எடப்பாடி – செங்கோட்டையன் – அண்ணாமலை : அமித்ஷாவின் அரசியல் ஆடுபுலி ஆட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஸ்ஷ்…ப்பா இப்பவே கண்ண கட்டுதே… இன்னும் போக போக உஷ்ணம் ஜாஸ்தியாதான் ஆகும் போலயே”னு வியர்த்து விறுவிறுக்க வந்தமர்ந்தார் விசாகன்.

“அட, ஆமா விசாகன் இந்த கோடை சுட்டெரிச்சிடும் போலயே, பாவம் தமிழ்நாட்டு ஜனங்க என்ன பாடுபட போகுதுங்களோ… ”னு உச் கொட்டியபடியே, உரையாடலை தொடர்ந்தார் அதியன்.

SVS வெறும் பிராண்ட் அல்ல - 4 தலைமுறை கடந்த பாரம்பரிய பிணைப்பு

”அட, நீங்க வேற. நான் வெயிலையா சொன்னேன். தமிழகம் பார்க்காத வெயிலா, மழையா? இதுவரை யாருமே எதிர்பார்க்காத அரசியல் ட்விஸ்ட்ட பத்தி, அமித்ஷா ஆட்டத்தை பத்தில்ல நான் சொன்னேன்”

“மோடி இருக்கிற இடம் தெரியாம இருக்கிறாரு. அவருக்கு ஏதோ, கட்டாய ஓய்வுனு வேற செய்தி அடிபடுது. தலைவனுக்கே இந்த கதியானு, விரக்தியில மோடியின் சிஷ்யர் அண்ணாமலையும் கிளம்ப போறதா கேள்விபட்டேன்.?”

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

சோலிய முடிச்சு விட்டாய்ங்க ... போங்க !
சோலிய முடிச்சு விட்டாய்ங்க … போங்க !

“ஆமா, அதியன். ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?” – னு, சிவாஜி கணேசன் பாட்டுதான் நினைவுக்கு வருது. ஒரு பக்கம் தலைகால் புரியாம மோடி காட்டுன ஆட்டம். இன்னொரு பக்கம் தமிழகத்துல அண்ணாமலை கொடுத்த அலப்பறையெல்லாம் முடியலடா சாமி ரகம்தான். எடப்பாடிய தற்குறினு பேசுனதுல இருந்து, முதுகெலும்பில்லாத ஆளுனும் அதிமுகவும் பிஜேபியும் ஒன்னா சேர்ந்தா அரசியல்ல விட்டே விலகிடுவேனு அண்ணாமலை போட்ட சபதம் கூடிய சீக்கிரம் பலிச்சிரும்னுதான் பேசிக்கிறாங்க.

அதுசரி, விசாகன். டெல்லிக்கு போர ப்ளைட்டெல்லாம் ஹவுஸ்ஃபுல்லா போயிட்டிருக்குனு கேள்விபட்டேன்.  தமிழகத்திலிருந்து வரிசைகட்டி சில பல தலைவர்களெல்லாம் அட்டணென்ஸ் போட்டுட்டு வர்றதா தகவல் வந்துட்டிருக்கே. என்ன வடை பாயாசத்தோட செம விருந்துதான் போல?

வடை பாயாசமா, வெறும் வாழை இலைதான் போட்டாய்ங்க ...
வடை பாயாசமா, வெறும் வாழை இலைதான் போட்டாய்ங்க …

“போட்டது, விருந்தா மருந்தானு கூடிய சீக்கிரம் தெரிஞ்சிடும் அதியன். இப்போ கூப்பிட்டு வெறும் வாழை இலை தான் போட்டுருக்காங்க. அவங்க பெர்ஃபாமென்ஸ் வச்சிதான், பாய்சனா, பாயாசமானு அமித்ஷாஜி முடிவெடுப்பாரு போல. தமிழ்நாட்டுல எப்படி போட்டாலும் பவுண்டரி பக்கம் விளாசி தள்ளிடறானுங்களேனு அமித்ஷாஜி படு அப்செட்டாம். ஆட்டுத்தாடினு விமர்சனம் செஞ்ச தமிழகத்துல, அந்த ஆட்டுத்தாடிய வச்சே ஆட்டிப்படைச்சிடலாம்னு போட்ட கணக்கும் … ஆட்டுக்குட்டியோட அட்றாசிட்டியும் … ஒன்னும் கதைக்கு ஆகலைனுதான் அடுத்த கட்ட அஸ்திரத்தை எடுத்திருக்காரு அமித்ஷா-ஜி.”

”அது சரி, அப்போ ”டார்கெட் – தமிழ்நாடு” – னு சொல்லுங்க?”

கண்டிப்பா. திமுக-வ பலவீனப்படுத்துறதுக்கு என்னெல்லாம் வழியிருக்கோ, அது எம்புட்டு கோடி செலவானாலும் செஞ்சே தீரதுனு முடிவாம். முதல் கட்டமா, 2026 சட்டமன்றத் தேர்தல மனசுல வச்சி, திமுகவுக்கு எதிரான மனநிலையில இருக்கிற சில்லறை கட்சிகள் வரையில் ஒன்னா சேர்த்து கூட்டாஞ்சோறு ஆக்கித் திங்கிறதுனு தேடி தேடி ஆள பிடிச்சிட்டு இருக்காங்களாம். இப்போதைக்கு அதிமுக-ங்கிற குதிரைய வச்சி பயணம் போலானு பிளானாம்.”

“ஆமை புகுந்தவீடும். அமீன நுழைஞ்ச வீடும் உருப்பட்டதா சரித்திரம் இல்லைனு சொல்லுவாங்க. அதுமாதிரிதான், மோடியோட ராசி. என்னைக்கு ரெண்டு பேரு தலையிலயும் கைய வச்சாரோ, அன்னிக்கு பிடிச்ச சனிதான். கட்சிய ஒரு வழி பன்னாம ஓயமாட்டாங்க போலயே… ஆல்ரெடி அதிமுகவே டப்பா டான்ஸ் ஆடிட்டு இருக்கு. ஏழெட்டு பிரிவா பிரிஞ்சி கிடக்கு. சின்னம் கிடைக்குமா? கட்சிக்கு யாரு தலைமை? இந்த லட்சணத்துல அதிமுகவ வச்சி குதிரை சவாரியா? ”

அமித்ஷா-பழனிச்சாமி“அதுதான் மேட்டரே. மார்ச்-25 அமித்ஷாவ பார்க்க போனப்ப, எடப்பாடி கூட, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, சி.வி. சண்முகம், தம்பிதுரை எம்பினு படை சகிதம் போயிருக்காரு. அவங்கள வச்சி ஒருமணி நேரம் பேசினவரு. கூட வந்தவங்கள வெளிய போக சொல்லிட்டு, அமித்ஷாஜி கூட ஒன் டூ ஒன்னா  50 நிமிஷம் பேசியிருக்காரு. அதுக்கு மறுநாளே, தமிழகத்தில் 2026 இல் அதிமுகவுடன் கூட்டணினு அமித்ஷா ட்வீட் போட்டாரு. அதோட நிக்கல, ரெண்டு நாள் கேப்புல, மார்ச்-28 அன்னைக்கு சத்தமில்லாம கே.ஏ. செங்கோட்டையனும் டெல்லிக்கு பறந்திருக்காரு. முதல்ல, மாமிய பார்த்துட்டு அப்புறம் ஜி-ய பார்த்திருக்காரு. ஜி-னா மோடிஜி இல்ல. பிஜேபிய ஹோல்சேலா பர்சேஸ் பன்னி வச்சிருக்க அமித்ஷா – ஜி.”

”ஆமா, செங்கோட்டையன் எதுக்கு போனாரு? இ.பி.எஸ்.ஐ பார்த்த கையோட, ஓ.பி.எஸ்.ஸ பார்த்தாகூட லாஜிக் இருக்குனு சொல்லலாம். செங்கோட்டையனே அரசியல் எதிர்காலம் இல்லாம, அதிருப்தியில வெளிய வந்துட்டாரு. அவர எதுக்கு கூப்பிட்டாங்களாம்.”

என்ன மாமி, இதெல்லாம்?
என்ன மாமி, இதெல்லாம்?

“இங்கதான் ராஜதந்திரியோட, சாணக்கியத்தனமே அடங்கியிருக்கு. டெல்லியில கொடுத்த சிக்னல்தான், செங்கோட்டையன் எடப்பாடியோட முரண்டு பிடிச்சதுக்கு பின்னணினு ஒரு பேச்சு. அடுத்து, அதிமுகவுல இருந்து பிரிஞ்சி போன சில்லுகளை எல்லாம் ஒன்னா சேர்த்து எப்படியும் ஒட்ட வச்சிடனும்னு அமித்ஷாஜியோட மாஸ்டர் பிளான். அதெல்லாம் ரொம்ப தப்புங்க. இதெல்லாம் சரிபட்டு வராதுங்கனு விருட்டுனு கிளம்பிட்டாராம் எடப்பாடியார்.”

“என்ன விசாகன் சொல்ற. எடப்பாடியார் அவ்ளோ கெத்து காட்டுறாரா?”

“ஆமா, அதியன். அதுதான் டிவிஸ்ட்டே. எடப்பாடி ரொம்பவே தெளிவா இருக்கிறாராம். ஒன்றுபட்ட அதிமுகங்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. கட்சிக்கு யார் வேணாலும் உரிமை கொண்டாடட்டும். ஒன்னுல ரெண்டு பார்த்துடலாம். ஒருவேளை எலெக்ஷன் கமிஷன வச்சி ரெட்ட இலைக்கு ஆப்பு வச்சாலும் தனி சின்னத்துல நின்னு ஜெயிச்சி காட்டி நம்ம பலத்த நிரூபிச்சிறனும்னு பிடிப்பா இருக்காராம்.”

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

“தனி சின்னமா. எனக்கு தெரிஞ்சி 1973 இல இருந்து அதிமுகனா ரெட்ட இலைனுதான் மக்கள் மனசுல பதிஞ்சிருக்கு. முரட்டு பக்தர்கள் நிறஞ்ச கட்சியாச்சே. 1989-ல இதே மாதிரி பஞ்சாயத்து வந்தப்போ, ஜெ-ஜானகி அணினு ரெண்டா பிரிஞ்சி, இரட்டைப்புறா, சேவல் சின்னம்னு தனி சின்னத்துல போட்டி போட்டு மண்ண கவ்வி. மீண்டும் பழையபடி, ரெட்ட இலைக்கு திரும்புனதுதானே வரலாறு. 1991-ல ஜெ-வ முதலமைச்சர் அரியாசனத்துல ஒக்கார வச்சதும் அந்த சின்னம்தானே. அன்னிக்கு தொடங்கி, 2016-வது வருசம் டிசம்பர் 5-ஆம் தேதி அந்தம்மா சாகுற வரைக்கும் அந்த கட்சியோட அடையாளமே ரெட்டலைதானே? ரெட்டல இல்லாம எடப்பாடி ஜெயிச்சிற முடியுமா?”

அதிமுக சின்னம்

அதிமுக சின்னம்

”தனிச்சின்னத்துல போட்டி போடுற முடிவ இன்னிக்கு இல்ல, ஈரோடு இடைத்தேர்தல் வந்தப்போவே எடப்பாடி முடிவு பன்னுனதுதான். ரெண்டு பேருமே ரெட்டலைக்கு போட்டி போட்டதால, ரெண்டு பேருக்கும் ரெட்டல கிடைக்காதுனு ஒரு நிலமை வந்துச்சி. அப்பவே, தன்னோட சகாக்களை கூட்டி பேசி, அப்படி ஒரு நிலமை வந்த “புல்லட்” சின்னத்துல போட்டியிடுறதுனு சின்னத்தையும் அப்பவே முடிவும் பன்னிட்டாரு. பிறகு, ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளரை திரும்ப பெற்றதால, அதுக்கு அவசியம் இல்லாம போச்சு. இப்போ, பழைய பிளானை தூசு தட்டுறாரு எடப்பாடி.”

“சரி, பாஜகவோட பி- பிளான் என்ன விசாகன்.?”

“ வேறென்ன, செங்கோட்டையன வச்சி ஆப்ஷன் –”பி”க்கு முயற்சி செய்றாங்க.”

“செங்கோட்டையனுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கா என்ன? உன்னவிட நான் தான் சீனியரு. உனக்கு முன்னாடியே எம்.எல்.ஏ. ஆனவனு அவரதான் விளாசி தள்ளிட்டாரே எடப்பாடி. இப்ப எப்படி?”

“அப்படி சொல்லிற முடியாது. போன, பிப்.9-ம் தேதி கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடர்பா விவசாய அமைப்புகள் பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்துனப்ப, தன்னை மதிக்கலனு விசனப்பட்டு வந்தவருதான். அப்புறம் அவரு வீட்டுக்கு பாதுகாப்பெல்லாம் கேட்காமலே கிடைச்சது. ஓ.பி.எஸ்.க்கு இருக்கிற ஆதரவ விட, செங்கோட்டையனுக்கு இருக்கிற ஸ்ட்ரெண்த் ஜாஸ்தினுதான் நோட் இருக்குதாம். அதனாலதான் அவர வச்சி அடுத்த காய நகர்த்தியிருக்கு டெல்லி. கூடிய சீக்கிரம் பாருங்க, விஜய்க்கு கொடுத்த மாதிரி, செங்கோட்டையனுக்கும் ஒய்-பிரிவு பாதுகாப்ப கொடுக்கிறாங்களா, இல்லையானு”

செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

”என்ன விசாகன் சொல்ற? செங்கோட்டையனை வச்சி, அதிமுக கோட்டைய தகர்க்க போறாங்களா? கட்சி யாருக்கு சொந்தம்? ரெட்டலை யாருக்கு சொந்தம்? யாரு பொதுச்செயலாளரு?னு வழக்கே இன்னும் ஓயல. அதுக்குள்ள இப்படி ஒரு பஞ்சாயத்தா?

ஆமா, அதியன். ஜெ. இறந்தாங்க. கட்சிக்குள்ள பிளவு உண்டாச்சு. ஒ.பி.எஸ். முதல்வர் ஆனாரு. அப்புறம் ராஜினாமா செஞ்சாரு. சசிகலா உள்ள வந்தாங்க. எடப்பாடி முதல்வர் ஆனாரு. ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்துனாரு. அப்புறம் சமாதானம் ஆனாங்க. 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல சசிகலா அணியும் ஓ.பி.எஸ். அணியும் ரெட்ட இலைக்கு மல்லுகட்ட. சின்னத்தோட, அதிமுக பெயரையே தேர்தல் ஆணையம் முடக்குச்சி. அப்புறம் ஒ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ்ஸும் ஒன்னா சேர்ந்து சசிகலா குருப்புக்கு எதிரா மல்லுக்கட்டி ரெட்டலை சின்னத்தையும் கட்சியோட பெயரையும் மீட்டெடுத்தாங்க.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அடுத்து, ஒற்றைத்தலைமைனு கோஷம் வந்துச்சு. 2022 ஜூலை – 11 அன்னைக்கு நடந்த கட்சியோட பொதுக்குழுவுல எடப்பாடியார் பொதுச்செயலரா தேர்வு செய்யப்பட்டாரு. ஓ.பி.எஸ்., வைத்தியலிங்கம் , மனோஜ் பாண்டியன கட்சியோட அடிப்படை பொறுப்பில இருந்தே நீக்குறதா தீர்மானம் போட்டு அதிர வச்சாங்க.

இந்த பொதுக்குழு முடிவுக்கு எதிரா, உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் அடுத்தடுத்து ஓ.பி.எஸ் தரப்பு வழக்கு போட்டாங்க. ஓ.பி.எஸ். தரப்பு போட்ட எல்லா வழக்குகளையும் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடைசியில கட்சி கரை வேட்டி கூட கட்ட முடியாத அவலத்துக்கு தள்ளப்பட்டாரு ஓ.பி.எஸ். உச்ச நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு இன்னும் ஓயாமல் இழுத்துகிட்டே இருக்கு. வழக்குகள் முடியும் வரைக்கும் அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாதுனும்; தேர்தல் ஆணையம் நடத்துற விசாரணைக்கே தடை விதிக்கனும்லாம் கூட கேசு போட்டாங்க. இதுல, தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும்னுதா குழப்பமா இருக்கு. இப்போ வரைக்கும் எடப்பாடி தரப்பதான் அவங்க அங்கீகரிச்சுருக்காங்க. அதுல எந்த மாற்றமும் வராதுனுதான் சொல்றாங்க.

அதுக்குத்தான், இப்போ செங்கோட்டையன்ங்கிற துருப்புச்சீட்ட எடுத்திருக்காங்க. கட்சியை கைப்பற்றி, செங்கோட்டையன்கிட்ட கொடுக்கிறதுக்குத்தான் ஒய்.பிரிவு பாதுகாப்பு. அமித்ஷாவுக்கே டஃப் கொடுக்கிற மாதிரி, செங்கோட்டையன அசைச்சி பாக்குற முடிவுக்கும் வந்துட்டாராம் எடப்பாடி. இதுல டிவிஸ்ட் என்னன்னா? செங்கோட்டையன கட்சிய விட்டு நீக்கிறது மூலமா அமித்ஷாவுக்கு செக் வைக்க எடப்பாடி பிளான் போடுறாராம். முடிஞ்ச வரைக்கும் ரெட்ட இலைக்கு மல்லுகட்டுறது. முடியாத பட்சத்துக்கு, “புல்லட்டு”னு எடப்பாடி கணக்கு.

இவிங்கள நம்புனதுக்கு இதுவும் வேணும் ... இன்னமும் வேணும் ...
இவிங்கள நம்புனதுக்கு இதுவும் வேணும் … இன்னமும் வேணும் …

அதுசரி. அண்ணாமலைக்கு இதுல என்ன ரோல்?

இந்த விறுவிறுப்பான ஆட்டத்துல, அவருதான் ஜோக்கரே. எல்லாரும் அவர அமித்ஷா ஆளுனு நினைச்சிட்டிருக்காங்க. அவரு மோடியோட ஆளு. மோடி மாதிரி ஆகிடனும்னு போட்ட கணக்கெல்லாம் தப்பாகி, தவிச்சி கிடக்கிறாரு. மோடிக்கே இந்த நிலைமையானு விரக்தியில, அவரா கட்சியவிட்டு போகப்போறாரா? இல்ல, அமித்ஷாஜி தூக்கிப்போட போறாரானுதான்னுதான் கட்சிக்குள்ளேயே பெட் கட்டிகிட்டிருக்காங்க.

 

—  விசாகன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.