திருச்சியில் உள்ளூர் வேட்பாளர் என்ற அடையாளத்தோடு களம் காணும் அமமுக ப.செந்தில்நாதன் !
திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை வெளியூர் வேட்பாளர்களையே பார்த்து வந்த திருச்சி மக்களுக்கு, முதன்முறையாக உள்ளூர் வேட்பாளர் என்ற அடையாளத்தோடும் முதல் தலைமுறை அரசியல்வாதியாகவும் களம் காணுகிறார்.
திருச்சியில் உள்ளூர் வேட்பாளர் என்ற அடையாளத்தோடு களம் காணும் அமமுக ப.செந்தில்நாதன் !
தேசிய ஜனநாயக் கூட்டணி (‘National Democratic Alliance (NDA), கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் திருச்சிராப்பள்ளி மாமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிவரும் ப.செந்தில்நாதன் களமிறக்கப்பட்டிருக்கிறார்.
திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை வெளியூர் வேட்பாளர்களையே பார்த்து வந்த திருச்சி மக்களுக்கு, முதன்முறையாக உள்ளூர் வேட்பாளர் என்ற அடையாளத்தோடும் முதல் தலைமுறை அரசியல்வாதியாகவும் களம் காணுகிறார்.
பொறியியல் பட்டதாரியான ப.செந்தில்நாதன், 1996 முதல் தமிழகமெங்கும் நடந்த தேர்தல் மற்றும் கட்சிப் பணிகளில் அடிப்படை உறுப்பினராக பணியாற்றி வந்த இவர், 2018-ல் அதிமுகவில் அன்றைய காலகட்டத்தில் நிலவி வந்த சூழ்நிலையில், TTV தினகரன் அவர்களின் பால் ஈர்க்கப்பட்டு, அவரின் தலைமை ஏற்று, அதுவரை பார்த்து வந்த மென்பொருள் வேலைகளை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில், திருச்சி மாநகர் மாவட்ட விவசாய அணி செயலாளராகவும் பின்னர் மாநில இளைஞர் பாசறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற திருச்சிராப்பள்ளி மாமன்ற தேர்தலில், 47- வார்டு மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.