அங்குசம் சேனலில் இணைய

அங்குசம் பார்வையில் ‘அந்த 7 நாட்கள்’ 

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘பெஸ்ட் காஸ்ட் ஸ்டுடியோஸ்’ முரளி கபீர்தாஸ். டைரக்‌ஷன் : எம்.சுந்தர். ஆர்ட்டிஸ்ட் : அஜிதேஜ், ஸ்ரீஸ்வேதா, கே.பாக்யராஜ், நமோ நாராயணன், தலைவாசல் விஜய், ஒளிப்பதிவு : கோபிநாத் துரை, இசை : சச்சின் சுந்தர், எடிட்டிங் & வி.எஃப்.எக்ஸ் : முத்தமிழன் ராமு, ஸ்டண்ட் : ராகேஷ் ராக்கி, ஆர்ட் டைரக்டர் : டி.கே.தினேஷ்குமார், பி.ஆர்.ஓ : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.

ஹீரோ அஜிதேஜ் வானியல் ஆராய்ச்சி மாணவர். முழு சூரிய கிரகணத்தை டெல்ஸ்கோப் வழியாக பார்த்து வித்தியாசமான கோணத்தில்  கட்டுரை சமர்ப்பிக்கும் மாணவருக்கு அமெரிக்காவின் நாசாவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் பேராசிரியர். இதனால் பல்வேறு திறன் கொண்ட டெலஸ்கோப்பைப் பார்க்கும் அஜிதேஜ், இறுதியாக 300 ஆண்டுகள் பழமையான டெலஸ்கோப்பை வாங்கி வந்து பிர்லா கோளரங்கத்தின் வெட்ட வெளியில் சூரியகிரகணத்தை ஆராய்ச்சி செய்கிறார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அப்போது இவரின் கண்களுக்குள் அபூர்வ சக்தி ஒன்று ஊடுருவுகிறது. இந்த கண்களுடன் யாரைப் பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் அவர்களின் கண்களுக்குள் இந்த அபூர்வசக்தி ஊடுருவி, சில வினாடிகளிலோ, சில நாட்களிலோ மரணம் ஏற்படுகிறது. இந்த சக்தியால் ஒரு நாயும் ஒரு மனிதனும் பலியாகின்றனர். இந்த நிலையில் தான் வக்கீல் பயிற்சியில் இருக்கும் ஸ்ரீஸ்வேதாவுடன் அஜிதேஜுக்கு காதல் ஏற்படுகிறது. ஆனால் தனக்கிருக்கும்  சூர்ய சக்தியால் ஸ்ரீஸ்வேதாவைத் தவிர்க்கிறார்.

அந்த 7 நாட்கள்ஒரு நாள் அஜிதேஜிடமே ஸ்வேதா கேட்க, தனக்கிருக்கும் கொல்லும் சக்தியைச் சொல்லிக் கண் கலங்குகிறார் அஜிதேஜ். அதெல்லாம் எதார்த்தமா நடப்பது என ஆறுதல் சொல்லி, தன்னைப் பார்க்கச் சொல்கிறார் ஸ்வேதா. அஜிதேஜ் அவரின் கண்களைப் பார்க்க, 7 நாட்களில் ஸ்வேதா மரணமாகிவிடும் பகீர் தகவலையும் சொல்கிறார். அந்த 7 நாட்களில் ஸ்வேதா மரணமடைந்தாரா? உயிர் பிழைத்தாரா? என்பதன் சூப்பர் க்ளைமாக்ஸ் தான் இந்தப் படம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ரொம்ப ரொம்ப வித்தியாசமான கண்டெண்ட் சினிமா வரிசையில் இப்படம் நம்மளை ரொம்பவே ரசிக்க வைக்கிறது. இடைவேளைக்கு முன்பு இருபது நிமிடங்கள் அஜிதேஜ்-ஸ்ரீஸ்வேதா லவ் எபிசோட் கொஞ்சமே கொஞ்சம் போரடித்தாலும் அது அவசியம் தான் என்பதை இடைவேளை விடும் நேரத்தில் ட்விஸ்ட் வைத்து, அதன் பிறகு செம பிரிலியண்டாக திரைக்கதையை ’கிரி’ப்பாக கொண்டு போய் நம்பும்படியான க்ளைமாக்ஸை வைத்து அசத்திவிட்டார் டைரக்டர் எம்.சுந்தர்.

300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் வானியல் ஆராய்ச்சியில் வெற்றிகண்டவன் [ தலைவாசல் விஜய் கேரக்டர் ] என்பதையும் சித்தவைத்தியம், நாட்டு வைத்தியத்தில் மிகச் சிறந்த நிபுணன் என்பதையும் க்ளைமாக்ஸில் முடிச்சுப் போட்டு சபாஷ் வாங்குகிறார் சுந்தர். இப்போது தமிழ்நாட்டில் ரொம்பவும் சென்சிட்டிவான பிரச்சனைன்னா.. அது தெருநாய்க் கடி பிரச்சனை தான். அதற்கு  மூடநம்பிக்கையை நம்பாமல், நாட்டு வைத்தியத்தை நம்பி சுபமான க்ளைமாக்ஸ் வைத்த வகையில் டைரக்டர் சுந்தர் பாராட்டுக்குரியவர்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இதற்கடுத்த பாராட்டுக்குரியவர்கள் ஹீரோ அஜிதேஜும் ஹீரோயின் ஸ்ரீஸ்வேதாவும் தான். லவ் எபிசோட்டில் பார்க்க லட்சணமாகவும் பாந்தமாகவும் இருக்கிறார் ஸ்வேதா. ஆனால்  வெறிநாய் கடித்த பின் உடலிலும் செய்கையிலும் ஏற்படும் மாற்றங்களை, நாய் போல உறுமி, ஊளையிடுவதை, உயிர் வதையில் துடிப்பதை தனது நடிப்பால் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்வேதா. இந்த சீனில மேக்கப் ரொம்ப தத்ரூபம்.  தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்றாலும் 7 நாட்களில் காதலியைக் காப்பாற்ற அல்லாடுவதும் காதலிக்காக அதே போல் மாறுவதும் என நடிப்பில் நல்ல ஸ்கோர் பண்ணியுள்ளார் அஜிதேஜ். இருவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துக்கள்.

படத்தின் க்ளைமேக்ஸில் வரும் அந்த ஸ்டண்ட் கம்போஸிங் மிக நேர்த்தியாகவும் நம்பும்படியாகவும் வடிமைத்து சபாஷ் பெறுகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ராகேஷ் ராக்கி. இந்த ஸ்டண்ட் சீனில் அஜிதேஜின் உழைப்பும் அபாரம்.  படத்தின் முற்பகுதியில் பின்னணி இசையும் பாடலும் சுமாராக இருந்தாலும் 7 நாட்கள் விசயம் ஸ்கிரிப்ட்டுக்குள் வந்ததும் பின்னணி இசையாலும் ஒரு பாடலாலும் படத்திற்கு ஜீவனாக இருக்கிறார் சச்சின் சுந்தர்.

அமைச்சராக கே.பாக்யராஜ், அவரது டாக்டர் மகளாக வரும் நடிகை, மெடிக்கல் ரெப்பாக வரும் நடிகர் ஆகியோரை ஸ்கிரிப்டுக்குள் கரெக்டாக கொண்டு வந்துவிட்டார் டைரக்டர். ஸ்ரீஸ்வேதாவின் அப்பாவாக வரும் இன்ஸ்பெக்டர் நடிகர், அஜிதேஜின் நண்பனாக வரும் நடிகர், ஹீரோ அஜிதேஜின் அப்பாவாக நமோ நாராயணன் ஆகியோருக்கும் நல்ல வாய்ப்பு கொடுத்திருப்பதால் கவனிக்க வைக்கிறார்கள்.

கொடைக்கானலுக்கு கதை நகர்ந்த பின் கேமராமேன் கோபிநாத் துரை ரொம்பவும் சப்போர்ட்டாக இருக்கிறார். நாட்டுவைத்தியரைத் தேடி அஜிதேஜ் ஓடும் குறுகலான மலைப்பாதையில் கோபிநாத்தின் கேமராவும் நன்றாகவே ஓடியிருக்கிறது.

‘அந்த 7 நாட்கள்’ முற்றிலும் புது அனுபவம், ரொம்ப சுவாரஸ்யம்.

 

   —    ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.