தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக அணிதிரண்ட அறிவுஜீவிகள் !
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக அணிதிரண்ட அறிவுஜீவிகள் ! வலுக்கும் எதிர்ப்பு !
பொதுவில் மக்களுக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு எதிரான நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் தேசிய கல்விக் கொள்கை – 2020 ஐ அமல்படுத்தி வருவது தொடர்பாக, தங்களது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள் அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி (AISEC) யினர். இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சருக்கும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கோரிக்கை மனு ஒன்றை அவ்வமைப்பின் பொதுச்செயலர் தருண் காந்தி நஸ்கர் சார்பில் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கிறார், ஏஐஎஸ்இசி – யின் தமிழ்நாடு மாநில கமிட்டியின் அலுவலகச் செயலாளர் வெ.சுதாகர்.
ஏஐஎஸ்இசி பொதுச் செயலாளர் தருண் காந்தி நஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய கல்விக் கொள்கை 2020 தற்போதுள்ள வடிவில் பார்த்தால் அது மக்கள் விரோதமானது, ஏழைகளுக்கு எதிரானது, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து தேசத்தை சீர்குலைக்க கூடியது, இருப்போருக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே பிரிவினையை தூண்டக் கூடியதாக இருக்கிறது.
NEP 2020 கல்வியை தனியார் மயம், வியாபாரமயம் கார்ப்பரேட்மயம் ஆக்குவதை ஊக்கப்படுத்துகிறது. பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசாங்கங்கள் இடமிருந்து பறிக்கிறது.
எனவே என்.இ.பி 2020 (NEP 2020) ஐ உடனடியாக திரும்பப்பெற்று நாட்டின் புகழ்பெற்ற கல்வியாளர்களை உறுப்பினர்களாக கொண்டு ஒரு புதிய கல்விக் குழுவை உருவாக்கி எந்த ஒரு பாரபட்சமும் முன்னபிப்பிராயமும் இல்லாமல் எவ்வித அரசாங்கத்தின் தலையிடும் இல்லாமல் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கருத்து கேட்டு மக்கள் ஆதரவு கல்விக் கொள்கையை வகுக்குமாறு கல்வி அமைச்சரை AISEC வலியுறுத்துகிறது.
மாநில முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில், கூட்டாட்சிக்கு எதிராகவும், நாட்டின் ஜனநாயக கட்டமைப்புக்கு எதிராகவும் இருக்கக்கூடியதும், அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசாங்கத்தின் வசம் குவிக்க கூடியதுமான தேசிய கல்விக் கொள்கையை 2020 தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தக்கூடாது, அதற்கு பதிலாக தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர்களை உறுப்பினர்களாக கொண்டு ஒரு மாற்று, மக்கள் நல கல்விக் கொள்கையை தங்களது மாநிலத்தின் தேவைக்கு ஏற்றவாறு வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனுவில் இர்ஃபான் ஹபீப் (மூத்த வரலாற்று அறிஞர்), ராம் புன்யானி ( முன்னாள் பேராசிரியர் ஐஐடி மும்பை), பிரகாஷ் என் ஷா ( குஜராத்தி சாகித்திய பரிசத் முன்னாள் தலைவர்), அலி நதீம் ரெசாவி ( செயலாளர், இந்திய வரலாற்று காங்கிரஸ்), முன்னாள் துணைவேந்தர்களான சந்திரசேகர் சக்கரவர்த்தி, எல். ஜவஹர் நேசன், ஏ. முருகப்பா, தபோதிர் பட்டாச்சாரியா, இந்திய தேசிய அறிவியல் அகாடமியைச் சேர்ந்தவர்களான துருபா ஜோதி முகோபதியாய், அமிதாவா தத்தா, ஜேஎன்யு பல்கலைக்கழக பேராசிரியர்களான சச்சிதானந்த சின்கா, ஆர். மகாலட்சுமி, மிருதுல்லா முகர்ஜி, கணஷ்யம் ஷா, ஆதித்யா முகர்ஜி, சுச்சேதா மகாஜன், தேபாஷிஷ் கோஷால், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர்களான – திவ்யந்து மைத்தி, சுவாதி ஜோஷி, நந்திதா நரேன், சாவித்திரி சிங், பிரவீன் குமார், பூஜா சர்மா, ரித்து கண்ணா, வினைக்குமார், இந்திய அறிவியல் கழக (IISc Bangalore), பேராசிரியர் எஸ். மாதவன், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் செய்துர் ரஹ்மான், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஹெச். திலகர், ஜாதப்போர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் – அமித் பட்டாச்சாரியா, அமித்தவா, பாஸ்கர் குப்தா, சுமந்தா நியோகி, கௌதம் மைத்தி, டிப்டென் மிஸ்ரா, அமித் கர்மாகர், சமர் மோண்டல், அஜோய் தத்தா, ஆர்கியா நந்தி, அசாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் – தெபாஷிஷ் சக்கரவர்த்தி, நெகு , ஹெச். ஸ்ரீகாந்த், மாலா ரெங்கநாதன்,, ஹிமாச்சல பிரதேச மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் : நவநீத் ஷர்மா, ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் சைப், IIEST: அமித் ராய் சவுத்ரி, கொல்கொத்தா பல்கலைக்கழகத்தின் அருணாவா மிஸ்ரா, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் இ. ஸ்ரீ குமரன், பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் கன்வெல்ஜித் கவுர், WBUAFS: பிரதீப் தாஸ், கல்லூரி முதல்வர்கள் – ருபாயன் பட்டாச்சாரியா, நிலேஷ் மைத்தி, சாரதா தீக்ஷித், பி. சிவகுமார், எழுத்தாளர்கள் – அல்லெமபிரபு பெட்டதுரு, எஸ்.ஜி. சித்தராமையா, விஞ்ஞானிகள் – வி. ஸ்ரீகுமார், சி. ராமச்சந்திரன், ஏஐஎஸ்இசி: வி.பி. நந்தகுமார், தேபாஷிஷ் ராய், எஸ். கோவிந்தராஜூலு, வி.என். ராஜசேகர், எம்.ஜெ. வால்டேர், ஷாஜர் கான், இ.என். சாந்திராஜ், பிரதீப் மொஹப்பத்ரா, ரமேஷ் நாயக், சாரதா தீக்ஷித், கமல் சைன், மிருதுளா தாஸ், ராமாவதார் சர்மா, சுபாஷ் நாயக், யோகராஜன், குதித்த பட்நாகர், பாவிக்க ராஜா, பிரான்சிஸ் கலத்தின்கள் உள்ளிட்ட நாட்டின் 500-க்கும் மேற்பட்ட முன்னணி கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் கையெழுத்திட்டு உள்ளனர்.” என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
– அங்குசம் செய்திப் பிரிவு.