முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் அறிவிப்பு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணாக்கர்களின் நலன்கருதி தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய ஆதிதிராவிடர்  நல ஆணையர், சென்னை – 05 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண ந.க.எண்.எ3/15820/2025 மற்றும் ஓ2/13735/2023 நாள்:17.06.2025.-ன்படி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடம் விவரம்:

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

  1. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்; நிலையில் – 06 காலிப்பணியிடங்கள்
  2. பட்டதாரி ஆசிரியர் நிலையில் -14 காலிப்பணியிடங்கள்
  3. இடைநிலை ஆசிரியர் நிலையில் -16 காலிப்பணியிடங்கள்

மாதாந்திர தொகுப்பூதியம்:

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

  1. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்; நிலையில் -18,000/-
  2. பட்டதாரி ஆசிரியர் நிலையில் – 15,000/-
  3. இடைநிலை ஆசிரியர் நிலையில் -12,000/-

கல்வித் தகுதி மற்றும்  முன்னுரிமை:

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

  1. வரையறுக்கப்பட்ட கல்வித்  தகுதிகளுடன்  ஆசிரியர்  தகுதித்   தேர்விலும்   தேர்ச்சி   பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்)
  2. வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் (TET)
  3. இடைநிலை ஆசிரியர்கள்  நியமனத்தில்  பட்டியலினத்தவர்க்கு  முன்னுரிமை  வழங்கப்படும்.
  4. பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  1. விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ /அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(முகவரி: மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி.)

  1. காலிபணியிட விவரங்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், திருச்சி தனி வட்டாட்சியர் (ஆதிந) அலுவலகம் மற்றும் துறையூர் தனிவட்டாட்சியர் (ஆதிந) அலுவலக அறிவிப்பு பலகையில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

கால வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 26.06.2025 மாலை 05.00 மணிக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டியது. மேற்படி கால நிர்ணயத்திற்கு பின்பு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.