அங்குசம் பார்வையில் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே !

இளைஞர்கள் நல்ல பேரை வாங்க வேண்டும் என்பதற்காக இந்த சினிமாவை எடுத்ததாகச் சொல்கிறார்கள். அதுவும் வழக்கமான சினிமாவாக இருக்கக் கூடாது என்பதற்காக

0

அங்குசம் பார்வையில் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ !

யாரிப்பு & பாடல்கள்- இசை: பிரதீப் குமார். டைரக்‌ஷன்: பிரசாத் ராமர். வெளியீடு: உத்ரா புரொடக்‌ஷன்ஸ். நடிகர்—நடிகைகள்: செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கிரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்ச்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், அமுதராணி, மினு வாலண்டினா, நாகராஜ் (அனைவருமே புதுமுகங்கள்). டெக்னீஷியன்கள்: ஒளிப்பதிவு: உதய் தங்கவேல், எடிட்டிங்: ராதாகிருஷ்ணன், ஆர்ட் டைரக்டர்: விஜய் ஆதிநாதன். பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்.

2 dhanalakshmi joseph

ஆளே இல்லாத தியேட்டருக்கு தனது ஆளை தள்ளிட்டுப் போய், தடவி, உறிஞ்சி, ஜல்சா பண்ணும் ( இந்த வார்த்தைகளை நாம சொல்லலீங்க. பல சீன்களில் ஹீரோயின் ப்ரீத்தி கிரணே டயலாக் பேசுவது மாதிரி வைத்திருக்கிறார் டைரக்டர் ). இளைஞர்கள் நல்ல பேரை வாங்க வேண்டும் என்பதற்காக இந்த சினிமாவை எடுத்ததாகச் சொல்கிறார்கள். அதுவும் வழக்கமான சினிமாவாக இருக்கக் கூடாது என்பதற்காக ரோட் டிராவல் டைப்பில் கதையையும் காட்சியையும் கொண்டு போகிறார்கள்.

படத்தின் முதல் சீனே காலியாக கிடக்கும் தியேட்டரில் தான் ஆரம்பிக்கிறது. தனது லவ்வரை கவ்வுவதற்காகவே தியேட்டருக்கு தள்ளிட்டு  வந்திருக்கிறார் ஹீரோ செந்தூர்பாண்டியன். ஒரு லிமிட்டுக்கு மேல் அந்தப் பெண் “நோ” சொன்னதும் டென்ஷனாகி வெளியே போகிறார். அதன் பின் ஃபேஸ்புக் நண்பியான ஹீரோயின் ப்ரீத்தி கிரணைத்  தேடி, மதுரையிலிருந்து பைக்கிலேயே  மயிலாடுதுறை போகிறார்கள், செந்தூர்பாண்டியும் அவரது நண்பனும். எப்படியும் நண்பியை ‘நசுக்கி’விட வேண்டும் என்பதற்காக, மயிலாடுதுறையில் ‘காண்டம்’ பாக்கெட் வாங்குகிறார் ஹீரோ.

- Advertisement -

- Advertisement -

இதையும் படிங்க:

4 bismi svs

அங்குசம் இணையத்தில் வெளியான சினிமா செய்திகள் !

‘ஆசை’யுடன் ஹீரோயின் வீட்டுக்குப் போனால், அங்கே பாட்டி இருக்கிறார். அதன் பின் இருவரும் பூம்புகார் கடற்கரைக்குப் போகிறார்கள். அதன் பின் பூங்காவுக்குப் போகிறார்கள். அங்கே வைத்து ப்ரீத்தியை ஆவேசமாக கட்டிப் பிடிக்கிறார் செந்தூர்பாண்டி. அப்போது பூகம்பமாக வெடித்து, மர்ம உறுப்பில் எட்டி உதைக்கிறார் ப்ரீத்தி. மீண்டும் மயிலாடுதுறைக்கே வந்து, ப்ரீத்தியை அவரது வீட்டில் இறக்கிவிடுகிறார் செந்தூர். சரி, ஹீரோவுடன் போன அவரது நண்பன் என்னவானான்னு கேட்குறீகளா? அவரு மயிலாடுதுறை பஸ்ஸடாண்ட்லயே உட்கார்ந்திருக்காரு. அப்புறம் ஒரு டிக்டாக் டிக்கெட்டுடன் கடலை போடுறாரு. வந்தது வேஸ்டான விரக்தியில இருவரும் இரவில்  மதுரை திரும்புகிறார்கள்.

பொழுது விடிகிறது. செந்தூரின் தங்கை வேலைக்குப் கிளம்புகிறார். சற்று நேரத்தில் செந்தூரும் பைக்கில் கிளம்புகிறார். ஒரு பெட்ரோல் பங்கில் பைக்கிற்கு பெட்ரோல் போட்டுத் திரும்பும் போது, செந்தூரின் தங்கை, ஒரு வாலிபனுடன் பைக்கில், செந்தூர்பாண்டியன் தள்ளிட்டுப் போய் தடவிய, அதே சோலமலை தியேட்டருக்குள் போகிறார்.

இத்துடன் படம் முடிந்தது.  நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளேன்னு டைட்டில் வச்சதுக்கு என்ன சொல்ல வர்றீக டைரக்டரே? நம்ம விமர்சனமும் இத்துடன் முடிந்தது.

-மதுரை மாறன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.