”பெரியார் + அண்ணா = கலைஞர்” யாவரும்… கேளீர்… – தமிழியல் பொதுமேடை – 5

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ங்குசம் அறக்கட்டளை நடத்திவரும் யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை – 5 வது நிகழ்வு  செப்-14 அன்று அங்குசம் அறக்கட்டளை அலுவலகத்தில், ”பெரியார் + அண்ணா = கலைஞர்” என்ற பொருண்மையில் நடைபெற்றது. இவ்விழாவிற்குத் திருச்சி மாவட்ட வாசகர் பேரவையின் தலைவர், தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற வீ.கோவிந்தசாமி தலைமை தாங்கினார். கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, பெரியாரின் துணிவு, அண்ணாவின் ஆற்றல் இணைந்த ஓர் உருவம்தான் கலைஞர் என்று திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் மேனாள் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் சிறப்புரையாற்றினார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வரவேற்புரையாற்றினார் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பட்ட ஆய்வாளர் ரேவதி ஜெ.டி.ஆர். நிகழ்வின் புரவலர் பேராசிரியர் முனைவர் ரெ.நல்லமுத்து சிறப்பு விருந்தினர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்து நிகழ்வின் இறுதியில் நன்றி கூறினார்.

விழாவிற்குத் தலைமை தாங்கிய தமிழ்ச்செம்மல் வீ.கோவிந்தசாமி தன் தலைமையுரையில்,“ கலைஞர் பெரியாரின் கொள்கைகளையும் அண்ணாவின் இலட்சியங்களையும் தன் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றினார். ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நல்லாட்சி நடத்தி, மக்கள் இனஉணர்வோடும் மொழிஉணர்வோடும் வாழ இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளில் தொடர்ந்து பணியாற்றினார்.” என்று குறிப்பிட்டார்.

தீபாவளி வாழ்த்துகள்

சிறப்புரையாற்றிய பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்,“ கலைஞர் என்பவர் தனிமனிதர் அல்ல; பெரியாரின் துணிவு, அண்ணாவின் ஆற்றல் இரண்டும் இணைந்த ஓர் உருவம்தான் கலைஞர். கலைஞர் தமிழக அரசியல் வானில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் புகழப்பட்ட, கவனம்கொள்ளப்பட்ட தலைவராக விளங்கினார்.

Anna Duraiஅண்ணா ஆட்சிக்கு வந்து தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லும் என்று அறிவித்தார். சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி தமிழ்நாடு என்று மாற்றினார். தமிழ்நாட்டில் தமிழும் ஆங்கிலம் இருமொழிக் கொள்கையே இருக்கும் என்று அறிவித்தார். அண்ணாவின் ஆட்சிக்காலம் 2 ஆண்டுகள் மட்டுமே நடந்தது. பெரியாருக்கு வாய்க்காத, அண்ணாவுக்கு வாய்க்காத ஆட்சி அதிகாரத்தில் கலைஞர் நீண்டகாலம் முதல் அமைச்சராக இருந்தார். அவர் ஆட்சிக் காலத்தில் பெரியாரின் கொள்கைகள், அண்ணாவின் இலட்சியங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அண்ணா மறைவுக்குப்பின் சட்டமன்றத்தில் கலைஞர் 128 அரசு உயர்பதவிகளில் நியமிக்கப்படுபவர்களின் பட்டியலை வாசித்தபோது, சுதந்திரா கட்சியின் உறுப்பினர் எச்.வி.ஹண்டே எழுந்து இதில் ஒரு பிராமணர்கள்கூட இல்லையே என்றபோது, ‘இப்படிப்பட்ட உயர்பதவிகளை வகிக்கும் ஆற்றலும் திறமையும் உடையவர்கள் அந்தச் சமூகத்தில் இருப்பதாக என் கண்களுக்குத் தெரியவில்லை” என்று கலைஞர் பதில் அளித்தார். உறுப்பினர் எச்.வி.ஹண்டே,“இது மூன்றாம் தர ஆட்சி” என்றவுடன், கலைஞர்,“இது மூன்றாம் தர ஆட்சியல்ல, நாலாம் தர ஆட்சி. சூத்திரர்களுக்காக சூத்திரர்கள் ஆளும் சூத்திரர்களின் ஆட்சி” என்று பதிலடி கொடுத்தார்.

Kalaignarஅண்ணாவின் கொள்கையான நிலஉச்சவரம்பு சட்டத்தை 1971 ஆம் ஆண்டு கலைஞர் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தபோது, எந்த முன்னுதாரணமும் இல்லாததால் இந்தச் சட்டத்தை ஏற்கமுடியாது என்று திருப்பி அனுப்பப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கலைஞர்,“முன்னுதாரணம் இல்லாமல் எதையும் ஏற்கமுடியாது என்றால் இனிமேல் ஏற்கனவே திருமணங்கள் பல செய்து, பிள்ளைகளை ஈன்றெடுத்த ஆண்களுக்குத்தான் இனி திருமணம் நடக்கும்போல” என்ற கடுமையாக விமர்சனம் செய்தார்.

பின்னர் மாநில அரசின் வரையறைக்குட்பட்டு, உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற சட்டத்தை இயற்றினார். இதன்படி குத்தகைத்தாரர்கள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டால், நிலஉரிமையாளர்கள் குத்தகைத்தாரர்களுக்கு நிலத்தின் பாதியைக் கொடுக்கவேண்டும் அல்லது சந்தை விலையில் பாதி தொகை வழங்கவேண்டும் என்று விதிகளை வகுத்தார். இதுவரை இதுபோன்ற புரட்சி எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை என்பதில் கலைஞரின் ஆட்சி தனித்துவம் மிக்கது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அண்ணாவின் இன்னொரு கொள்கையான போக்குவரத்துகளைக் கலைஞர் 1972 இல் நாட்டுமையாக்கினார். தமிழ்நாட்டில் அப்போது அதிக தனியார் பேருந்து போக்குவரத்துகளைக் கையில் வைத்திருந்த டிவிஎஸ் அய்யங்கார் பேரன் கலைஞரிடம் தொலைபேசி வழி பேசும்போது,“பேருந்துகள் எங்கள் தாத்தா வீட்டு சொத்து, அரசின்வசம் பேருந்துகளை ஒப்படைக்கமுடியாது” என்றபோது, கலைஞர்,“சாலைகள் மக்கள் சொத்து, அரசின் சொத்து, உங்கள் தாத்தா வீட்டு சொத்தான பேருந்துகளை வீட்டிலே வைத்துக்கொள்ளுங்கள். சாலைகளில் இயக்கக்கூடாது” என்று பதில் கொடுத்தார். இது கலைஞரின் மகத்தான சாதனைகளில் ஒன்று.

Periyarபெரியாரின் கொள்கையான அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்று கலைஞர் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றினார். அதுபோலவே பெண்களுக்குச் சொத்தில் 50% உரிமை உண்டு என்று சமூகத்தின் புரட்சிக்கரமான சட்டத்தை நிறைவேற்றினார். அதன் வழியே, பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றினார்.

இந்தியாவில் கடற்கரையொட்டி பல மாநிலங்கள் இருக்க 1974ஆம் ஆண்டு கலைஞர் ‘பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்’ என்ற ஒன்றைத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், வேறு எந்த மாநிலமும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கவில்லை என்பதில்தான் கலைஞர் ஆளுமை திறன் வெளிபடுகின்றனது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர் இறந்தால் 1 இலட்சம் குடும்பநிதி வழங்கினார். இறந்த அரசு ஊழியரின் வாரிசுக்கு வேலை வழங்கினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவருக்குக் கோட்டம் கட்டினார். குமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடியில் வான்முட்ட சிலை அமைத்தார். சென்னையில் ஆசியாவின் முதல் பெரிய நூலகம் ஒன்றை அமைத்து அதற்கு அண்ணா பெயர் சூட்டினார். எல்லா சாதியினரும் ஒன்றாகக் கூடியிருக்கும் சமத்துவப்புரங்களை மாவட்டங்கள் தோறும் அமைத்தார். சமத்துவபுரங்களில் தந்தை பெரியாரின் சிலைகளைக் கலைஞர் அமைத்தார். பட்டியலினப் பிரிவில் மிகவும் நலிவடைந்துள்ள அருந்தியின மக்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கினார்.

தமிழ் சமூக வரலாற்றில் மறைக்கமுடியாத, மறுக்கமுடியாத தலைவராகக் கலைஞர் பெரியாரின் துணிச்சலோடும், அண்ணாவின் ஆற்றலோடும் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பார் என்பது மிகைப்படுத்தப்படாத உண்மையாகும்.” என்பதாக எடுத்துரைத்தார் பேரா.நெடுஞ்செழியன்.

யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை – 5
யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை – 5

நிறைவாக, சிறப்பு விருந்தினர்களுக்கு அங்குசம் அறக்கட்டளையின் தலைவர் ஜெ.டி.ஆர். சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, யாவரும் கேளீர் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சான்றோர் பெருமக்களுக்குத் திராவிட இயக்கச் சிந்தனையாளர் மிசா தி.சாக்ரடீஸ் இனிப்புகளை வழங்கினார்.

-ஆதவன்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.