திருச்சி நகரத்தில் யாவரும் … கேளீர் … (தமிழியல் – பொதுமேடை) புதிய அமைப்பு தொடக்கம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி நகரத்தில் யாவரும் … கேளீர் … (தமிழியல் – பொதுமேடை) புதிய அமைப்பு தொடக்கம் – முதல்வர் முனைவர் கா.வாசுதேவன் வாழ்த்துரை  – செயற்கை நுண்ணறிவூட்டம் – காலத்தின் தேவை – நிலவன் உரை

திருச்சி நகரத்தில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதிலிருந்து மாறுபட்டுத் தனித்துவமாக யாவரும் கேளீர் அமைப்பு அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 2ஆம் சனி மற்றும் 4ஆம் சனிக்கிழமைகளில் அங்குசம் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

யாவரும் ... கேளீர் ... தமிழியல் - பொதுமேடை -1
யாவரும் … கேளீர் … தமிழியல் – பொதுமேடை -1

தமிழின் பிறதுறை அறிவுச் செல்வங்களைக் கொணர்ந்து சமூக ஊடகங்களின் வழியாகப் பரப்புவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. இந்த அமைப்பின் தொடக்கவிழா கடந்த 13.07.2023 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கியது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இந்நிகழ்வுக்குக் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஆநிறைச் செல்வன் தலைமை தாங்கினார். அவரின் தலைமை உரையில்,“யாவரும் கேளிர் என்றால் எல்லாரும் கேளுங்கள் என்று பொருள். யாவரும் கேளீர் என்றால் எல்லாரும் நம் உறவினர்களே என்ற பொருள் உண்டு. எப்படிப் பார்த்தாலும் யாவரும் கேளீர் என்பது நல்லனவற்றை எல்லாரும் கேளுங்கள். தமிழின் அறிவுச் செல்வங்கள் மக்களிடம் பரப்புவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது மிகவும் வித்தியாசமாக உள்ளது என்பதைவிடக் காலத்தின் தேவை கருதி அங்குசம் சமூக நல அறக்கட்டளை அறங்காவலர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு இந்தப் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

யாவரும் ... கேளீர் ... தமிழியல் - பொதுமேடை -1
யாவரும் … கேளீர் … தமிழியல் – பொதுமேடை -1

இந்த அமைப்பின் முதல் நிகழ்வுக்கு என்னைத் தலைமை தாங்க அழைத்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தொடக்கவிழாவில் சிறப்புரையாகச் செல்வன் நெ.நிலவன் “செயற்கை நுண்ணறிவூட்டம் – காலத்தின் தேவை” என்னும் பொருள் குறித்துக் காலத்தின் தேவை கருதி உரையாற்றவுள்ளார். அவருக்கு நான் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களின் வரலாற்றின் தொடக்கம் முதல் இன்றுவரை அறிவு சார்ந்துதான் இயங்கி வந்துள்ளனர். இன்றைய காலத்திலும் தமிழர்கள் அறிவுசார்ந்து இருப்பது என்பது கடந்தகாலத்தின் தொடர்ச்சிதான். வரலாற்றுக்கு முன்பு வான், நிலம், நீர், நெருப்பு, வளி என்னும் ஐம்பூதங்களால்தான் இந்த உலகம் உருவாகியுள்ளது என்பதை முதன்முதலில் உரக்கச் சொன்னவன் தமிழன். அந்தத் தமிழ் மரபின் தொடர்ச்சியாக. முதல் நிகழ்வில் செயற்கை நுண்ணறிவூட்டம் – காலத்தின் தேவை என்ற உரையை அமைத்திருப்பதும் பொருத்தமான ஒன்றுதான்” என்று உரையாற்றினார்.

யாவரும் ... கேளீர் ... தமிழியல் - பொதுமேடை -1
முதல்வர் முனைவர் கா.வாசுதேவன் வாழ்த்துரை

யாவரும் கேளீர் அமைப்பைத் தொடங்கி வைத்துத் திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் கா.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கும்போது,“யாதும் ஊரே… யாவரும் கேளீர் எனும் சங்க இலக்கியத்தின் வரிகளில் யாவரும் கேளீர் என்ற சொல் தொடரை எடுத்துக்கொண்டு என்னுடைய அன்பு நண்பர் அங்குசம் சமூக அறக்கட்டளையின் தலைவர் ஜெ.டிஆர் மற்றும் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என் அருமை நண்பர் பேராசிரியர் முனைவர் நெடுஞ்செழியன், முனைவர் ரெ.நல்லமுத்து, பேராசிரியர் ஆநிறைச்செல்வன் ஆகியோர் இணைந்து இந்த அமைப்பைத் தொடங்கியமைக்கு என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான்கூட இதுவும் ஒரு இலக்கிய அமைப்பு என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். என்னை இந்த விழாவிற்கு அழைத்த நண்பர் நெடுஞ்செழியன் இஃது ஓர் இலக்கிய அமைப்பு இல்லை என்றார். மேலும் பிற துறைகளில் உள்ள தமிழின் அறிவுச் செல்வங்களைத் திரட்டி மக்களுக்குத் தெரிவிக்கும் ஓர் அமைப்பு என்று எனக்கு விளக்கம் அளித்தார். இந்த அமைப்பைத் திட்டமிடும்போது, மாதம் 2ஆம் மற்றும் 4ஆம் சனிக்கிழமைகளில் நிகழ்வுகளை நடத்துவது என்று முடிவெடுத்துள்ளனர். மேலும், ஒவ்வொரு நிகழ்வுக்கும் கல்லூரி / பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மட்டும்தான் தலைமை தாங்குவார்கள் என்ற ஒரு புதிய விதியை இந்த அமைப்புக்கு ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அறிவைப் போற்றுவது, அறிவுடையோரைப் போற்றுவது என்பது யாவரும் கேளீர் அமைப்பின் நோக்கமாக உள்ளது என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

யாவரும் ... கேளீர் ... தமிழியல் - பொதுமேடை -1
யாவரும் … கேளீர் … தமிழியல் – பொதுமேடை -1

யாவரும் கேளீர் என்னும் தமிழியல்-பொதுமேடை என்னும் இந்த அமைப்பு தமிழுக்கு வளம் சேர்க்கட்டும். தமிழுக்குப் பெருமை சேர்க்கட்டும் என்று நெஞ்சாரா வாழ்த்துகிறேன். பிறதுறைகளில் உள்ள அறிவுச் செல்வங்களைத் திசையெட்டும் சென்று திரட்டிவந்து, நம் தாய்தமிழ் மக்களுக்கு வழங்கும் அரிய பணியை இந்த அமைப்பு தொய்வில்லாமல் செய்யவேண்டும். எங்களைப்போன்ற பேராசிரியப் பெருமக்கள் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று உரையாற்றினார்.

யாவரும் ... கேளீர் ... தமிழியல் - பொதுமேடை -1
யாவரும் … கேளீர் … தமிழியல் – பொதுமேடை -1

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

விழாவில் சிறப்புரையாற்றிய நெ.நிலவன் பேசும்போது,“செயற்கை நுண்ணறிவூட்டம் என்பது காலத்தின் தேவை. இந்தச் செயற்கை நுண்ணறிவு என்பது நம்முடைய பணிகளை வெகுசுலபமாக்குகின்றது. இதனால் நேரம் மிச்சமாகிறது. மிச்சமாகின்ற நேரத்தில் இன்னொரு வேலையைப் பார்க்கமுடிகின்றது. நுண்ணறிவு என்பது நான் கணினிக்குக் கோடிங் மூலம் எழுதுவதுதான். ஒரு சிகப்பு பந்தைக் காட்டி ஆம்/இல்லை என்ற பதில்தான் முதல் நுண்ணறிவூட்டத்தின் முதல்படி. சிகப்பு பந்தைக் காட்டி நிறம் என்னவென்றால் ஆம் என்று புரிந்துகொண்டு சிகப்பு என்று சொல்லும். பச்சை பந்தைக் காட்டினால் இல்லை என்பதை அறிவூட்டத்தின்படி புரிந்துகொண்டு சிகப்பு இல்லை என்று பதில் அளிக்கும். இப்படியாகக் கணினிக்குச் செயற்கை அறிவு உள்ளீடு செய்யப்படும். அந்தச் செயற்கை அறிவு உள்ளீடுகளைக் கணினி புரிந்துகொண்டு, தானே அறிவை உருவாக்கிக் கொண்டு பதில்கள் சொல்லும்.

யாவரும் ... கேளீர் ... தமிழியல் - பொதுமேடை -1
யாவரும் … கேளீர் … தமிழியல் – பொதுமேடை -1 – சிறப்புரையாற்றிய நெ.நிலவன்

கணினிக்கு நாம் அறிவைக் கொடுப்போம். கணினி பல அறிவைப் பெற்றுக்கொண்டு எது சரியான பதில் என்பதைக் கணினி அறிவுகொண்டு சிந்தித்துப் பதில் தரும் என்பதுதான் இதன் சிறப்பு. முன்காலத்தில் நாம் ஒரு பொருள்குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் கூகுள் தேடுபொறியில் தேடும் பொருளை உள்ளீடு செய்வோம். கணினி நாம் தேடும் பொருள் தொடர்பான வெப்சைட் என்னும் வலைதள முகவரிகளை நமக்குத் தரும். இந்தச் செயற்கை நுண்ணறிவூட்டம் இதிலிருந்து மாறுபாட்டு, நாம் தேடும் பொருளின் விவரங்களைப் பல்வேறு இணையத் தளம் சென்று சேகரித்து நமக்குத் தெரிவிக்கும் என்பது நுண்ணறிவூட்டத்தின் தனிச்சிறப்பாகும்.

வீடியோ லிங்

செயற்கை நுண்ணறிவூட்டம் என்பது மருத்துவத்துறை, வேளாண்துறை, மனித மேம்பாடு, அறிவியல் துறை தொடர்பான சிக்கலான கேள்விகளுக்கும் எளிமையான விளக்கங்களைத் தருகின்றது. இதனால் வேலைவாய்ப்பு குறையும் என்ற ஓர் அச்சம் தற்போது நிலவுகின்றது. விவசாயத்துறையில் டிராக்டர் வந்தபோது, ஏர் வைத்திருப்போர், உழவுக்கு மாடு வைத்திருப்போர் கதி என்னாவது? என்று கேள்வி கேட்டார்கள். அந்தக் காலம் மாறித் தற்போது வேளாண்துறையில் நாற்று நட, களைபிடுங்க, அறுவடை செய்ய என்று ஒவ்வொன்றுக்கும் கருவிகள் வந்துவிட்டன. இந்தத் தொழில் ஈடுபட்டிருந்த மக்கள் வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டார்கள். இதனால் வேலையிழப்பு ஏற்படும் என்ற அச்சம் தேவையற்றது. உழைக்கும் நேரம் மிச்சமாகின்றது. மிச்சமாகும் நேரத்தில் இன்னொரு வேலையை நாம் செய்யலாம். உற்பத்தி இதன்மூலம் பெருகும் என்றுதான் நாம் நினைக்கவேண்டும். குறை காணும் நோக்கில் செயற்கை நுண்ணறிவூட்டத்தை அணுகக்கூடாது. காலத்தின் தேவை என்றே எண்ணிட வேண்டும்” என்று உரையை நிறைவு செய்தார்.

யாவரும் ... கேளீர் ... தமிழியல் - பொதுமேடை -1
யாவரும் … கேளீர் … தமிழியல் – பொதுமேடை -1

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தொடக்கவிழா சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் விழா புரவலர் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ரெ.நல்லமுத்து பயனடைகள் அணிவித்துச் சிறப்பு செய்தார். அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் சிறப்பு விருந்தினர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கினார்.

யாவரும் ... கேளீர் ... தமிழியல் - பொதுமேடை -1
யாவரும் … கேளீர் … தமிழியல் – பொதுமேடை -1

தொடக்கவிழாவில் அங்குசம் செய்தி இதழ் ஆசிரியர் குழுவினர், அறக்கட்டளை சார்ந்த உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். யாவரும் கேளீர் நிகழ்ச்சிகள் அனைத்தும் அங்குசம் யூடியூப் வழியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இனி நடைபெறும் நிகழ்ச்சிகளும் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் விழாவில் தெரிவிக்கப்பட்டது.

– ஆதவன்

வீடியோ லிங்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.