அதிரடி கட்டண தள்ளுபடிகளை அறிவித்த ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் !
தியாகிகளின் குழந்தைகளுக்கு 100% கல்வி கட்டணத் தள்ளுபடி உள்ளிட்டு, பயிற்சி கட்டணத்தில் 90 சதவீதம் வரை ஸ்காலர்ஷிப் வழங்கும் அதிரடி திட்டங்களை ...
அதிரடி கட்டண தள்ளுபடிகளை அறிவித்த ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் !
இந்தியா முழுவதும் 315 மையங்களையும் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மையங்களையும் கொண்ட சிறந்த பயிற்சி மையமாக ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் மருத்துவம், பொறியியல், மற்றும் பவுண்டேஷன் படிப்புகளுக்கு தியாகிகளின் குழந்தைகளுக்கு 100% கல்வி கட்டணத் தள்ளுபடி உள்ளிட்டு, பயிற்சி கட்டணத்தில் 90 சதவீதம் வரை ஸ்காலர்ஷிப் வழங்கும் அதிரடி திட்டங்களை திருச்சியில் நடைபெற்ற விழாவில் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஆகாஷ் எஜூகேஷனல் நிறுவனத்தின் இணை இயக்குனர் கியூடு சஞ்சய் காந்தி, ஏரியா சேல்ஸ் ஹெட் சக்தி கணேஷ், கிளை தலைவர் குழந்தைவேல் ஆகியோர் இத்திட்டம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ”எதிர்வரும் 2024 கல்வியாண்டிற்கான புதிய அமர்வின் தொடக்க சலுகையாக மருத்துவம் மற்றும் பொறியாளர்கள் ஆகும் கனவோடு பயணிக்கும் மாணவர்களுக்கு 90 % வரையில் கல்வி கட்டணத்தில் தள்ளுபடியை ஆகாஷ் வழங்குகிறது. கூடுதலாக, தியாகிகள், இராணுவ வீரர்களின் பிள்ளைகள், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கான சிறப்பு தள்ளுபடிகளையும் வழங்குகிறது.
குறிப்பாக, எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது வழக்கமான பள்ளி சூழலோடு, பயிற்சி தேர்வுகளுக்கான முன்தயாரிப்பு பணிகளையும் இணையாக மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் ஆகாஷ் வழங்குகிறது.
இதுபோன்ற முயற்சிகளின் பலனாக இதுவரை 75000-க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். சமீபத்திய JEE மெயின்ஸ் 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வில் 41, 263 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். 1098 மாணவர்கள் 95 சதவீதமும், 939 மாணவர்கள் 99 மற்றும் அதற்கு மேற்பட்ட சதவீதத்தையும் பெற்றுள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த ரிஷி சேகர் சுக்லா 100% எட்டி உள்ளார். இதுதவிர ஆகாஷின் டிஜிட்டல் திட்டம் மாணவர்களுக்கு கற்றல் முறையில் ஒரு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்பதாக தெரிவித்தார்கள்.
இரா.சந்திரமோகன்.