இது எப்படி இருக்கு???

0

துஷ்ட சக்திகள் நீங்க… சிறப்பு அர்ச்சனை .. இது எப்படி இருக்கு???

 

  • பேர். ..சொல்லுங்கோ….

 

2 dhanalakshmi joseph
  • மஸ்தான் … செஞ்சி மஸ்தான்…

 

  • தோப்பனார்..பேர் சொல்லுங்கோ….

 

- Advertisement -

- Advertisement -

  • காஜா பாஷா…

 

  • யார் பேருக்கு அர்ச்சனை அவா பேர் சொல்லுங்கோ…

 

  • ஸ்டாலின்….முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…

 

  • ஸ்டாலின் நாம்தாசிய….

 

  • துர்கா ஸ்டாலின் நாம்தாசிய…

 

  • மஸ்தான் நாம்தாசிய…

 

என்று சமஸ்கிருத அர்ச்சனை தொடர்ந்த இடம் காரமடை ரங்கநாதர் கோயில்…

என்ன ஒரே குழப்பமா இருக்கா…..

 

4 bismi svs

ஈரோடு மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலந்து கொண்டு பணிகளை ஆய்வு செய்தார்.

காரமடை ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம்
காரமடை ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம்

பின்னர் காரமடை அருகே உள்ள மாதேஸ்வரன் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவில் கலந்து கொண்டார். அமைச்சரை சந்தித்த, திமுக நிர்வாகிகள் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காரமடை என்ற இடத்தில் எழுந்தருளியுள்ள அரங்கநாதர் கோயில் குறித்து சிறப்பு அம்சங்களை தெரிவித்துள்ளனர்.

காரமடை அரங்கநாதர் கோவில் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மகாவிஷ்ணு சுயம்புவாக எழுந்தருளிய கோயில்.
மூலவராக அரங்கநாதர் வீற்றிருக்கிறார் . இந்தக் கோயிலில் வீர ஆஞ்சநேயரும் எழுந்தருளி உள்ளார் . ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் காணப்படும் இந்த கோவிலில் திருமலை நாயக்கர் மன்னன் நோய் தீங்கி நீங்கியதாக வரலாறு உண்டு.

தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலில் அர்ச்சனை செய்து வழிபட்டால் துஷ்ட சக்திகள் நீங்கும் என்பது இறை நம்பிக்கை என்று காரமடை அரங்கநாதர் கோவில் சிறப்புகளை எடுத்துக் கூறினர். இதைக் கேட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் காரமடை அரங்கநாதர் கோயிலுக்கு விரைந்து சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக அவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தார் பெயர்களில் அர்ச்சனை செய்ததோடு தனது பேருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்து கொண்டார் . இதை கண்ட பக்தர்கள் திமுகவினர் கடவுள் மறுப்பு கொள்கை, கருப்பு சட்டை என்றெல்லாம் வெளியில் பேசி வருகின்றனர்.
ஆனால் துர்கா ஸ்டாலின் ஒரு கோயிலையும் விட்டு வைக்காமல் வலம் வருகிறார்.

காரமடை ரெங்கநாதர் கோவில் வீரஆஞ்சநேயர் சன்னதி
காரமடை ரெங்கநாதர் கோவில் வீரஆஞ்சநேயர் சன்னதி

அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ,எம்பிக்கள் இறை வழிபாட்டில் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது கோவில், பூஜை, புனஸ்காரங்களுக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அதே அளவில் தற்போதும் பூஜை புனஸ்காரங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் வழி அர்ச்சனை என்று வெளியில் பேசினாலும் தற்போது கோவிலில் நடந்த அர்ச்சனையில் சமஸ்கிருத வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழிபடும் காட்சி
அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழிபடும் காட்சி

இந்த கோயிலின் சிறப்புகள் குறித்து அறிந்து தான் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தார் பேரில் அர்ச்சனை செய்து உள்ளார் என்று கமெண்ட் செய்தனர் அமைச்சர் செஞ்சி மஸ்தானோ,மத நல்லிணக்கத்தை வலியுறுத்தவே அர்ச்சனையில் பங்கேற்றேன் என்றார்.

இது எப்படி இருக்கு

– அரியலூர் சட்டநாதன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.