ரூ 90 கோடிக்கு செக் ! முனியப்பன் சாமிக்கே விபூதி அடித்த பக்தர் !

0

ரூ 90 கோடிக்கு செக் ! முனியப்பன் சாமிக்கே விபூதி அடித்த பக்தர் !

பென்னாகரம் அருகே உள்ள முனியப்பன் கோவில் உண்டியலில் பக்தர் ஒருவர் ரூ 90 கோடிக்கு மேல் வங்கி காசோலையை  காணிக்கையாக போட்டதால் கோவில் அலுவலர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பி அக்ரஹரத்தில் உள்ளது  பிரசித்தி பெற்ற  முனியப்பன் கோவில்  இந்த கோவிலுக்கு நாள்தோறும் வெளிமாவட்ட பக்த்தர்கள் மட்டுமல்லாமல் கர்நாடக போன்ற அண்டை மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து  வழிப்பட்டு செல்கின்றனர்.

இந்த கோவிலில் மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஜூன் 27 அன்று வழக்கம்போல் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் அறநிலையத்துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தப்போது
பக்தர் ஒருவர் அளித்திருந்த இரண்டு வங்கி காசோலைகள்  உண்டியலில் இருந்துள்ளது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

முனியப்பன் சாமி
முனியப்பன் சாமி

அதில்  ஒரு காசோலையில் எழுதப்படாமலும்  மற்றொன்றில்  , ரூ.90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 என எழுதியிருந்ததை கண்டு அதிகாரிகள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பும் குழப்பும் ஏற்பட்டது. அந்த காசோலையில், ஜி . மகேந்திரன் பி முனியப்பன் என்ற பெயரில் சவுத் இந்தியன் வங்கிக்கான காசோலை என தெரியவந்தது. அந்த காசோலைக்கான கணக்கு, தர்மபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளது

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ கோயில் உண்டியலில் ரூ.90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 என எழுதியிருந்த காசோலையை மகேந்திரன் என்ற பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார் அந்த காசோலையை எடுத்துச்சென்று சம்மந்தப்பட்ட வங்கியில் விசாரித்த போது, அந்த கணக்கில் பணம் எதுவும் இல்லை. அந்த காசோலையை யார் போட்டார்கள் என விசாரித்து வருகிறோம் என்றனர்.

ரூ 90 கோடிக்கு செக்
ரூ 90 கோடிக்கு செக்

சில மாதங்களுக்கு முன் தர்மபுரியில் பிரசித்தி பெற்ற குமாரசாமிபேட்டை முருகன் கோயிலில் பக்தர் ஒருவர் தனக்குள்ள கடன்களை பெயருடன் குறிப்பிட்டு அதன் விவரங்களை எழுதி உண்டியலில் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோடியில் கடன் இருக்கு கந்தா ! கோடிக்கு மேல் வரனும் முருகா ! என்ற தலைப்பில் அங்குசம் செய்தி வெளியிட்டிருந்தது
தற்போது பென்னாகரம் அருகே கோயில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகை கொண்ட வங்கி (blank cheque) காசோலைகளை போடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கா. மணிகண்டன்

இதையும் படிங்கள்.. 

கோடிக்கு மேல் கடன் இருக்கு கந்தா ! கோடிகளுக்கு மேல் வரனும் முருகா!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.