திரைப்பட பாடல்கள் வழியும் அறிவு பெறலாம் முனைவர் பி.கலைமணி பாட்டும் + உரையும் ! தமிழியல் பொதுமேடை – 7

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 7

அங்குசம் சமூக அறக்கட்டளை சார்பில் யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை – 7 இன் நிகழ்வு 12.10.2024ஆம் நாள் நடைபெற்றது. இந் நிகழ்வுக்குத் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் நாராயண நம்பி தலைமை தாங்கினார். “அறிவூட்டும் திரையிசைப் பாடல்கள்” என்னும் பொருண்மையில் முனைவர் பி.கலைமணி திரையிசைப் பாடல்களைப் பாடி உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.நெடுஞ்செழியன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். நிகழ்ச்சியின் புரவலர் முனைவர் ரெ.நல்லமுத்து விருந்தினர்களுக்குப் பயனாடைகள் அணிவித்து சிறப்பு செய்தார்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

நிகழ்வில் தலைமை உரையாற்றிய முனைவர் நாராயண நம்பி,“தமிழ் இலக்கியம் என்பது பல வகைமையில் உள்ளது. அதில் மிகச்சிறந்த இடத்தைப் பிடித்திருப்பது திரைப்பாடல்கள் என்றால் மிகையில்லா உண்மையாகும். மாணவர்கள் தேர்வுக்காக மனப்பாடம் செய்த செய்யுளையே பிற்காலத்தில் மறந்துவிடுவார்கள்.

தமிழியல் மேடை 7எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திரைப்பாடல்கள் மட்டும் மனதில் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றது. திரையிசைப்பாடல்கள் என்றால் எல்லாம் மோசமானவை என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. அன்பு, கோபம், இரக்கம், நகைச்சுவை, காதல் உணர்வு இவைகளை வெளிப்படுத்தும் நல்ல திரையிசைப் பாடல்கள் பல உள்ளன. ஒரு மணிநேர பேச்சு ஏற்படுத்தாத தாக்கத்தை 4 நிமிட பாடல்கள் ஏற்படுத்திவிடும் என்பது உண்மை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

பாசமலர் திரைப்படத்தில்,“நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி…. நடந்த இளந்தென்றலே” என்ற வரிகள் 50 ஆண்டுகளைக் கடந்தும் நம்மை வசீகரித்துக் கொண்டிருக்கின்றது என்றால் திரையிசைப் பாடல்களுக்கென்று தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பனதொரு இடம் உள்ளது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்” என்று குறிப்பிட்டார்.

அறிவூட்டும் திரையிசைப் பாடல்கள் என்னும் பொருண்மையில் உரையாற்றிய முனைவர் பி.கலைமணி, “திரையிசைப்பாடல்களில் பல வகைகள் உள்ளன. நாம் மனிதர்களுக்கு அறிவூட்டும் திரையிசைப் பாடல்களை மட்டும் இந்த நிகழ்வில் குறிப்பிட விரும்புகிறோம்.

மனிதர்கள் வீரமுடையவர்களாக இருக்கவேண்டும். அஞ்சாமையோடு இருக்கவேண்டும். பாரதியின் கவிதை வரிகள், ”அச்சமில்லை…. அச்சமில்லை…. அச்சம் என்பதில்லையே…. என்று மனிதனை அச்சம் கொள்ளுதல் கூடாது என்று சொல்லும்.

உச்சியில் இருக்கும் வானம் இடிந்து விழுந்தாலும் அச்சம் கொள்ளக்கூடாது” என்றும் பாரதி கூறுவார். மேலும், மனிதர்கள் அஞ்சி… அஞ்சி சாவார்… இவர்கள் அஞ்சாத பொருள் இல்லை… என்றும் குறிப்பிடுவார். மனிதன் அச்சம் கொள்ளாமல் வீரமுடையவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பிய கண்ணதாசன், மன்னாதி மன்னன் திரைப்படத்திற்கு, “அச்சம் என்பது மடமையடா…. அஞ்சாமை திராவிடர் உடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்று பாடல் எழுதியிருப்பார்.

அந்த பாடலின் வேகம் குதிரையின் வேகத்தோடு ஒத்திருக்கும்.  அப் பாடலில், ‘வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி…. மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர்” என்று வீரத்தின் பெருமையையும் அச்சம் கொள்ளக்கூடாது என்பதையும் வெளிப்படுத்தியிருப்பார்.

தமிழியல் மேடை 7ஒரு நாட்டின் எதிர்காலம் என்பது குழந்தைகளின் வளர்ச்சியில்தான் உள்ளது. அந்தக் குழந்தைகள் தவறுகளைச் செய்யக்கூடாது. தப்புகளையும் செய்யக்கூடாது என்பதை வாலி ஒரு திரைப்பாடலில், “நல்ல… நல்ல… பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி….. தவறு என்பது தவறி செய்வது, தம்பு என்பது தெரிந்து செய்வது…. தவறு செய்தவன் திருந்த பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும்” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மனிதர்கள் சிறந்த எண்ணங்களோடு உயர்ந்த சிந்தனைகளோடு வாழவேண்டும். அறத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்யக்கூடாது. சமூகத்தில் மது அருந்துதல் என்பது சமூகத்திற்குக் கேடு செய்யும் செயலாகும். ஒளிவிளக்கு திரைப்படத்தில் மது அருந்துபவர்களைப் பார்த்து, “தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா? இல்லை… நீதான் ஒரு மிருகம் …. இந்த மதுவில் விழும் நேரம்” என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கும். இந்தக் கேள்வி இன்றும் சமுதாயத்தில் எழுப்பட வேண்டிய தேவையும் உள்ளது.

மனிதர்கள் தங்கள் வாழ்க்கை முறைக்கு நம்மில் உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் பறவை, விலங்குகளின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ள வேண்டும். “கோழியைப் பாரு காலையில் விழிக்கும், குருவியைப் பாரு சோம்பலை முறிக்கும்…. காக்கையைப் பாரு கூடிப்பிழைக்கும்…. நம்மையும் பாரு நாடே சிரிக்கும்” என்று வாழ்வில் முன்னேறுவதற்கான அறிவுரைகள் இப் பாடலில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

மனிதர்கள் குழப்பத்தோடும் மயக்கத்தோடும் வாழக்கூடாது. குழப்பமின்றி, மயக்கமின்றி உறுதியான எண்ணத்தோடு வாழவேண்டும் என்பதைக் கண்ணதாசன்,“ வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்… வாசல் தோறும் வேதனை இருக்கும்…. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரையில் அமைதி பிறக்கும்” என்று கூறியிருப்பார்.

தமிழியல் பொதுமேடை 7
தமிழியல் பொதுமேடை 7

இப்படி மனித வாழ்வுக்குத் தேவையான பல அறிவுரைகள் திரையிசைப் பாடல்களில் இடம் பெற்றிருக்கின்றன. பாடல்களைக் கேட்டு இரசிப்பதோடு மட்டுமல்லாமல், அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளையும் உள்வாங்கி சிறந்த வாழ்க்கையை நாம் வாழ முற்படவேண்டும்” என்று உரையை நிறைவு செய்தார்.

சிறப்பு விருந்தினர்களுக்குச் சான்றிதழ்களையும், அன்பின் நினைவாக நூல்களையும் அங்குசம் அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் வழங்கி சிறப்பித்தார். நிகழ்வின் புரவலர் முனைவர் ரெ.நல்லமுத்து நன்றி கூறினார்.

– ஆதவன்.

 

யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 6ஐ படிக்க

”ஏழைகளை எழுத்துக்கூட்டிப் படிக்க வைத்தது சி.பா.ஆதித்தனாரின் இதழியல் நுண்ணரசியல்” பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வன் உரை! தொடா் 6 https://angusam.com/yavaru-kleer/

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.