அங்குசம் சினிமா கார்னர் 2025 : குறும்பட போட்டி விருது வழங்கும் விழா ! நீங்களும் பங்கேற்று விழாவை சிறப்பிக்கலாமே!
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அங்குசம் சினிமா கார்னர் 2025 குறும்பட போட்டி விருது வழங்கும் விழா, டிசம்பர் 03 (புதன் கிழமை) மாலை சரியாக 4.30 மணிக்கு, திருச்சி கலையரங்கம் முதல் தளத்தில் நடைபெறுகிறது.
சிறப்பு விருந்தினர்களாக, சேவை நிறுவனத்தின் இயக்குநர் சேவை கோவிந்தராஜன், பிளாக் தண்டர் நிர்வாக இயக்குநர் அடைக்கலராஜ் ஜோசப் லூயிஸ், மாமன் திரைப்பட இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், எக்ஸெல் குழுமத்தின் தலைவரும் அகில உலக ரோட்டரியின் இயக்குநர்களுள் ஒருவருமான எம்.எம்.எம். முருகானந்தம் ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பிக்கவிருக்கிறார்கள்.
நிகழ்வு சரியாக 4.30 மணிக்கு தொடங்கும். முதல் அமர்வில் போதை விழிப்புணர்வு தொடர்பான கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். அதனை தொடர்ந்த இரண்டாவது அமர்வில் குறும்படம் திரையிடல், இயக்குநரின் உரை, பரிசு வழங்குதல் ஆகியவை இடம்பெறும். நிகழ்வு சரியாக 8.15 மணிக்கு நிறைவுறும்.

அங்குசம் அறக்கட்டளை முன்னெடுத்த இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த கவி குழுமத்தின் சந்திரபாபு, வேர்கள் அறக்கட்டளையின் லயன் அடைக்கலராஜா, பிரனவ் எஸ்டேட்ஸ் ஜே.ஜான்சன்குமார், நேஷனல் மாடுலர் கிச்சன் எம்.ஏ.அஹமத் இப்ராஹிம், வரம் புரமோட்டர்ஸ் ரூபன் கோவிந்தராஜ், அருக்காணி ரெஸ்டாரண்ட் என்.மோகன், ஜெயம் பில்டர்ஸ் எஸ்.ஆனந்த், டி.என்.45 சிக்னல் ஸ்டுடியோ, ஈவென்ட்ஸ்&வெட்டிங் பிளானர் இம்ரான் ரஷீத், லிவ்யாஸ்ரீ கலிங்கா.இளவழகன், ஆத்மா மனநல மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கே.ராமகிருஷ்ணன், பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீரம்யா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ஸ் நிர்வாக இயக்குநர் மருத்துவர் விக்னேஷ் ராஜா, ஜி.வி.என். ரிவர்சைடு ஹாஸ்பிட்டல்ஸ் வி.ஜே.செந்தில், ஜோசப் கண் மருத்துவமனையின் மருத்துவர் சுபா, பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாம், ஆண்டவர் பிளஸ் வாட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணன், டி.என்.45 சிக்னல் ஸ்டுடியோ நிஜாமுதீன் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பிக்கவிருக்கிறார்கள்.
சமூகத்தின் சாபக்கேடாகவும், துடிப்பான இளைஞர்களின் செயல்திறனையும் ஆக்கப்பூர்வமான சிந்தனையையும் மழுங்கடிக்கும், அவர்களது எதிர்காலத்தையே சிதைக்கும் போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்கமாக, நடைபெறும் குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவில் நீங்களும் பங்கேற்று விழாவை சிறப்பிக்கலாமே!
நாள் : டிசம்பர் – 03 (புதன் கிழமை)
விழா நடைபெறும் இடம் : திருச்சி, கலையரங்கம் முதல் தளம்.
திருச்சி ரயில்வே சந்திப்பு மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் விழா அரங்கம் அமைந்திருக்கிறது. தாங்கள் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து வருகைபுரிந்தாலும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்து சேர்ந்து விடுங்கள். அங்கிருந்து, திருச்சி கலையரங்கம் திருமண மண்டபம் என்று கேட்டாலே சொல்லி விடுவார்கள். ஜென்னீஸ் ஹோட்டல் மற்றும் தமிழ்நாடு ஹோட்டல் ஆகியவற்றுக்கு நடுவே விழா அரங்கம் அமைந்திருக்கிறது.
— ஆசிரியர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.