அங்குசம் பார்வையில் ‘பராரி’ திரைப்படம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யாரிப்பு : கலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ அரி சங்கர். டைரக்‌ஷன் : எழில் பெரியவேடி. நடிகர்—நடிகைகள் ; அரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு ராஜேந்திரன், ஸ்மார்ட்சுரேஷ், மகேந்திரன், பிரேம்நாத். ஒளிப்பதிவு : ஸ்ரீதர், இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங் : சாம் ஆர்டிஎக்ஸ், பாடல்கள் : உமாதேவி, ஆர்ட் டைரக்டர் : ஏ.ஆர்.சுகுமார், ரிலீஸ் பேனர் : ராஜுமுருகன், பி.ஆர்.ஓ.சுரேஷ் சந்திரா & அப்துல்நாசர்.

திருவண்ணாமலை மாவட்டம் இராஜபாளையம் தான் கதைக் களம். அங்கே வேடியப்பன் சாமியைக் கும்பிடும் இரு பிரிவு மக்களுக்கிடையே சாதி உரசல், மோதல். ‘வீரவம்ச இளைஞர் பேரவை’ என ஒரு சமூகத்தை  சிங்கத்தின் முகத்துடன் அடையாளப்படுத்துகிறார் டைரக்டர் எழில் பெரியவேடி. அதனால் அவர்கள் ஆதிக்க சாதியினரா ? அல்லது தலித் சமூகத்திற்குள்ளேயே இரு பிரிவினரா? என்பதைத் தான் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அங்குசம் இதழ்..

ஹீரோ அரிசங்கர் அந்த சமூகத்திலேயே கீழான நிலையில் உள்ளவர். ஆனால் இவரை வீரவம்சத்தைச் சேர்ந்த சங்கீதா கல்யாண் காதலிக்கிறார். அரிசங்கரின் அப்பா தீவிர திமுககாரர், பகுத்தறிவாளர். மகனைக் கூட தோழர் என அழைக்கிறார். உள்ளூருக்குள் சாதி மோதல் தொடரும் நிலையில் வயிற்றுப் பிழைப்புக்காக பெங்களூரில் உள்ள மாம்பழ ஜூஸ் பேக்டரிக்கு கொத்தடிமையாக இருதரப்பும் செல்கிறது. அங்கேயும் அரிசங்கர்-சங்கீதா கல்யாண் காதல் தொடர்கிறது. வீரவம்சத்தின் தலைவனுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பிழைக்கப் போன இடத்தில் கன்னட வெறியன் ஒருவனுக்கும் அரிசங்கருக்கும் இடையே இன ரீதியான மோதல் ஆரம்பிக்கிறது. இப்படியே படம் சாதி மோதல், கொத்தடிமை, காவிரி நீர் தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான போது  கன்னட மொழி ரவுடிகளின் வெறியர்களின் பேயாட்டம், என கதையும் பராரியாக அலைவதால், டைரக்டர் எழில் பெரியவேடியின் முதன்மையான நோக்கம் எது? எதை அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்ல வருகிறார் என்பது தெரியாமல், திரைக்கதையும் பராரியாக திக்குமுக்காடுகிறது.

கன்னட ரவுடி வாட்டாள் நாகராஜின் காவாலித்தனத்தை  தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீரைக் கொடுக்கவிடாமல் செய்து, அதை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுக்கும் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தியதற்காக டைரக்டரை பாராட்டியே ஆகவேண்டும். கேரக்டர் வாட்டாள் நாகராஜ் தான், ஆனால் கெட்டப் நம்ம ஜி போல எக்ஸ்போஸ் பண்ணிய டைரக்டரின் சாதுர்யம் பாராட்டுக்குரியது.

தயாரிப்பாளரும் ஹீரோவுமான அரிசங்கர் நடிப்பில் ரொம்பவே திணறியிருந்தாலும் க்ளைமாக்சில் அவரை ஜட்டியுடன் நிற்க வைத்து கன்னட வெறியன்கள் அடிக்கும் காட்சியில் மனதை ஈர்க்கிறார். அதே போல் ஹீரோயின் சங்கீதா கல்யாணும் பாஸ் மார்க் வாங்கிவிட்டார். ஷான் ரோல்டனின் இசையில் உமாதேவியின் வரிகளில் இரண்டு பாடல்கள் மனசை உலுக்கிவிட்டது.

இந்தியாவில் நடுத்தர வர்க்கமும் ஏழை வர்க்கமும் மனிதத்தை மட்டுமே நேசிக்கிறார்கள், சங்கிகள் தான் நாட்டை சல்லிசல்லியாக்குகிறார்கள் என்பதை பொளேரென சொல்லியதற்காக டைரக்டர் எழில் பெரியவேடிக்கு சபாஷ்.

 

— மதுரை மாறன்.   

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.