விருதுநகர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரூ. 2 லட்சம் பறிமுதல் 12 பேர் கைது செய்து நடவடிக்கை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரூ. 2 லட்சம் பறிமுதல் 12 பேர் கைது செய்து நடவடிக்கை !

லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றமே என்றாலும் இதில் பயனடைவது இரு தரப்பினரும் தான், இதில் எங்கு சிக்கல் உருவாகிறது என்றால் லஞ்சம் கொடுப்பதற்கு விருப்பமில்லை என்றால் இந்த விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை இடம் செல்கிறது.

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியை பின்தொடர.....

இங்கு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் அவர்களது வேலையை முடிக்க எனக்கு லஞ்சம் கொடுக்க முயல்கிறார்,என்று அரசு அதிகாரிகள் எவரும் இதுவரை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்ததும் இல்லை ? லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் காணொளி தான் வெளியே வருகிறது லஞ்சம் கொடுப்பவரின் காணொளி என்று எதுவுமே வெளியே வந்ததில்லை.

ஊழல் தடுப்புச் சட்டம் 1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது, அந்த சட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டு,லஞ்சம் வாங்குவது, அரசு திட்டங்களில் ஊழல், சொத்து குவிப்பு,போன்ற குற்றங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், அபராத தொகையுடன் 7 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என இந்த சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது, குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

குறைவான முதலீட்டில் நிலையான வருமானம் -

இந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் மாவட்டம் முழுவதும், பொறிவைத்து பிடித்த வழக்கு, அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை வழக்கு, அரசு திட்டங்களில் முறைகேடு செய்த வழக்கு, அரசு அலுவலர்கள் சொத்து குவிப்பு வழக்கு உட்பட மொத்தம் 14 வழக்கு 12 பேர் கைது ரூ.2,70,820./ பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும். கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், மின்வாரிய உதவி பொறியாளர், நகர் ஊரமைப்பு ஆய்வாளர், உணவு பாதுகாப்பு அலுவலர்,ஊராட்சி தலைவர்,மற்றும் சமூக நலத்துறை ஊர் நல அலுவலர்கள் என அரசு மற்றும் பொது அலுவலர்கள் உட்பட மொத்தம் 12 நபர்கள் லஞ்சம் வாங்கும்போது அவர்களிடமிருந்து ரூ.1,55,500/- கைப்பற்றப்பட்டு கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பொது அரசு ஊழியர்கள் அரசு அலுவலகங்களில், பொதுமக்களிடம் அவர்கள் வேலையை செய்து தர லஞ்சப்பணம் பெறுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் இரண்டு அரசு அலுவலகங்களில், மாவட்ட துணை ஆய்வுகுழு அலுவலர் தலைமையில் திடீர் சோதனை செய்யப்பட்டு அவர்களிடமிருந்து லஞ்சப்பணம் என சந்தேகிக்கப்பட்ட மொத்தம் ரூ 1,15,320/- பணம் கைப்பற்றப்பட்டு, அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இது தவிர மேலும் அரசு அலுவலர்கள் செய்த முறைகேடுகள் மற்றும் அரசு அலுவலர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்தது தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த இரகசிய தகவலின்பேரில், ரகசிய அறிக்கைகள் அனுப்பப்பட்டு, அதனடிப்படையில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொதுமக்கள் அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. அரசு அலுவலர்கள், பொதுமக்களிடம் பணமாகவோ அல்லது பொருளாகவோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஏஜென்டுகள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் நேரடியாக தொடர்பு கொண்டு புகாராகவோ அல்லது தகவலாகவோ தெரிவிக்கலாம்.

மேலும், அலுவலக தொலைபேசி எண் 04562-252678 மற்றும் 04562-252155 எண்களிலோ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கைபேசி எண் 94981-05882, காவல் ஆய்வாளர்(1) 94450-48975 மற்றும் காவல் ஆய்வாளர் (2) 94981-06118 ஆகியோர்களது கைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் பெயர் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.

இவ்வாறு விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

-மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.