2026 தொழிற்பள்ளி அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு:
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2026 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000/- மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000/- செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28.02.2026 இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். ஆட்சித்தலைவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.