APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவாக — கனவுகளை காணுங்கள்!
இன்று நம் முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி மற்றும் கனவுகளின் பேரறிஞர் APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள். அவரை நினைவு படுத்தி அவர் சொன்ன மேற்கோள் ஒன்றை பார்ப்போம்:
“கனவு காணுங்கள்… கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்.”
இந்த வார்த்தைகள் எப்போதும் இளைஞர்களுக்காக மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு இல்லத்தரசியும், வயதானவரும் மனதில் எழும் விருப்பங்களைப் பின்பற்ற உத்வேகம் அளிக்கும். வயது ஒரு எண்ணிக்கையே; கனவு காண எந்தவொரு காலமும் too late இல்லை.
இதற்கு எடுத்துக்கதாக நான்….சின்ன வயதிலிருந்து நான் என் மனதில் விரும்பிய ஒவ்வொரு ஆசையிலும் கால் தடம் பதிக்க ஆரம்பித்திருக்கிறேன்… கனவுகளுக்கு வயது வரம்பு இல்லை… குரோசே, ஆசிரியராக செயல், மற்றும் எழுத்து ஆர்வத்திலும் என் ஆழமான விருப்பங்களைப் பின்பற்றுகிறேன் … எல்லாம் என் உள்ளத்தின் ஆழமான விருப்பங்கள். நான் கனவிலும் நினைக்காத பாதையில் இன்று நடந்து வருகிறேன். காரணம் எனது கனவு,,, கனவு நோக்கிய பயணம்… அதை அடைய நான் காட்டிய தீவிரம்… “Focus on your dreams”

இந்தக் கதை நமக்கு சொல்லும் முக்கிய செய்தி: கனவுகள் யாருக்கோ அல்ல, அது உங்களுக்கே. ஒவ்வொரு மனிதருக்கும், உங்கள் மனதில் எழும் விருப்பங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு பயணம் தொடங்கும் சக்தி உள்ளது. கனவுகளை காணுங்கள், சிந்திக்கவும், செயல்படுத்தவும், அதில் கால் தடம் பதியுங்கள். அது உங்களையே உங்கள் உண்மையான இலக்கிற்கு கொண்டு செல்லும்.
வாழ்க்கை ஓட்டம் அல்ல — அது கனவுகளை அறிந்து, அதை உணர்ந்து, வாழ்வில் நனவாக்கும் பயணம். வயது ஒரு வரம்பு அல்ல; உங்கள் கனவுகள் உங்கள் உண்மையான சக்தியாகும்.
“ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு.”
“ஒரு முறை வந்தால் அது கனவு. இரு முறை வந்தால் அது ஆசை. பல முறை வந்தால் அது லட்சியம்.”
பின்பற்றுவோம் நமது அக்கினி நாயகன் காட்டிய பாதையில்…!
— மதுமிதா
Comments are closed, but trackbacks and pingbacks are open.