கோடிக்கு மேல் கடன் இருக்கு கந்தா ! கோடிகளுக்கு மேல் வரனும் முருகா!

1

கோடிக்கு மேல் கடன் இருக்கு கந்தா! கோடிகளுக்கு மேல் வரனும் முருகா! பக்தரின் வினோத வேண்டுதல் கடிதத்தில் 1.கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் இந்தக் கடன் அனைத்தும் விரைவாக அடைய வேண்டும் என்றும், 10 கோடியே 10 லட்சம் கொடுத்து பணம் விரைந்து வர வேண்டும் என அந்த கடிதம் கோவிலில் இருந்தவர்களுக்கு அருள் வராத குறையாகிவிட்டது. தருமபுரி நகரின் மைய்ய பகுதியில் உள்ள குமாரசாமிப்பேட்டையில் சிவ சுப்பிரமணியர் கோயில் . இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது

இந்தக் கோயிலில் உண்டியல்கள் சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் தைப்பூசத் தேர்த் திருவிழா முடிவுற்ற நிலையில் நேற்று உண்டியல்கள் தொகை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் சங்கர், மற்றும் கோயில் செயல் அலுவலர் பரமேஸ்வரன், அறங்காவலர் குழு தலைவர் சேகரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் நடந்தது.

2 dhanalakshmi joseph

உண்டியல்களில் இருந்த பணம் தங்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவை கணக்கிடப்பட்டு கோயிலுக்கான வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இதுதவிர, உண்டியலில் பக்தர் ஒருவரின் விபரம் குறிப்பிடப்படாமல் இருந்த இந்த கடிதத்தில்

4 bismi svs

செந்தில் – 25,0000
சக்திவேல் 5,00000
ஜோதிகா nurse – 55,0000
மாதேஷ் 1,000000
செல்வம் 6,000000
பைனான்ஸ் 1,00000
முனிராஜ் 100000
நகை கடன் 2,000000
சங்க கடன் 10,00000
வீட்டு கடன் 60,00000
தனிநபர் கடன் 3000000
வீடு top இறக்க 27,0000 இந்த கடன்கள் உடனே அடைய வேண்டும் என்றும்

- Advertisement -

- Advertisement -

Unique exports பணம் 10,000000
வரவேண்டும் முருகா
முனுசாமி பணம் 10,00000
இந்த பணம் உடனே வர வேண்டும் முருகா

பலருக்கு தான் தர வேண்டிய கடன் தொகையை பெயருடன் எழுதி அந்தக் கடன் அனைத்தும் விரைவாக அடைய வேண்டும் என்றும், தனக்கு சிலரிடம் இருந்து வர வேண்டிய தொகை விரைந்து வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தின் இறுதியில், கந்த சஷ்டி கவசத்தின் சில வரிகளையும் எழுதி, விரைவில் ‘கடன் அடைய வேண்டும் முருகா’ என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வினோத வேண்டுதல் கடிதம் பலரின் கவனம் ஈர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ளதால் தர்மபுரி முழுவதும் யாராக இருக்கும் அந்த பக்தர் என்று பரபரப்பையும் சிரிப்பையும் ஏற்படுத்தி வருகிறது

5 national kavi
1 Comment
  1. SThiru Vengadam says

    சந்தானம் வேண்டி கடன் அடைய கவலையிலும் வலியிலும் துடிக்கிறான் அவனைப் போலவே நிறைய பேர் துடிக்கின்றன அனைவருடைய வேண்டுதலும் கந்தன் நிறைவேற்றுவானாக ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா

Leave A Reply

Your email address will not be published.