அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விஜய்க்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ் !

அண்ணாமலை கொடுத்த அரசியல் ஆலோசனைகள்

திருச்சியில் அடகு நகையை விற்க

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமானநிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியது, “காயம்பட்டு மருத்துவமனையில் உள்ள கட்சி நிர்வாகியை பார்க்க வந்திருக்கிறேன். ஓபிஎஸ் மற்றும் டிடிவி இருவரும் கூட்டணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இருவரிடமும் தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைக்கும்போது அதைத்தான் சொல்கிறேன். டிடிவி அண்ணனிடம் இதைதான் வலியுறுத்திருக்கிறேன்.

அண்ணாமலை

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கிருஷ்ணசாமி மற்றும் ஜான்பாண்டியன் இருவரும் வெளியிட்டு இருக்கக்கூடிய பத்திரிக்கை குறிப்பை பார்த்தேன். அவர்கள் தரப்பிலிருந்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். அதுகுறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. பாஜகவின் நிலைப்பாடு முத்துராமலிங்கத் தேவர் ஐயாவை கடவுளாக நினைக்கிறோம். எப்பொழுதும் அவருக்கு அந்த மரியாதை கொடுக்கிறோம். இமானுவேல் சேகரன் அய்யாவின் நினைவு நாளுக்கு செல்கிறோம். நானும் செல்கிறேன். எங்களை பொறுத்தவரையில் இதில் எதுவும் சர்ச்சை இல்லை. கருத்து சொல்லப்பட்டு விட்டது. நயினார் நாகேந்திரன் பேசிவிட்டார். மீண்டும் அதை நோண்ட வேண்டாம். அது அழகல்ல. காலம் கனிந்து வரட்டும். பொறுத்திருங்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சகோதரர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். மதுரையில் மாநாடு நடத்தியிருக்கிறார். 24 மணி நேரம் செய்யக்கூடியது தான் கவர்னன்ஸ் பாலிடிக்ஸ். கட்சி தலைவராக 24மணிநேரமும் இருக்க வேண்டும். தமிழக மக்கள் எதிர்பார்ப்பது தமிழக வெற்றிக்கழகம் தங்களை ஒரு சீரியசான கட்சி என்று சொல்கிறார்கள். அதே வேகத்தை 24 மணி நேரம் பார்க்க வேண்டும். சனிக்கிழமை மட்டும் மக்களை பார்ப்பேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மக்களை பார்ப்பேன். வார நாட்களில் பார்க்கமாட்டேன் என்பது புதிதாக வந்திருக்க கூடிய அரசியல் கட்சிக்கு திமுகவுக்கு எதிரி என்று தமிழக வெற்றி கழகம் பறை சாற்றினால், அந்த வேகத்தை களத்தில் காட்ட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை முழுமையாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், பெண் தலைவர்கள் முழுநேரமாக வேலை பார்க்கிறார்கள். கட்சித்தலைவர் மக்களை வீக் எண்டில் தான் பார்ப்பேன் என்றால் எந்தளவுக்கு சீரியஸாக அரசியல் களத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்ற கேள்விக்குறி மக்கள் வைக்கிறார்கள்.

https://www.livyashree.com/

தவெக மாநாடுகாவல் துறையைப் பொறுத்தவரை, தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் அனுமதி மறுப்பதாக சொல்கிறார்கள். நாங்கள் யாத்திரையில் நடத்தும் போதும் அனுமதி மறுத்தார்கள். எதிர்க்கட்சியாக இருப்பது அதற்கு இதுபோன்ற எதிர்ப்புகள் வரும். அப்படி காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை, என்றால் நீதிமன்றத்திற்கு செல்லலாம். தமிழக வெற்றி கழகத்தை பார்த்து திமுக எப்போது பயப்படும் என்றால், முழுமையாக அரசியல் களத்திற்கு வந்தால் தான்.  ஒரு இடத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்றால் அரை கிலோ மீட்டர் தள்ளி வையுங்கள். மக்கள் வருவார்கள் ஆங்கிலத்தில் பேசக்கூடிய பேட்டியை தமிழில் மொழியாக்கம் செய்யும்போது, கருத்துக்கள் தவறாக வெளிவருவது வருத்தப்படக்கூடிய விஷயம். இது துரதிஷ்டவசமானது. இதுதொடர்பாக அந்த நாளிதழ் ஆசிரியரிடம் பேசினேன். அதை சரி செய்வதாக கூறி இருக்கிறார்கள். அதாவது மக்களுடைய எதிர்ப்பலை என்பது என்னுடைய நவம்பர் டிசம்பரில் தெரிய வேண்டும். தேர்தலுக்கு அதிக நாட்களுக்கு முன்பாகவே உச்சத்திற்கு செல்லக்கூடாது. ஜனவரி பிப்ரவரியில் தான் பீக்காக வேண்டும். அப்போதுதான் தேர்தல் வரை செல்லும். நவம்பர் டிசம்பரில் எதிர்ப்பலையை பார்க்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

எதிர்க்கட்சிகள் மாநாடு போடும்போது மக்கள் பங்கேற்க வேண்டும். அதுதான் அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி அதற்கு முன்பு நடக்க வேண்டியது அவசியம் அல்ல. அதிமுக ஒரு யாத்திரை நடத்துகிறார்கள். பாஜக மண்டல மாநாடு நோக்கி செல்கிறது. நவம்பர் டிசம்பரில் பொதுக்கூட்டங்களில் மக்கள் பங்கேற்கும் போது அரசியல் மாற்றம் தெரியும். நான் பேசுவது அவர்கள் மாற்றி போடும்போது விவாதமாக மாறிவிடுகிறது. ராமர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தது எதிர்பார்த்ததுதான். இன்றைக்குகூட்டணியில் இல்லை என்றாலும் முதலில் ஆதரவு கொடுத்திருந்தார். எப்போதும் தொடர்ந்து பார்க்க கூடியது பாராளுமன்றத்தில் பாரத பிரதமர் மோடி ஐயாவிற்கு ஆதரவாக தான் எப்போதும் பேசி இருந்திருக்கிறார்” எனக் கூறினார்.

 

  —   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.