ஜெகஜால கில்லாடி ஐ.ஏ.எஸ். க்கு  மீண்டும் வசூல் பதவி !  இது தான் திராவிட மாடலா ? ஐ.ஏ.எஸ் 15 டிரான்ஸ்பர் அக்கப்போர்…. 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கடந்த ஆட்சியில் பன்னீர் செல்வத்தின் பிடியில் இருந்த வீட்டு வசதி வாரிய துறையின் நகர் ஊரமைப்பு துறையிம் இயக்குனராக இருந்த கணேசன் ஐ.ஏ.எஸ். என்பவர் மீது ஆயிரம் கோடிகளுக்கு மேல் ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடமிருந்து  ஊழல் செய்ததாக பகீர் புகார்கள் கிளம்பிய நிலையில் மீண்டும் அவருக்கு நகர் ஊரமைப்பு திட்ட இயக்குனர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

சமீபத்தில்  வெளியான 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலில் தமிழ்நாடு சாலை மேம்பாடு திட்ட இயக்குனரான பி.கணேசன் என்பவரை தமிழ்நாடு நகர மற்றும் ஊரமைப்பு துறையின் இயக்குனராக பணி மாறுதல் செய்துள்ளனர். யார் இந்த கணேசன் இவர் மீது ஏன் இப்படி குற்றச்சாட்டுகள் அடுக்குகிறார்கள் என்று  கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் விரிவாக பேசினார்.

தீபாவளி வாழ்த்துகள்

” விருது நகர் மாவட்டம் அருப்புக் கோட்டையை அடுத்துள்ள நரிக்குடியை சேர்ந்தவர் கே.கணேசன். 2005 ம் ஆண்டு குரூப் 1. தேர்வில் அரசு அதிகாரியாக அரசுப் பணிக்கு வந்தார். 2005 பேட்சில் மொத்தம்,  91 நபர்களை க்ரூப் 1 பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு செய்தது. ஆனால் இந்த தேர்வு பட்டியலில் சுமார் 83 நபர்கள் அவர்களுடைய விடைத்தாள்களில் கொக்கு ,குருவி, ஜீசஸ், ஓம், இன்னும் சில குறியீடுகளை குறிப்பிட்டு ஆன்சர் ஷீட் மால் பிராக்டிஸ் செய்து வேலைக்கு வந்ததாக பகீர் புகார்கள் கிளம்பி நீதிமன்றம் வரை புகார் சென்றது.

உயர்  நீதிமன்றமும் , உச்ச நீதி மன்றமும் இந்தப் புகாரை உண்மை என்று சொல்லி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கச் சொல்லி உத்தரவிட்டது. பிறகு மாநில  அரசின் தலையீட்டால் 83 நபர்களது வாழ்க்கை காப்பாற்றப்பட்டது. இந்த 83 கில்லாடிகளில் முதன்மையான நபர் தான் கணேசன். இவருக்கு 2016 ல் தான் ஐ.ஏ.எஸ். அந்தஸ்து கிடைத்தது.  அதுவும் எக்ஸ் சி.எம் பன்னீர் செல்வம் உதவியுடன் கிடைத்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இவர் அரசுப் பணியில் இருந்த இடங்கள் எல்லாமே பசையுள்ள இடங்கள்தான். டாஸ்மாக் எம்.டி., டி.டி.சி.பி. எம்.டி, என கடந்த கால அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரிய துறையின் நிழல் அமைச்சர் இவர்தான்.

தேர்தல் நேரத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என்பதை கணித்து திமுகவிற்கு தேர்தல் நிதியாக சுமார் ”20 சி” வரை ஒட்ட வைத்துள்ளார் சொல்லப்படுகிறது. திமுக ஆட்சி அமைத்ததும் தமிழ்நாடு சாலை மேம்பாடு நிறுவனத்தின் பசையுள்ள பதவிக்கு வந்தவர் இப்பொழுது மீண்டும் கோடிகள் கொட்டும் டி.டி.சி.பி.க்கு ஆட்களை பிடித்து வந்துள்ளார்.

விருது நகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர்  என்பதோடு பன்னீர் செல்வத்தின் உறவுக்காரர்  என்பதால் பன்னீர் செல்வத்தை அப்பா , அப்பா என செல்லமாக அழைப்பதோடு, அவரை பார்க்கும் போதெல்லாம் சாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்து விடுவார். இதனால் இவருக்கு கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் எம்.டி.யாக நியமனம் செய்யப்பட்டார்.  பிறகு அங்கிருந்து பன்னீர் செல்வத்தின் ஆசியோடு நகர  ஊரமைப்பு துறை ( டி.டி.சி.பி) யின் திட்ட  இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த 10 ஆண்டு கால  அதிமுக ஆட்சியில்  டி.டி.சி.யின் இயக்குனராக இவர் பதவி வகித்தார்.

அங்கு இவர்தான் அமைச்சர் ஆல் இன் ஆல். இவரைக் கேட்காமல் ஒரு கோப்பு கூட நகராது. சென்னையை தாண்டி தமிழகம் முழுவதும் நீங்கள் ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றாலோ அல்லது ரியஸ் எஸ்டேட் துறையில் ஒரு இடத்தை விற்க / வாங்க வேண்டும் என்றாலோ இவர்களுடைய அனுமதியின்றி எதுவும் செய்ய முடியாது என்பதால் கோடிகளில் இங்கு லஞ்சம் புரளும் ஆதலால்தான் வீட்டு வசதி வாரிய துறையின் அமைச்சராக இருப்பவர் காட்டில் வைட்டமின் ”பா” மழை பொழியும். அதிமுகவில் பன்னீர் செல்வம்  நடத்திய தர்மயுத்தத்தின் பலனாக  அவருக்கு ஒதுக்கப்பட்டது துணை முதல்வர் பதவியோடு வசூலுக்காக ஒதுக்கப்பட்ட துறை தான் வீட்டு வசதி வாரிய துறை.

துறை ஒதுக்கீடு செய்த முதல் நாளே இன்னோவா காரில் நிறைய பெட்டியுடன் பன்னீர் வீட்டிற்குள் நுழைந்த கணேசன் அப்பா நான் உங்க உறவினர் இனிமேல் நான் எல்லாம் பார்த்துக் கொள்கிறேன் என்று ஐக்கியமானவர் அப்படியே வளர்ப்பு பிள்ளையை போல ஆகிவிட்டார். கிட்டத்தட்ட அதிமுக ஆட்சி முடியும் வரை பன்னீர் வீட்டு செல்லப்பிள்ளை இவர்தான். எந்த அளவிற்கு என்றால் காசாகிராண்ட் நிறுவனத்தில் பன்னீர் செல்வம் முதலீடு செய்ய திட்டம் வகுத்து கொடுத்தது வரை இவர் தான் ஆல் இன் ஆல்.

டி.டி.சி.பி.யை பொறுத்தவரை நிலத்திற்கோ, வீட்டுமனைகளைக்கோ ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அப்ரூவல் வாங்க வேண்டும் என்றால் சதுர அடிக்கு 25 ரூபாய் முதல் 39 ரூபாய் வரை லஞ்சமாக கொடுக்க வேண்டும். அந்தப் பணத்தில் 10 ரூபாய் கணேசணுக்கும், 25 ரூபாய் அமைச்சருக்கும் போய் சேரும். ஒவ்வொரு மனை பிரிவிற்கும் ஒரு கோப்பு எண் வைத்து தனியாக கையாள்வர். ஒரு பைல் முறையான அனுமதி பெற்று அரசு ஆனை வாங்க வேண்டும் என்றால் அந்த கோப்பில் உள்ள சதுர அடிகளை கணக்கிட்டு  ஒரு  துண்டு சீட்டில் கணேசன் ஐ.ஏ.எஸ் எழுதிக் கொடுப்பார். அந்த தொகையை அவருடைய புரோக்கர்களிடம் கொடுத்த பிறகே அரசாணை வெளியே வரும்.

இப்படிதான் கடந்த 8 ஆண்டுகளாக கணேசன் டி.டி.சி.பி.யில் கல்லா கட்டி வந்தார்.

ஜெகஜால கில்லாடி ஐ.ஏ.எஸ். க்கு மீண்டும் வசூல் பதவி
ஜெகஜால கில்லாடி ஐ.ஏ.எஸ். க்கு மீண்டும் வசூல் பதவி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதில் என்ன கொடுமை என்றால் ஒரு ரூபாய் கூட குறைக்க மாட்டார் கணேசன். கட்சிக் காரர்கள்  யாராவது மினிஸ்டர் சதுர அடிக்கு 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் தள்ளுபடி கேட்டால் கடும் கோபம் அடையும் கணேசன் பிசினஸ் நடக்கும் இடத்தில் இது போல பேரம் பேசாதீர்கள்  என கடிந்து கொள்வார். அதோடு அந்த கோப்புகளை கிடப்பில் போட்டு நாயாக அலைய விடுவார். அரசாங்கம் சட்டம் பதவி  என்பது கொள்ளையடிக்க லைசென்ஸ் கொடுத்தது போல நடந்து கொள்வார் கணேசன்.

ஒரு முதல்வர் ஆட்சியையும், கட்சியையும் திறம்பட நடத்துவதில் சில நிர்வாக சிக்கல்கள் பொருளாதார சிக்கல்கள் இருக்கும் அதற்க்காக சில நியாமான வசூல்கள் நடத்துவர் ஆனால் அரசும் சட்டமும் கொள்ளையடிக்கத்தான்  உருவாக்கியது போல நினைத்துக் கொண்டு ஜகஜால சித்து வேலையும்  ஐ.ஏ.எஸ். தான் இந்த கணேசன்.

இத்தனை நடந்தும் இதுவரை கணேசன் குறித்து இதுவரை மீடியாக்களில் ஒரு தீப்பெட்டி சைஸ் அளவிற்கு கூட கணேசன் குறித்து செய்திகள் பிரசுரம் ஆகவில்லை என்றால் ஒட்டு மொத்த மீடியாக்களில் வேலை செய்யும் பதவிகளுக்கு தகுந்த மாதிரி கீழ் இருந்து உயர் பதவிகளில் இருப்பவர்களை வரை அனைவருக்கும் மாதம் மாதம் கணேசன் சார்பில் அமைக்கப்பட்ட தனியார்  பி.ஆர்.ஓ ஒருவர் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரங்கள் வரை வைட்டமின் ”பா ” கொடுப்பார்.

இது எப்பாடி என்றால் கணேசன் ஒரு மிகப்பெரிய காட்டு யாணையை வேட்டையாடி முழு யானையையும் தின்று விட்டு காக்காவின் லெக் பீஸ் எலும்பு எப்படி இருக்கும் அந்த அளவில் தான் எச்சி எலும்பு துண்டுகளை விட்டெறிவார். பிரிண்ட் மீடியாக்களில் உள்ள சுமார் 200 நபர்கள் கணேசன் ஆட்கள். இதில் பலருக்கு எதற்க்காக இந்தப் பணம் கொடுக்கிறார்கள். கணேசன் யார் என்றே தெரியாமல் கவரும் ஸ்வீட் பாக்ஸும்  வருகிறது என்று கப் சிப் என்றிருப்பர். (இவர்களை இனி அடுத்தடுத்து தனியாக எழுத இருக்கிறோம் ).

இப்படி அடித்த பணத்தில் கணேசன் மதுபான ஆலையில் முதலீடு, ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு, சென்னை இ.சி.ஆரில் முதலீடு, துபாயில் முதலீடு , லண்டனில் முதலீடு செய்துள்ளார். இவரைப் போய் திமுக அரசு நியமனம் செய்கிறது என்றால் கடந்த 10 ஆண்டுகளாக  அதிமுக ஆட்சியில்  பழிவாங்கப்பட்ட அதிகாரிகள் எல்லாம் கொந்தளிக்க மாட்டார்களா ?

ஓப்பனாக துண்டு சீட்டில் கோடி கோடியாக லஞ்சம் வாங்கி அமைச்சருக்கும், முதல்வருக்கும் கொடுப்பது தான் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பணித் திறமை என்று சமூக நீதி பேசும் திராவிட மாடல் ஆட்சி விரும்புகிறதா என்று தெரியவில்லை. கணேசன் போன்ற மோசமான அதிகாரிகளால் ஐ.ஏ.எஸ். பட்டமே அசிங்கப்பட்டு போயுள்ளது. இனி மேலும் கணேசன் போன்றவர்களை ஊக்கு வித்தால்  அவர்கள் செய்யும் ஊழல்கள் இனி ஒவ்வொன்றாக வெளியே விடத் தயாராக உள்ளோம் ” என்றார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

முதல்வரின் கவனத்திற்கு

லஞ்சம் வாங்குவது தவறு  இலை மறைவாக காய் மறைவாக குற்ற உணர்வோடு வாங்கும் அதிகாரிகள் பலர் கணேசனின் ஓப்பன் வசூலால் இப்போது மிக குஷியில் இருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் நாகர் கோயிலை சேர்ந்த கன்னியாஸ்த்திரி ஒருவர் அவர் நடத்தும் இலவச பள்ளி 8 ஏக்கர் நிலத்தில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி வாங்க பன்னீர் செல்வத்தை அனுகினார். அவர் கணேசனிடம் அனுப்பினார். கணேசன்  அந்த கன்னியாஸ்திரியிடம் கறாராக சதுர அடிக்கு 15 ரூபாய் குறைத்து 20 ரூபாய் கணக்குப் போட்டு 8 ஏக்கருக்கும் சுமார் 2 ”சி” மேல் லஞ்சமாக வசூல் செய்தார்.

கண்ணீர் விட்டுக் கொண்டே லஞ்சப் பணத்தை கொடுத்த கன்னியாஸ்திரி பன்னீர் செல்வத்தின்   குடும்பத்தின் மீது சாபம் விட்டார்.  இதே போல  காஞ்சி புரத்தை சேர்ந்த சிவாச்சாரியார் ஒருவரது 2 ஏக்கர் இடத்திற்கு அனுமதி கொடுக்க வசூல். இப்படி அறத்திற்கு புறம்பாக  பல உண்மை சம்பவங்கள் உண்டு. அவர்கள் அனைவரும் விட்ட சாபம்தான் இன்று பன்னீர் செல்வம் குடும்ப வாழ்வில் நிம்மதி இல்லாமல், அரசியலில் ஓரம் கட்டப்பட்டு தத்தளித்து இருக்கிறார்.

கணேசன் போன்ற ஆட்களை வைத்தால் அவர்கள் லஞ்சம் யாரிடம் வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும் என்று வரைமுறையின்றி வாங்கி உங்களது குடும்பத்திற்கும் சாபங்களையும்,பாவங்களையும் வாங்கிக் கொடுப்பார். உங்களுக்கு வேண்டுமானால் இதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால்  உங்களுடைய துனைவியார் திருமதி துர்காவிற்கும், மருமகன் சபரீசனுக்கும் இதில் மிகுந்த நம்பிக்கை உண்டு. கணேசன் போன்ற அதிகாரிகளை ஒரே வரியில் சொல்வது என்றால் மிகக் குரூரமானவர்கள்.

இவர்களை மாதிரியான அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மக்களின் வெறுப்பை  சந்திக்க நேரிடும்  அது வரும் எம்.பி. தேர்தலில் பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.

– அஜித் குமார்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.