மானமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் மகேஸ் பொய்யா மொழி அவர்களே!

மானமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் மகேஸ் பொய்யா மொழி அவர்களே!

தமிழ் நாட்டு மாணவர்களின் நடைபாதை விளக்கு நீங்கள்! அதனால் தான் மாணவர்கள் நன்றாகப் படிக்கவேண்டும் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழவேண்டுமென்று இன்று ஆராய்ச்சிப் படிப்பை முடித்து டாக்டர் பட்டத்திற்கு தகுதியாகியிருக்கிறீர்கள்.

திருச்சியிலிருந்து புறப்பட்ட அரசியல் சுயம்பு நீங்கள். மாணவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் ஒரு தாயின் அன்புக்கு நிகரானது.
மாணவர்களுக்காக நீங்கள் எடுக்கும் சிரத்தையும் சிந்தும் கண்ணீரும் தாயுள்ளம் கொண்டதென சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றாலும் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயலாற்றும் அற்புதமான மனிதர் நீங்கள்.

மாணவர்கள் ஒன்றும் உடுத்தும் உடையல்ல அவிழ்த்துக் களைய மாணவர்கள் என் தோல்! அதை என் கையால் கிழித்து எறிய முடியாது என்று மாணவர்கள் மீது நீங்கள் வைத்துள்ள அளவற்று அன்பால் தான் அரசுப் பள்ளிகள் பல சாதனைகளை செய்து வருகிறார்கள்.

முள் குத்திவிட்டது என்று முள்ளை குறைகூறும் சாதாரண மனிதர் அல்ல நீங்கள். தவறான இடத்தில் கால் வைத்துவிட்டோமென நகர்ந்து செல்லும் ஆகச்சிறந்த அறிவாளி நீங்கள். உங்கள் பேச்சு தான் உங்கள் திறமையை அடையாளப்படுத்தியது ஆனால் உங்கள் அமைதிதான் நீங்கள் யார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.” என்ற திருக்குறளுக்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறையை எங்கள் திருச்சி மாவட்டத்திலிருந்து ஒரு அமைச்சரைத் தேர்வு செய்து கொடுத்தமைக்கு நன்றி கூறி மகிழ்கிறேன்.

மகனின் வளர்ச்சியைக் கண்டு மகிழ இன்று தந்தை பொய்யாமொழி இல்லை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் இல்லை என்றாலும் துவண்டு விழும் நேரமெல்லாம் தோள் கொடுக்க சகோதரானாய் நண்பனாய் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்ற தைரியத்தோடு உங்கள் பாதையில் நீங்கள் பயணம் செய்யுங்கள் அண்ணா…

பலத்தக்காற்று அடிக்கும் போதும் காடுகள் ஆட்டம் காணும் போதும் இடியும் மின்னலும் ஆகாயத்தின் கம்பீரத்தைப் பறைச்சாற்றும் போதும் நீங்கள் துணிவுடன் இருங்கள். மாணவர்களும் பெற்றோர்களும் திருச்சி மக்களும் உங்களுடன் இருக்கிறார்கள். தங்கை நான் இருக்கிறேன்.

முனைவர்பட்டத்திற்கான படிப்பை திறம்பட முடித்த எங்கள் திருச்சியின் சிங்கம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் மகேஸ் பொய்யா மொழி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் .

கவி செல்வா@ செல்வ ராணி ராமச்சந்திரன் திருச்சி.

Comments are closed, but trackbacks and pingbacks are open.