காரைக்குடி அருகே காரும் ,லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட மூன்று பேர் பலி

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

காரைக்குடி அருகே காரும் ,லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே
பலி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாக்குடியை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது காரில் இரண்டு வயது குழந்தை,மற்றும் ஒரு பெண்ணுடன் கரூருக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

கார் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது தேவகோட்டையில் இருந்து வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில், காரில் வந்த கணேசன், இவரது ஆறு வயது மகள் அபிநயா, மனைவியின் அக்கா மகள் சபிதா (14) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தகவல் அறிந்து வந்த சோமநாதபுரம் காவல் நிலையத்தினர் மூவரின் சடலங்களையும் மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

– பாலாஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.