அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழகத்தில் நடப்பது காட்டாச்சி – அன்புமணி ராமதாஸ் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

எங்களது உணர்வு பூர்வமான கூட்டணி எங்கள் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் எங்களுடன் வருகிறது. திமுக கூட்டணியில் குழப்பம்  உள்ளது அதிமுக தலைமையிலான NDA கூட்டணி 200 இடத்தை பிடித்து ஆட்சியை அமைப்போம். திமுக ஒற்றை இலக்கை மட்டுமே  பெறும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் பேட்டி …..

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அவர்களது மகள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்ளை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ் ஆன்மீக பயணமாக மதுரை அழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில்  சாமி தரிசனம் செய்ய வந்தோம் .குடும்பத்துடன் ஆன்மீக பயணம் வந்தேன். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் அனைத்து தரப்பினரும் திமுக மீது கோபத்தில் உள்ளனர். திமுக தலைவர் 505 வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால் 66 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டது. அதனால் சத்துணவு, ஊராட்சி செயலாளர், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், ஆசிரியர், என அன்றாடம் போராடி கொண்டிருக்கிறார்கள்.  ஸ்டாலின் எங்களை ஏமாற்றி விட்டார் என  சொல்கின்றனர்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

தற்போது தமிழகத்தில் நடப்பது காட்டாச்சி திமுகவின் மிகப்பெரிய தோல்வி எங்கும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது, அமெரிக்காவில் கிடைக்கும் போதைப்பொருள் கூட இங்கு கிடைக்கிறது. இளம் சமூகத்தை போதைப்பொருளால் வீணாக்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ளவர்களை போதைப்பொருள் விற்பனையால்  நாசப்படுத்தி விட்டனர். கருணாநிதி 3 தலைமுறையாக மதுகடை திறந்து குடிக்க வைத்தார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திமுக ஆட்சியில் எங்கும் ஊழல் உள்ளது. சிபிஐ விசாரணை வரும் 2 மாதத்தில் அதிமுக ஆட்சி வரும், கிரானைட் கொள்ளை உள்ளிட்ட கொள்ளைகள் குறித்து விசாரணை நடத்துவோம். முதலமைச்சர் ஸ்டாலின் தினசரி பொய் பேசுகிறார் முதலீடு குறித்து பொய் சொல்கிறார். மொத்தத்தில் 2லட்சம் கோடி தான் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆனால் எப்படி 12.25 லட்சம் கோடி ஒப்பந்தம் வந்தது. எங்களது கூட்டணி உணர்வு பூர்வமான கூட்டணி  இன்னும் சில கட்சிகள் எங்களுடன் வருகிறது. திமுக கூட்டணியில் குழப்பம் உள்ளது தேர்தலில் எங்களுக்கு சாதகமான பேரலை வரும் .

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 சீட்டுகளை பெறுவோம், திமுக ஒற்றை இலக்கை பெறுவார்கள். திமுக ஆட்சி மோசமான ஆட்சி தமிழகத்தில் ஆண்ட முதலமைச்சர்களின் ஆட்சியிலயே ஸ்டாலினின் ஆட்சிதான் மோசமான ஆட்சி சில அதிகாரிகளும், வியாபாரிகள் போல உள்ள அமைச்சரும் தான் இந்த ஆட்சியை நடத்துகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பது எடுக்காதது ஏன் இந்த திமுக ஆட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். முதலமைச்சர் அன்றாடம் உளறி கொண்டிருக்கிறார். இப்போது புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். கனவை  சொல்லுங்கள் என கேட்கிறார் இளைஞர்கள் அதற்கு போதைப்பொருள் லஞ்சம்  இருக்க கூடாது என சொல்வார்கள் ..  ராமதாசுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்விக்கு ? அது முடிஞ்சுபோன கதை என்றார்.

—  ஷாகுல், படங்கள்  : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.