IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது – தொடர் 1

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வான்கடே ஸ்டேடியம் ரசிகர்களால் நிரம்பி வழிகிறது. இன்றைய மும்பை, பம்பாயாக இருந்த 1978 டிசம்பர் மாதம். இந்திய கிரிக்கெட்டில் பம்பாய் ஆட்டக்காரர்களுக்கு ஸ்பெஷல் இடம் உண்டு. அதுவும் சொந்த கிரவுண்டைச் சேர்ந்த சுனில் கவாஸ்கர் கேப்டனாக ஆடும் முதல் போட்டி.

ஆறு  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மேட்ச்.  கூட்டத்தின் ஆரவாரம் அதிகமாக இருந்தது. இந்திய அணியை எதிர்த்து ஆடுவது வெஸ்ட் இன்டீஸ் அணி. அதனால் எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிகம்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

வெஸ்ட் இன்டீஸ் அணியினர் ஃபீல்டிங் செய்ய களமிறங்குகிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன் 1975ல் முதல் உலகக் கோப்பையை வென்ற அணியில் கேப்டனாக இருந்த கிளைவ் லாயிட்டைக் காணோம். அதிரடி வீரர்  விவியன் ரிச்சர்ட்ஸ் வரவில்லை. ஆன்டி ராபர்ட்ஸ் இல்லை. “இது வெஸ்ட் இன்டீஸ்தானா?” என்று ரசிகர்கள் சந்தேகப்படுமளவுக்கான டீமாக அது இருந்தது.

”லாயிட், ரிச்சர்ட்ஸ் எல்லாம் ஏன் இல்லை?“- ஒரு ரசிகர் தன் அருகிலிருந்தவரிடம் கேட்கிறார். “அவங்க பாக்கர் டீமில் ஆடுறதுக்காக ஆஸ்திரேலியாவுக்குப் போயிட்டாங்க. அதனால அல்வின் காளிச்சரண் கேப்டன்ஷிப்பில் வெஸ்ட் இன்டீஸ் டீம் வந்திருக்கு.”

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

“வோர்ல்டு கப் மேட்ச்சில் ஆடுன காளிச்சரணா?”

“ஆமாம்..”

“நம்ம நாட்டுப் பேரு போல இருக்கே?”

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

“ஆமா.. எங்க தமிழ்நாடுதான் காளிச்சரணுக்குப் பூர்வீகம்” என்றார் இந்தப் பக்கம் உட்கார்ந்திருந்தவர். பம்பாய் செகரேட்டரியேட்டில் வேலை பார்க்கும் கும்பகோணத்துக்காரர். “ம்.. அப்படின்னா இது வெஸ்ட் இன்டீஸ் மெயின் டீம் இல்ல.. பி டீம். நம்ம கவாஸ்கரும் பசங்களும் எப்படி ஆடுறாங்கன்னு பார்ப்போம்” என்று நிமிர்ந்து உட்கார்ந்தார் நடுவில் இருந்தவர்.

இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர்தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்.  ஆட்டத்தின் முதல் இரண்டு நாட்களில்  இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 424 ரன்கள். அதில் சுனில் கவாஸ்கர் அடித்தது 205 ரன்கள். ஹோம் கிரவுண்டு என்பதால் லிட்டில் மாஸ்டரின் ஸ்ட்ரோக்குகளுக்கு அரங்கம் ஆரவாரம் செய்தது. மிடில் ஆர்டரில் பேட் செய்ய வந்த கபில்தேவ் சரசரவென எடுத்த 42 ரன்கள் வெஸ்ட் இன்டீஸ் பவுலர்களை மட்டுமல்ல, அரங்கில் இருந்த இந்திய ரசிகர்களையும் மிரள வைத்தது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

கிாிக்கெட்அடுத்து ஆடிய வெஸ்ட் இன்டீஸ் தனது முதல் இன்னிங்ஸில் முதல் விக்கெட்டை ரன் ஏதும் எடுக்காமல் இழந்தாலும், முடிவில் 493 ரன்களை எடுத்தது. காரணம், வெஸ்ட் கேப்டனும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவருமான காளிச்சரண் எடுத்த 187 ரன்கள். லாரி கோம்ஸ், டேவிட் முர்ரே, டெரிக் பாரி ஆகியோரும் 50 ரன்களுக்கு மேல் எடுத்ததால் இந்தியாவைவிட 69 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸ் முடிப்பதற்கே 4 நாட்களாகிவிட்டன. இனிமேல் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடவேண்டும். ஒரு நாள்தான் மிச்சமுள்ளது.

நாள் தவறாமல் ஸ்டேடியத்துக்கு வந்த ரசிகர்கள் கொஞ்சம் டல்லாகத்தான் இருந்தார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்காக கவாஸ்கரும் சவுகானும் அவுட் ஆகாமல் ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார்கள்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“ஊகும்.. இனி ஆட்டத்தைப் பார்க்குறதுக்கு என்ன இருக்கு? எப்படியும் டிரா ஆகத்தான் போகுது.” என்று சலித்துக்கொண்டனர்.

ஐந்து நாள் போட்டி. அதில், முதல் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஆட்டம். நடுவில் ஒரு நாள் ரெஸ்ட். அதன் பிறகு மீண்டும் ரெண்டு நாள் ஆட்டம். இவ்வளவுக்குப் பிறகும் எந்த அணியும் ஜெயிக்காமல், டிரா ஆகிவிட்டது என்றால், காசு  கொடுத்து பார்க்க வந்த ரசிகர்களின் மனசு எப்படி இருக்கும்? உடம்பு வலிக்க ஆடிய பிளேயர்களுக்கும்தான் திருப்தி இருக்குமா? இதுதான் பல டெஸ்ட் மேட்ச்களில் நடந்து கொண்டிருந்தது.

கெர்ரி பாக்கர்
கெர்ரி பாக்கர்

ஆட்டம் பார்க்க வந்த ரசிகர்களின் மனசையும், ஆடிக் களைத்த ப்ளேயர்களின் பர்ஸையும் சரியாக கவனித்தார் ஒருவர். அவர், கெர்ரி பாக்கர்.  ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய ஊடக அதிபர். அங்கு நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவது தொடர்பான ஒப்பந்தங்களில் ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனத்திற்கும் பாக்கருக்கும் ஒத்துப்போகவில்லை.

பார்த்தார் பாக்கர். கிரிக்கெட் அணிகளை நாமே உருவாக்கி போட்டிகளை நடத்தி, நம்முடைய டி.வி. சேனல்  மூலம் ஒளிபரப்பினால் என்ன என்று தன் கூட்டாளிகளு டன் பேசினார். உலகின் சிறந்த கிரிக்கெட் ப்ளேயர்களை வைத்து டீம்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. “பெரிய ப்ளேயர்கள் அவுங்க நாட்டை விட்டு வருவாங்களா?” சந்கேகமாக கேட்ட கூட்டாளிகளிடம் பாக்கர் சொன்னார், “காசு கொடுத்தா எல்லா நாட்டுக்காரனும் வருவான். ஒவ்வொரு பெரியமனுசனுக்குள்ளும் கொஞ்சமாவது விபச்சாரத்தன்மை இருக்கும்” கூட்டாளிகள் அதிர்ந்தார்கள். பாக்கர் சொன்னது தான் நடந்தது.

 

ஆட்டம் தொடரும்.

கோவி லெனின், சுதந்திர ஊடகா்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.