மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது ! அண்ணாமலை ஜெயிப்பாரானு அப்புறம் சொல்றேன் ! பாஜக சு.சாமி சுளீர் !

மோடி பிரதமராக வரக் கூடாது. மோடியின் ஆட்சியில் பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேற்றம் அடையவில்லை.

0

மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது !
அண்ணாமலை ஜெயிப்பாரானு அப்புறம் சொல்றேன் !
பாஜக சு.சாமி சுளீர் !

துரை தெப்பக்குளம் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

2 dhanalakshmi joseph

அப்போது அவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். ஆனால் மோடி பிரதமராக வரக் கூடாது. மோடியின் ஆட்சியில் பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேற்றம் அடையவில்லை. வெளியுறவுக் கொள்கைகளிலும் சிறப்பாக செயல்படாததால், சீனாவின் அச்சுறுத்தல் நமக்கு உள்ளது. ஆதலால் மோடி பிரதமராகக் கூடாது. 400 தொகுதிகள் எல்லாம் பிஜேபி வெற்றி பெறாது. 272 தொகுதி வெற்றிப் பெற்றாலே தனிப் பெரும்பான்மை கிடைக்கும்.

4 bismi svs
- Advertisement -

- Advertisement -

தமிழகத்தில் பிஜேபி வேட்பாளர்களில் நெல்லையில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் நிச்சயம் வெற்றிப் பெறுவார். அண்ணாமலை உள்ளிட்ட மற்றவர்கள் வெற்றிக் குறித்து, இரு வாரங்கள் கழித்து மதுரை திரும்ப வரும் போது சொல்கிறேன்.” என சுப்பிரமணிய சுவாமி பேட்டி அளித்தார்.

ஷாகுல், படங்கள் – வீடியோ : ஆனந்த்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.