அங்குசம் பார்வையில்  ” காடுவெட்டி ”

உயர்ந்த  நோக்கத்தோடு தான் இந்த திரைப்படத்தை ஆரம்பித்திருப்பார்கள்.  ஆனால் அவர்களின் நோக்கம் அதற்கு நேர்மாறாகப் போய்விட்டது தான்  வேதனையான உண்மை.  

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

   அங்குசம் பார்வையில்  ” காடுவெட்டி ”

 

யாரிப்பு: ‘மஞ்சள் ஸ்கிரீன்ஸ்’ சுபாஷ் சந்திரபோஸ், மகேந்திரன், பரமசிவம். டைரக்‌ஷன்: சோலை ஆறுமுகம். நடிகர்—நடிகைகள்: ஆர்.கே.சுரேஷ், சங்கீர்த்தனா, விஸ்மியா, ஏ.எல்.அழகப்பன், சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா பாண்டிலட்சுமி. தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒளிப்பதிவு: எம்.புகழேந்தி, பின்னணி இசை: ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் இசை: வணக்கம் தமிழா சாதிக், எடிட்டிங்: ஜான் ஆபிரகாம். பி.ஆர்.ஓ.மணவை புவன்.

இந்தப் படத்தின் விமர்சனத்தை விரக்தியாக எழுதுவதா? வேதனைப்பட்டு எழுதுவதா? மனம் வெந்து நொந்து எழுதுவதா? என நமக்குப் புரியவில்லை. இத்திரைப்பட நிறுவனத்தின் பெயரே ‘மஞ்சள் ஸ்கிரீன்ஸ்’ என இருப்பதிலிருந்தே பார்வையாளனின் மனதிற்குள் ஒருவித [அது எந்தவிதம்னு நம்மால் சொல்ல முடியவில்லை] உணர்வு எச்சரிக்கை செய்ய ஆரம்பித்துவிடும்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

வடமாவட்டங்களில் பெரும்பான்மை சமூகமாக இருப்பவர்களின் பெருமையையும் புகழையும்  உயர்த்திக் காட்டும் உயர்ந்த  நோக்கத்தோடு தான் இந்த திரைப்படத்தை ஆரம்பித்திருப்பார்கள்.  ஆனால் அவர்களின் நோக்கம் அதற்கு நேர்மாறாகப் போய்விட்டது தான்  வேதனையான உண்மை.

 

படத்தின் இடைவேளைக்குப் பிறகு பெரும்பாலான காட்சிகளின் வசனங்களை சென்சார் ‘மியூட்’ செய்திருப்பதிலிருந்தே நமக்கு எல்லாமே புரிந்துவிடுகிறது. கதாநாயகனை மாவீரனாகக் காட்டும் பில்டப் காட்சிகள் எல்லாமே தமிழ் சினிமாவின் வழக்கமான காட்சிகள் தான் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் மற்ற காட்சிகள், அந்தக் காட்சிகளின் நீட்சிகள் அபத்தத்திலும் அபத்தம், படு அபத்தம். ஆர்.கே.சுரேஷ் இருப்பதாலோ என்னவோ, ஒரு சீனில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகைப்படத்தைக் காட்டி ‘பேலன்ஸ்’ பண்ண பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இரண்டு மணி நேரம் முப்பத்தைந்து நிமிடங்கள் ஓடும் இந்த சினிமா, எவரையோ குறிவைத்து அல்ல ஒருவரை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.  அது க்ளைமாக்சில் அப்பட்டமாகத் தெரிகிறது.

 

“மனித இனத்திற்குள் இருக்கும் வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகளை நேர்மையான பாதையில் பயணித்தால் மட்டுமே சரி செய்ய முடியும். குறுக்கு வழியில் போனால் வன்முறையை மட்டுமே உருவாக்கும்” என இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசினார் டைரக்டர் சோலை ஆறுமுகம். இந்த ‘காடுவெட்டி’யில் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது டைரக்டரின் மனசாட்சிக்கு மட்டும் தான் தெரியும்.

மதுரை மாறன்

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

1 Comment
  1. Sathiyanarayanan says

    I like your news simply super congratulations Thanks

Leave A Reply

Your email address will not be published.