அகில இந்திய அளவில் வெற்றியை வசமாக்கிய திருச்சி டாக்டர் !

இந்திய குடலியல் மற்றும் உட்பார்வை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (The Indian Association of Gastrointestinal Endo Surgeons – IAGES) அகில இந்திய தலைவராக, நம்ம திருச்சியைச் சேர்ந்த திருச்சி G. விஸ்வநாதன் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் Dr.K. கோவிந்தராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மும்பையில் நடைபெற்ற, IAGES சங்கத்தின் தேர்தலில் போட்டியிட்டு, மெச்சத்தக்க இந்த வெற்றியை தன்வசப்படுத்தியிருக்கிறார். திருச்சி மாவட்டத்திற்கான பெருமிதமாக மட்டுமின்றி, தமிழகத்துக்கான பெருமையாகவும் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. இப்பொறுப்பில், ஜுலை 2026 முதல் ஜூன் 2027 வரை செயல்படுவார்.

குடலியல் சார்ந்த துறையில், மருத்துவர்களுக்கு மேம்பட்ட பயிற்சி, அறிவியல் கருத்தரங்குகள், ஆராய்ச்சி ஊக்குவிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பரப்புதல் ஆகியவற்றின் மூலம் அறுவை சிகிச்சை துறையில் தரமான சேவையை உயர்த்துவதில் இந்த சங்கம் முக்கியப் பங்காற்றி வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.