அங்குசம் பார்வையில் ‘அமரம்’
தயாரிப்பு: திவ்ய ஷேத்ரா பிலிம்ஸ் நிர்மலா ராஜன், சி.ஆர்.ராஜன், தமிழ்நாடு ரிலீஸ்: டிரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன், டைரக்டர்: திருஅருள் கிருஷ்ணா, ஆர்டிஸ்ட்: ராஜன் தேஜஸ்வர், ஐரா அகர்வால், ஜார்ஜ் மரியன், நாகிநீடு, கல்கி ராஜா, சாய் தீனா, சுரேஷ் மேனன், ஹரிஷ் பெராடி, ஒளிப்பதிவு: பரத் குமார், இசை: மிக்கி ஜே.மேயர், எடிட்டிங்: ஸ்ரீராமர், ஸ்டண்ட்: மிராக்கிள் மைக்கேல், பிஆர்ஓ: எஸ்-2 சதீஷ் & புவன் செல்வராஜ்.
படத்தின் முதல் சீன் அதிகாலை அஞ்சு மணிக்கு சென்னைகோயம்பேடு மார்க்கெட்ல ஆரம்பிக்குது. பொழுது விடிந்ததும் ஹீரோ ராஜன் தேஜஸ்வரும் ஜார்ஜ் மரியனும் ஒரு கட்டைப் பையில் கோடாரி மாதிரி ஒண்ணை எடுத்துக்கிட்டு ஒரு காலேஜுக்குள்ள புகுந்து இளம் ஜோடியை போட்டுத் தள்ளுகிறார் ஹீரோ. அப்புறம் மேற்குத் தொடர்ச்சி மலையை யொட்டி எத்தனை கிராமங்கள் இருக்கு, கிழக்குத் தொடர்ச்சி மலையை யொட்டி எத்தனை கிராமங்கள் இருக்குன்னு வரலாற்றுக் குறிப்புகள் சொல்றரு டைரக்டர். அப்புறம் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட் தோழரை ( சுரேஷ் மேனன்) போட்டுத் தள்ளுகிறார் ஹீரோ. அந்த தோழரின் மகள் தான் ஹீரோயின் ஐரா அகர்வால்.
இவரு இன்னொரு பையனை லவ் பண்றாரு. அதே ஊரில் பெரிய மனுஷன் சாய் தீனா. ஹீரோவுக்கு காசு கொடுத்து கொலை பண்ணச் சொல்றாரு. இவரு என்னமாதிரியான கேரக்டர்னு விளங்கவேயில்லை. அப்புறம் வனத்துறையினர் அந்த கிராம மக்களை டார்ச்சர் பண்ணுகிறார்கள். அப்புறம் ஹீரோ சிலரை போட்டுத் தள்ளுகிறார். அப்புறம் ஹீரோயின் லவ்வரை விட்டு விட்டு ஹீரோவுடன் வந்துவிடுகிறார். இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தா…. கதை என்னய்யா ன்னு டென்ஷனாகாதீகப்பு. இப்படியே பிட்டு பிட்டு மேட்டர்களை மட்டுமே வச்சு முழுப் படத்தையும் எடுத்துருக்காரு டைரக்டர்.
கேமரா கோணங்களில் நேர்த்தி, காட்சியில் அழகியல் இருந்தா போதும், சினிமாவாகிரும்னு எவனோ தப்பான ஆளு டைரக்டருக்கு ஐடியா கொடுத்திருப்பான் போல. படத்தில் பாதி நேரம் ஹீரோ பேசவே மாட்டேங்குறாரு. ஃபைட் சீன்ல பறந்து பறந்து அடிக்கிறாரு…. சகட்டுக்கு எல்லோரையும் போட்டுத் தள்ளுகிறார். ஹீரோயின் ஐரா அகர்வால் கேவிக் கேவி அழுகிறார்…திடீர்னு சீறுகிறார்… கல்கி ராஜா, நாகி நீடு இவர்கள் தவிர இன்னும் சிலர் படத்தில் இருக்கிறார்கள். சாரி டைரக்டரே…. இதுக்கு மேல ஒண்ணும் எழுதுறதுக்கில்லை.
அங்குசம் பார்வையில் ‘அமரம்’ 32/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.