திருச்சி அப்போலோ மருத்துவமனை – ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து சாதனை !

0

திருச்சி அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் ,கணைய, பித்தநாள சிகிச்சைப் பிரிவு வெற்றிகரமான பயணத்தை தொடர்கிறது. ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து சாதனை. 

நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான். உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அகற்றுவது, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பது என மிக முக்கியமான பணிகளை செய்யும் உறுப்பாக கல்லீரல் உள்ளது. ஆனால் சமீபகாலமாக கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவது உடனடி கவனம் மற்றும் சிகிச்சைக்கான அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

திருச்சி அப்போலோ மருத்துவமனை - கல்லீரல் மாற்று சிகிச்சை மருத்துவர்கள்
திருச்சி அப்போலோ மருத்துவமனை – கல்லீரல் மாற்று சிகிச்சை மருத்துவர்கள்

கல்லீரல் நோய் பாதிப்புகளை தீவிர பாதிப்பு, நாள்பட்ட பாதிப்பு என இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கலாம். இதில் தீவிர கல்லீரல் பாதிப்புகள் திடீரென ஏற்படக் கூடியவை. அதேவேளையில் நாள்பட்ட பாதிப்புகள் உடல்பருமன், மதுப் பழக்கம், வைரஸ் தொற்றுகளால் ஏற்படக் கூடியவை. இவை ஏற்படுவதற்கு சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட பிடிக்கலாம்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சோர்வு, உடல், கண்களில் மஞ்சள் பூத்திருப்பது, சரும அரிப்பு, கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம், காரணமில்லாமல் எடை குறைதல், எளிதில் காயமடைவது, சிறுநீர் கருப்பாக செல்வது, மலம் வெளிறிய நிலையில் இருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். ரத்தத்தில் நச்சுப் பொருள்களை அகற்றுவதில் கல்லீரலுக்கு சிரமம் ஏற்படுவதால் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

திருச்சி அப்போலோ மருத்துவமனை - கல்லீரல் மாற்று சிகிச்சை மருத்துவர்கள்
திருச்சி அப்போலோ மருத்துவமனை – கல்லீரல் மாற்று சிகிச்சை மருத்துவர்கள்

இத்தகைய அறிகுறிகள் கல்லீரல் ஏற்பட்டுள்ள பாதிப்பையும், செயல்பட முடியாத நிலையையும் வெளிப்படுத்துபவை என்பதால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக மிக அவசியம் என்று திருச்சி அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் குமரகுருபரன் தெரிவித்தார்.

அப்போலோ மருத்துவமனை கல்லீரல் மாற்று சிகிச்சை தமிழ்நாடு தலைவர் இளங்குமரன் கூறுகையில், ”கல்லீரல் நோய் பாதிப்பின் இறுதி நிலையில் உள்ளவர்களுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. உறுப்பு தானம் செய்வோரைப் பொருத்து இரண்டு வகைகளில் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. உயிரிழந்தவரின் உறுப்பு (கடாவரிக்) அல்லது உயிருடன் இருப்பவரிடம் இருந்து பெறப்படுவது என இரண்டு வகைகளில் கல்லீரல் பெறப்படுகிறது.

”கல்லீரல், கணைய, பித்தநாள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒன்றரை வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது வரை 2 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு அவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் என்று அப்போலோ மருத்துவமனையின் இரைப்பை ,குடல் அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் விஜய் கணேசன் தெரிவித்தார்.

திருச்சி அப்போலோ மருத்துவமனை கூடுதல் துணை தலைவர், பிரிவு தலைவர் ஜெயராமன் அனைவரையும் வரவேற்றார். மருத்துவ நிர்வாக அதிகாரி சிவம் நன்றி தெரிவித்தார்.

– சந்திரமோகன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.