புத்தாண்டே வருக புது நம்பிக்கை தருக !
புத்தாண்டே வருக புது நம்பிக்கை தருக
இறைவனின் அருள் வரமும் ஆசீரும்
இப்புத்தாண்டில் நிறைந்திருக்கட்டும்
வளமையும் செழுமையும் வாழ்வாகட்டும்
உயர்வும் மகிழ்ச்சியும் உமதாகட்டும்
நம்பிக்கையும் நலனும் தொடரட்டும்
புதுமையும் திறமையும் மேலோங்கட்டும்
செல்வமும் பதவியும் உமை சேரட்டும்
ஏற்றமும் அன்பும் உமை சூழட்டும்
சுற்றமும் நட்பும் வாழ்த்தட்டும்
பகைமையும் வெறுப்பும் பறந்தோடட்டும்
வறுமையும் பிணியும் நீங்கட்டும்
உண்மையும் நீதியும் செழித்தோங்கட்டும்
கனவுகள் திட்டங்கள் நனவாகட்டும்
இலட்சியங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்
புத்தாண்டே வருக புது நம்பிக்கை தருக
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஜோ சுபா
திருச்சி