திருவானைக்காவலில் ஒரே வீட்டில் தாய், மகன் , பேரன் உள்ளிட்ட 3 பேர் தற்கொலை !

0

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கொண்டையம்பட்டி கிராமம் வெள்ளாளர் தெரு பின்புறம் உள்ள அகிலா நகரில் வசித்து வந்த லட்சுமணன் மகன் கார்த்திகேயன் வயது 35 என்பவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியவாறும் இடது கை மணிக்கட்டு நரம்பினை துண்டித்து இரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தார்.

கார்த்திகேயனின் தாயார் வசந்தா வயது 68 கழுத்தில் சேலையால் சுருக்கிடப்பட்டு பீரோவின் கைப்பிடியில் தொங்கிய படியும்
கார்த்திகேயனின் மகன் சுவாமிநாதன் வயது 8 கைலியால் கழுத்தில் சுற்றப்பட்டு அலமாரி கைப்பிடியில் தொங்கிய படியும் இறந்து கிடந்தனர்.

இறந்து போன கார்த்திகேயனின் மனைவி வசந்தபிரியா திருச்சியில் உள்ள வோல்ஸ்வேகன் கார் ஷோரூமில் பணி புரிந்து வந்துள்ளார். பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில் கதவு உள் பக்கம் தாள் இடப்பட்டிருப்பதை பார்த்து எட்டிப் பார்த்ததில் மேற்படி சம்பவம் அவருக்கு தெரியவந்துள்ளது.

திருவானைக்காவலில் ஒரே வீட்டில் தாய், மகன் , பேரன் உள்ளிட்ட 3 பேர் தற்கொலை !
திருவானைக்காவலில் ஒரே வீட்டில் தாய், மகன் , பேரன் உள்ளிட்ட 3 பேர் தற்கொலை !

விசாரணையில் இறந்து போன கார்த்திகேயன் துபாயில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் மூன்று நாட்களுக்கு முன்பாக தான் தாய்நாடு திரும்பியதாகவும் தெரியவந்தது இறப்பிற்கான காரணம் இதுவரை ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. இறப்பிற்கான காரணம் குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.