அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மூடப்படுகிறதா, அம்மா உணவகங்கள் ? டாக்டர் சரவணன் சுளீர் கேள்வி

திருச்சியில் அடகு நகையை விற்க

நோபல் பரிசு பெற்ற அமர்தியாசென் பாராட்டிய அம்மா உணவகம் தற்பொழுது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மூடல்…

மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அம்மா உணவகத்தை கொண்டு வருவார். அம்மா உணவகத்தை போல எடப்பாடியார் நல்லாசியுடன் நாள்தோறும் காலையில் 1,000 பேர் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் நடமாடும் உணவகத்தை கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் தொடங்கி வைத்து பேச்சு.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

புரட்சித்தலைவி அம்மாவால் தொடங்கப்பட்ட  அம்மா உணவகம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.  இதனை தொடர்ந்து மதுரை வடக்கு தொகுதியில் காலையில் மலிவு விலையில் எடப்பாடியார் பெயரில் நடமாடும் உணவகத்தை கழக மருத்துவரணி சார்பில் கழக மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் கூறியதாவது,

அம்மா உணவகங்களைச் சீரமைக்க ரூ.21 கோடி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு  https://thaaii.com/2024/07/19/allocation-of-rs-21-crore-for-renovation-of- amma-unavagam/ எளிய மக்களுக்கு ...தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்து விடுவோம் என பாரதியார் பாடினார். அதே போல பேரறிஞர் அண்ணா ஒரு ரூபாய்க்கு  ஒரு படி அரிசி திட்டம் அதுவே எனது லட்சியம் என கூறினார். அண்ணா கண்ட கனவை பாரதியாரின் இலட்சியத்தை நிறைவேற்று வகையில் 2011ஆம் ஆண்டில் 20 கிலோ விலையில்லா அரிசி திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா செயல்படுத்தினார்கள்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

அதற்கு முன்பாக 2010 ஆண்டில் இந்தியா முழுவதும் பசியின் அட்டவணையில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்தது.  ஆனால், விலையில்லா அரிசி திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பசிகொடுமை இல்லை என்ற அட்டவணையில் இருந்து முழுவதுமாக விடுபட்டது. அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா தமிழகம் முழுவதும் 700 அம்மா உணவகங்களை திறந்து வைத்தார்.

இந்த உணவகம் மூலம் நாள்தோறும் 15 லட்சம் மக்கள் பயன் பெற்றார்கள். இதற்காக மளிகை பொருட்கள், அரிசி, காய்கறி, கேஸ் சிலிண்டர் ஆகியவற்கு அம்மாவின் ஆட்சிக்காலத்திலும் எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் ஆண்டுக்கு நூறுகோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேலும் எடப்பாடியார் 2020ஆம்ஆண்டில் சென்னையில் முதன்முதலாக 27 லட்சம் ரூபாய் செலவில் நடமாடும் அம்மா உணவகம் தொடங்கி வைத்தார். அம்மா உணவகத்தை பின்பற்றி ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் செயல்பட்டது. குறிப்பாக 2020 ஆண்டில் ஏற்பட்ட கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அம்மாஉணவகம் இருந்தது குறிப்பாக மக்களுக்கு இலவசமாகவே உணவு வழங்கப்பட்டது.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியாசென் தன்னுடைய An Uncertain Glory -India and its Contradictions என்கிற புத்தகத்தில் அம்மா உணவகத்தின் கட்டமைப்பு அதன் தேவை அதன் சிறப்பம்சங்கள் சிலாகித்து பத்து பக்கங்களுக்கு மேல் எழுதியுள்ளார். பொது நிர்வாகத்தில் தமிழகத்தின் நடவடிக்கைகள் நாட்டுக்கே முன்னுதாரணம் என்று புகழ்ந்துள்ளார். அம்மா உணவகங்கள் காலத்தின் தேவை என்று கூறியுள்ளார்.

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

மதுரையில் 12 அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இதில் பல்வேறு உணவகம் பல்வேறு தர சான்றுகள் பெற்று பல்வேறு வெளிநாட்டு நபர்கள் பாராட்டி விட்டுச் சென்றனர். திமுக ஆட்சி என்றைக்கு வந்தோ அன்றைக்கு முதல் அம்மா உணவகம் படிப்படியாக மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த உணவங்களை திமுக சேர்ந்தவர்கள் கபளீகரம் செய்ய முயற்சித்து ஆம்லெட் போட்டு கூட விற்பனை செய்தனர். தற்போது மதுரை வடக்கு தொகுதியில் கூலி தொழிலாளர்கள், மற்றும் ஏழை, எளிய மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் அம்மா உணவகம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 19ம் தேதி எடப்பாடியாரின் நல்லாசியுடன்  மூன்று இட்லி ,ஒரு டீ ஆகியவை பத்து ரூபாய்க்கு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கூலிதொழிலாளர்கள், 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பயன்பட்டு வருகிறார்கள். மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.  மக்கள் மீண்டும் அம்மா உணவகம் செயல் பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். நிச்சயம் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் அப்பொழுது அம்மா மீண்டும் உணவகம்செயல்படும் என கூறினார்.

—    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.