அனிருத் வெளியிட்ட ‘வித் லவ்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
Zion Films & MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படமான ‘வித் லவ்’ ( With Love ) படத்திலிருந்து முதல் சிங்கிளான “ஐயோ காதலே” ரொமான்ஸ் மெலடி பாடல் வெளியாகியுள்ளது
இதை இசையமைப்பாளர் அனிருத் தன் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள மனதை மயக்கும் இந்த அற்புதமான மெலடி பாடலை, மோகன் ராஜன் எழுதியுள்ளார். விஜய்நரேன் பாடியுள்ளார்.
‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி ‘ வித் லவ்’ ஐ உள்ளார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.
ஒளிப்பதிவு: ஷ்ரேயாஸ் கிருஷ்ணா எடிட்டிங்: கே.சுரேஷ்குமார், கலை இயக்கம்: ராஜ்கமல் உடை வடிவமைப்பு :ப்ரியா.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.