அங்குசம் பார்வையில் ‘ மனிதன் தெய்வமாகலாம்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு: வயோம் எண்டெர்டெய்ன்மெண்ட் விஜயா சதீஷ், டைரக்டர்: டென்னிஸ் மஞ்சுநாத், ஆர்டிஸ்ட்: செல்வராகவன், குஷி ரவி, ஆர்.எஸ்.சதீஷ், கெளசல்யா, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரா, பேபி லிர்த்திகா, ஒளிப்பதிவு: ரவிவர்மா, இசை: ஏ.கே.பிரியன், எடிட்டிங்: எஸ்.தீபக், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: தேனி தமிழ், புரொடக்சன் மேனேஜர்: அசோக் நிவேதிதா, பிஆர்ஓ: ரேகாதயாரிப்பு: வயோம் எண்டெர்டெய்ன்மெண்ட் விஜயா சதீஷ், டைரக்டர்: டென்னிஸ் மஞ்சுநாத், ஆர்டிஸ்ட்: செல்வராகவன், குஷி ரவி, ஆர்.எஸ்.சதீஷ், கெளசல்யா, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரா, பேபி லிர்த்திகா, ஒளிப்பதிவு: ரவிவர்மா, இசை: ஏ.கே.பிரியன், எடிட்டிங்: எஸ்.தீபக், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: தேனி தமிழ், புரொடக்சன் மேனேஜர்: அசோக் நிவேதிதா, பிஆர்ஓ: ரேகா

40 வீடுகள் இருக்கும் ஒரு மலையடிவார கிராமத்தில் சாலை, குடிநீர், பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி என எந்த அடிப்படைவசதிகளும் இல்லை. இதற்காக அதிகாரவர்க்கம், ஆளும்வர்க்கத்திற்கு தொடர்ந்து மனு போட்டுக் கொண்டே இருக்கிறார் ஒரு முதியவர். அந்த ஊருக்குப் பக்கத்து ஊரில் தனது மச்சான் [ தயாரிப்பாளர் ஆர்.எஸ்.சதீஷ் ] சைக்கிளில் பதனீர் விற்றுப் பிழைக்கிறார் செல்வராகவன். இவரது மனைவி கெளசல்யா, அருகே இருக்கும் சின்ன ஃபேக்டரியில் தினக்கூலி வேலை பார்க்கிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இன்னொரு பக்கத்து கிராமத்திலிருந்து  குஷிரவியை கல்யாணம் பண்ணுகிறார் செல்வராகவன். கல்யாணம் ஆகிவிட்டதால் மனைவி பெயரில் ‘செல்வி தாபா’ என்ற சாலையோர ஓட்டலை ஆரம்பிக்கிறார் செல்வராகவன். அக்கா கெளசல்யாவும் மச்சான் சதீஷும் சப்போர்ட் பண்ணுகிறார்கள். ஒரு நாள் இரவு சிறுமி லிர்த்திகா, பள்ளிக்கூடம் விட்டதும் ஓட்டலுக்குச் சென்று மாமா செல்வராகவனைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது பாம்பு கடித்து இறக்கிறாள்.

இதனால் அந்த கிராமமே சோகமாகிறது. எல்லாத்துக்கும் காரணம் ரோடு வசதியும் விளக்கு வசதியும் இல்லாதது தான் என்பதால் செல்வாவும் அந்த முதியவரும் எம்.எல்.ஏ.ஒய்.ஜி.மகேந்திராவைப் பார்க்கப் போகிறார்கள். அங்கே ஒய்.ஜி.மகேந்திராவின் மருமகன் மைம்கோபிக்கும் செல்வாவுக்கும் இடையே லைட்டா உரசல் ஏற்படுகிறது. தீடீர்னு கந்துவட்டி காமவெறியனாகி பல பெண்களைச் சூறையாடுகிறார் மைம் கோபி. செல்வாவின் ஓட்டலை சூறையாடுகிறார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இப்படியே தாறுமாறாக சுத்திச்சுத்தியடிக்குது கதை. ஊருக்கு ரோடு போடும் போராட்டமா? இல்லை சிறுமி சாவுக்கு நீதி கேட்கும் போராட்டமா? மைம் கோபியைப் போட்டுத்தள்ளும் போராட்டமான்னு நமக்கு விளங்குவதற்குள் நாக்குத் தள்ளிருச்சு. காட்சிகளில் படு செயற்கைத்தனமும் அபத்தமும் நிரம்பி வழிந்து நம்மை ரொம்பவே சோதிக்கிறது.

அனுபவசாலியான டைரக்டர் செல்வராகவனுக்கு தனி மனிதனாக கதையைத் தாங்கும் சக்தி இல்லை. அவரின் நடிப்பிலும் அமெச்சூர்த்தனம். அவரது மனைவி குஷி ரவி இறந்த பின் புரண்டு அழும் காட்சியில் ரொம்பவே திணறியிருக்கார் செல்வா. இவரே இப்படின்னா தயாரிப்பாளர் சதீஷின் நிலைமை ரொம்பவே பரிதாபமா இருக்கு. படத்துல கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல்னா அது ஹீரோயின் குஷிரவி தான். பார்க்க லட்சணமா, அம்சமா இருக்காரு.

படம் பார்ப்பவர்கள்..அவரவர் மனநிலையைப் பொறுத்து என்ன வேண்டுமானாலும் ஆகலாம்.

அங்குசம் பார்வையில் ‘ மனிதன் தெய்வமாகலாம்’ 32/100

—   ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.