தேர்தல் பறக்கும் படை கெடுபிடி ! சிக்கித் தவிக்கும் வணிகர்கள் !
அனுமதிக்கப்பட்ட 50 ஆயிரம் பணத்திற்கு கூட பறக்கும் படையினர் தகுந்த ஆவணங்களை கேட்டுஅந்த பணத்தை கொண்டு செல்ல கெடுபிடி
தேர்தல் பறக்கும் படை கெடுபிடி !துறையூர் வணிகர்களின் அவலநிலை !
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் துறையூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆறு குழுக்களாக சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினரின் கெடிபிடியால் துறையூரில் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் சிறு குறு வியாபாரிகள் தங்களது வியாபாரத்திற்கான முதலீடுகளை பொருட்களாகவும் பணமாகவும் கொண்டு செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளதாகவும் பறக்கும் படையினரின் கெடுபிடியால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பெரிய கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயம் சார்ந்த அத்தியாவசிய பொருட்களான புளி, மிளகாய்,கொத்தமல்லி உள்ளிட்ட மளிகை பொருட்களை விவசாயிகளிடமிருந்து மட்டுமே பெற முடியும் எனவும் அதற்குண்டான தொகையை உடனடியாக கொடுத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு உதவியாக இருந்து வரும் நிலையில் அந்த சிறு தொகையையும் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக கூறுகின்றனர்.அனுமதிக்கப்பட்ட 50 ஆயிரம் பணத்திற்கு கூட பறக்கும் படையினர் தகுந்த ஆவணங்களை கேட்டுஅந்த பணத்தை கொண்டு செல்ல அனுமதி மறுக்கின்றனர் எனவும்,இதனால் தங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாக விடும் நிலையில் உள்ளதாகவும் துறையூர் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும், சுமார் 70 நாட்கள் வரை நீடிக்கும் பறக்கும் படையின் கெடுபிடியை சற்று தளர்வு ஏற்படுத்தி குறைந்த பட்சம் 2 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதித்து, குறிப்பாக வியாபாரிகளை அடையாளம் கண்டு ,வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.