அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் திறப்பு!
அரசு போக்குவரத்துக்கழக
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான
குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் திறப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டலத்துக்குட்பட்ட தஞ்சாவூர் புறநகர் மற்றும் நகர் கிளைகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளை தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் திறந்து வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தபடி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் அவர்கள் அனைவரும் ஓய்வெடுக்க ஓய்வு அறைகளை நவீனப்படுத்தி தற்போது அவை குளிரூட்டப்பட்ட அறைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் தஞ்சாவூர் புறநகர் மற்றும் தஞ்சாவூர் நகர் கிளைகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளை தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டிகேஜி நீலமேகம் திறந்து வைத்தார்.
கும்பகோணம் கோட்டத்தில் இதுவரை திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், அரியலூர், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய ஊர்களில் 8 கிளைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் திறக்கப்பட்டுள்ளதாக மேலாண்மை இயக்குநர் அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் மண்டல பொது மேலாளர்கள் கே.இளங்கோவன், கே.முகமது நாசர், துணை மேலாளர்கள் ஏ.தமிழ்செல்வன், ஜெ.பாலமுருகன், எச்.ராஜேந்திரன், எஸ்.செந்தில்குமார், கிளை மேலாளர்கள் சந்தனராஜ் சுசியன், பிரகாஷ், அஜய் வெங்கடேஷ்வரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ.க.பாண்டியன், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழிற்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தஞ்சாவூர் புறநகர் கிளையில் போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கான சிறப்பு மன அழுத்த மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கா.செல்வகுமார் கலந்து கொண்டு பயிற்சி அளித்து கருத்துரை வழங்கினார்.