சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டிய காயத்ரி ரகுராம் ! அடுத்து சிக்கும் அமர் பிரசாத்ரெட்டி !
சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டிய காயத்ரி !
திருச்சி சூரியா சிவா தன்னை பிஜேபி கட்சியிலிருந்து விடுவித்துக் கொள்வதாக மாநில தலைமைக்கு திருச்சி சூர்யா கடிதம் எழுதினார்… ஆனால்
திருச்சி சூர்யா சிவா- டெய்ஸி சரண் ஆடியோ விவகாரத்தில் மாநில பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டிருந்தார். அந்த ஆடியோ மட்டும் அவர் நீக்கத்திற்கு காரணம் அல்ல; தலைமைக்கு எதிராகவும் அண்ணாமலைக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் தான் அந்த நீக்கம் என்று பலரும் சொல்லி வந்தனர்.
குறிப்பாக , திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடன் ஓட்டலில் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் காயத்ரி ரகுராம். அதனால் சரியான நேரத்தில் தலைவர் அண்ணாமலை சரியான முடிவு எடுத்திருக்கிறார் என்று கூறியிருந்தார் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி.
இந்த நிலையில் அமர் பிரசாத்ரெட்டி மீது பரபரப்பு தகவல்கள் பரவி இருக்கும் நிலையில், திருடனைப் பாதுகாத்தால் நீயும் திருடன் தான். ஒரு ஊழல்வாதியைப் பாதுகாத்தால், நீயும் ஊழல்வாதிதான். கொலைகாரனை பாதுகாத்தால் நீயும் கொலைகாரன் தான். ஒரு பெண் வன்கொடுமை செய்பவரைப் பாதுகாத்தால் ? தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்விகளை எழுப்பி இருக்கிறார் காயத்ரி ரகுராம்.
ஹேப்பி மெய்ட்ஸ் இண்டியா என்கிற பெயரில் வீட்டு வேலைக்கு ஆள் அனுப்பி வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் பி.எல்.மோட்ஷா ராகினி. இவர் ஹேப்பி அண்ட் சாரிட்டி என்கிற பெயரில் பெண்கள் தொடர்பான நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்திருக்கிறார்.
இவர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் வர்ஷா, தீபக் என்கிற இருவர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் பாஜகவின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மூலம் வர்ஷாவும் தீபக்கும் தன்னை மிரட்டுகிறார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அப்போது குன்றத்தூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் சந்துரு . இவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அதே போல் விஜய் பாஸ்கரும் அமர் பிரசாத்ரெட்டியும் நெருங்கிய நட்பு நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதனால் அந்த புகார் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறார். காவல் நிலையத்தில் அலைந்து பார்த்து விட்டு கடைசியாக நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார் மோட்ஷா ராகினி. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வழக்கு போடப்பட்டிருக்கிறது.
மேலும் வர்ஷா, தீபக், அமர் பிரசாத் ரெட்டி மீது பாலியல் மற்றும் பண மோசடி வழக்கு பதிவு செய்ய ஆய்வாளர் சந்ருவுக்கு உத்தரவிட்டிருக்கிறார் காவல் துறை உயர் அதிகாரி. உடனே இந்த தகவலை அமர் பிரசாத் ரெட்டிக்கு சொல்லி இருக்கிறார் ஆய்வாளர் சந்துரு. தகவல் அண்ணாமலைக்கும் போயிருக்கிறது. அவர் உடனே அந்த காவலர் உயர் அதிகாரியை போனில் தொடர்பு கொண்டு மிரட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கும் காயத்ரி ரகுராம் மேற்கண்டகேள்விகளை எழுப்பி இருக்கிறார்.