அங்குசம்
வாரத்துக்கு ஒருமுறை
வசந்தம் தரும் அங்குசமே
நாட்டு நடப்புகளை
நறுக்கென்று பேசும் நங்கூரமே
உண்மையான கோரிக்கையை
உரக்க பேசி
விடியலுக்கு விடை தேடும்
அகல் விளக்கின் சுடர் ஒளியே
நசுக்கப்பட்ட மக்களின்
நியாயமான கோரிக்கைகளை
ஒடுக்கப்பட்ட மக்களின்
உள்ளக் குமுறல்களை
துறைசார்ந்த நிர்வாகத்திற்கு
துல்லியமாக கொண்டு சென்று
கோரிக்கை நிறைவேற
தூணாக துணைநிற்கும்
தூரிகையே
சமூகம் சார்ந்த கருத்துக்களை
சான்றோடு கூறும் பொக்கிசமே
பாகன் கையில் அங்குசம்
பம்பரமாக சுழல விடும் யானையை
பத்திரிக்கை அங்குசம்
பாரெங்கும் தவழ விடும் செய்தியை
படிப்போரை வியக்க வைக்கும்
பார்த்தவுடன் வாங்க வைக்கும்
சிற்றிதழின் சிகரமே
சீர்மிகு அகரமே
வாழ்க வளர்க
வான் புகழ் தமிழாய்
வள்ளுவன் குறளாய்
என்றும் அன்புடன்
— கவிஞர் பிஎஸ் முருகேசன், மருத்துவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.