பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் விருது பெற்றவர்களுக்கு பெரியார் பற்றாளர்கள் சார்பில் பாராட்டு விழா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் விருது பெற்ற திருச்சி தி.அன்பழகன் – முனைவர் தி.நெடுஞ்செழியன் ஆகியோருக்குப் பெரியார் பற்றாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையம் சார்பில் கடந்த 17ஆம் நாள் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அவ்விழாவில் பெரியார் கருத்தியலின்படி அகவை முதிர்ந்து வாழும் பெரியார் தொண்டருக்குச் சிறப்பு பெரியார் விருதும், பெரியார் கருத்தியலை பொதுமக்களிடம் சேர்க்கும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்குப் பெரியார் விருதும், பெரியார் குறித்து சிறந்த நூல் எழுதியவர்களுக்கு பெரியார் பரிசு விருதும் 3 ஆண்டுகளுக்கு 9 பேருக்கு விருதுகளைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.செல்வம் வழங்கி சிறப்பு செய்தார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

9 பெரியார் விருதாளர்களுக்குப் பொற்கிழிகள்
9 பெரியார் விருதாளர்களுக்குப் பொற்கிழிகள்

இந்நிகழ்வில் பெரியார் கருத்தியலின்படி அகவை முதிர்ந்து வாழும் பெரியார் தொண்டருக்கான விருது, திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், விடுதலை ஞாயிறு மலரில் 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர், பெரியாரின் பகுத்தறிவு சிந்தனையின்படி 81 வயதை நிறைவு செய்து நவல்பட்டு அண்ணா நகரில் வாழ்ந்து வரும் திருச்சி தி. அன்பழகனுக்கு வழங்கப்பட்டது. 1இலட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டது. பெரியார் கருத்தியலைப் பொதுமக்களிடம் பரப்புரை செய்யும் சமூகச் செயல்பாட்டாளருக்கான பெரியார் விருது, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் கல்விசார அலுவலர், மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, திருச்சி வளனார் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பணிநிறைவு பெற்ற முனைவர் தி.நெடுஞ்செழியனுக்கு வழங்கப்பட்டது. பொற்கிழி ரூ.50ஆயிரமும் வழங்கப்பட்டது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

பெரியார் விருது பெற்ற இருவருக்கும் 21.09.2024ஆம் நாள் சனிக்கிழமை மாலை திருச்சி, பெரியார் பற்றாளர்கள் சார்பில் அங்குசம் அலுவலகத்தில் மாலை 6.30 மணிக்கு தமிழ்ப்புலிகள் மத்திய மாவட்டச் செயலாளரும், பெரியார் பற்றாளர்களின் ஒருங்கிணைப்பாளருமான திருச்சி இரமணா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ் விழாவிற்கு முன்பு மாலை 6.00 மணியளவில் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்குப் பெரியார் விருது பெற்ற திருச்சி தி.அன்பழகன், முனைவர் தி.நெடுஞ்செழியன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினர்.

பாராட்டு விழாவில் பேராசிரியர் ரெ.நல்லமுத்து வரவேற்புரையாற்றி, பெரியார் விருது பெற்ற அன்பழகன், நெடுஞ்செழியன் அவர்களை வாழ்த்திப் பேசி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். விழாவில் தலைமை உரையாற்றி இரமணா,“தந்தை பெரியார் பிறந்தநாள் விழா விடுபட்ட 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து நடத்தப்படவேண்டும் என்று பெரியார் பற்றாளர்கள் சார்பில் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குக் கோரிக்கை வைத்து, பதிவாளரை நேரில் சந்தித்து முறையீடு செய்தோம்.

3 ஆண்டுகளுக்கும் 9 விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய பொற்கிழிகள் வழங்கப்படவேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தோம். பெரியார் பற்றாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட துணைவேந்தர் அவர்கள் பெரியார் பிறந்தநாள் விழா 3 ஆண்டுகளுக்கும் நடைபெறும் அறிவித்தார். அதன்படி கடந்த செப்.17ஆம் நாள் பல்கலைக்கழகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. 9 விருதாளர்களுக்குப் பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் விருது பெற்றதிருச்சி தி.அன்பழகன் - முனைவர் தி.நெடுஞ்செழியன் ஆகியோருக்குப் பெரியார் பற்றாளர்கள் சார்பில் பாராட்டு
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் விருது பெற்ற
திருச்சி தி.அன்பழகன் – முனைவர் தி.நெடுஞ்செழியன் ஆகியோருக்குப்
பெரியார் பற்றாளர்கள் சார்பில் பாராட்டு

இதில் திருச்சியைச் சார்ந்த தி.அன்பழகன், பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆகியோர் பெரியார் விருதுகளைப் பெற்றுள்ளனர். அவர்களை வாழ்த்துகிறோம். தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதே பெரியார் பற்றாளர்களின் எதிர்பார்ப்பாகும்” என்று கூறினார்.

அடுத்து பேசிய சாமனிய மக்கள் கட்சியைச் சார்ந்த திருமதி ஷைனி பேசும்போது, “பெரியார் விருது பெற்றவர்களை வாழ்த்துகிறேன். பெரியாரை நான் ஒரு பெண்ணா மிக உயர்வாக மதிக்கிறேன். பெரியார் பற்றாளர்கள் எடுத்த முயற்சியின் விளைவாகத்தான் பல்கலைக்கழகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த இருவர் பெரியார் விருது பெற்றிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. இதுபோன்ற விருதுகள் பெரியார் கருத்தியலைப் பொதுமக்களிடம் எடுத்து செல்ல ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை” என்றார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தோழர் கார்க்கி பேசும்போது,“பெரியார் சிந்தனை என்பது கடுமையானது. அதன்படி வாழ்வது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் பெரியார் கருத்துகள் அனைத்தும், அனைவரும் சமம், பிறப்பில் ஏற்றத்தாழ்வு கிடையாது. யாரும் யாரையும் ஆதிக்கம் செய்யக்கூடாது, மூடநம்பிக்கைகளை விடுத்து, பகுத்தறிவு சிந்தனையோடு வாழவேண்டும் என்பதுதான் பெரியாரின் சிந்தனையாகும். இதன்படி வாழ்ந்தால் நம் வாழ்வு எளிமையாகும். சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றமும் நிகழும். பெரியார் விருது பெற்றவர்கள் சமூக மாற்றத்திற்குத் தொடர்ந்து செயலாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

பேராசிரியர் கி.சதீஷ்குமார்
பேராசிரியர் கி.சதீஷ்குமார்

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.சதீஷ்குமார் உரையாற்றும்போது, “பாரதிதாசன் பல்கலைக்கழகம், விழா நாயகர்களாக உள்ள தி.அன்பழகனுக்கும் பேராசிரியர் நெடுஞ்செழியனுக்கும் பெரியார் விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், தந்தை பெரியாரே தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மாபெரும் விருது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பெரியாரின் சிந்தனையால்தான் இன்று தமிழ்நாடு கல்வி வளம் கொண்ட மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்தியா முழுவதும் பெரியார் சிந்தனைகள் பரவினால் இந்தியா முன்னேறும். உலக அளவில் பாராட்டப்படும். பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை, பெண்விடுதலைச் சிந்தனைகளை முன்னெடுத்து தமிழகத்தை வலிமை செய்வோம்” என்று கூறினார்.

வீடியோவை காண

பாரதமிகுமின் நிறுவனத்தின் மேனாள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இயக்குநர் பெல் இராசமாணிக்கம் உரையாற்றும்போது,“திருச்சி மாவட்டத்தில் திராவிட இயக்கக் குடும்பம் என்றால் அது ஐயா திருமலை குடும்பம்தான். புலவர் முருகேசன் திமுகவில் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளராக இருந்தபோது, ஐயா திருமலை அவர்களை அவைத்தலைவராக நியமித்தார். இந்தக் குடும்பத்தில் உள்ள 9 பேரும் பெரியார் வழியில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டவர்கள். மூடநம்பிக்கையில்லா பகுத்தறிவு சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இந்த குடும்பத்திலிருந்து அண்ணன் அன்பழகன், பேராசிரியர் நெடுஞ்செழியன் பாரதிதாசன் பல்கலைக்கழக விருதுகளைப் பெற்றிருப்பது பெரியாருக்குப் பெருமை, விருதுகளுக்குப் பெருமை. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குப் பெருமை. பெரியார் உயராய்வு மைத்திற்குப் பெருமை” என்றார்.

மதிமுக திருச்சி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயபால் பேசியபோது,“திராவிட இயக்கப் பெரியவர் என்று அழைக்கப்படுவர் ஐயா திருமலை. அவர் குடும்பம் காலம்காலமாக பெரியார் சிந்தனையில் வளர்ந்து வரும் குடும்பம். இந்தக் குடும்பத்தில் அன்பழகனும் தம்பி நெடுஞ்செழியனும் பெரியார் விருது பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது. பெரியார் சிந்தனையாளர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் விருது பெற்றிருக்கிறார்கள். இந்நிலை தொடரவேண்டும். விருது பெற்றவர்களை வாழ்த்துகிறேன்” என்றார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம்
மதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம்

மதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் உரையாற்றும்போது,“பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் விருது பெற்ற அண்ணன் அன்பழகன், பேராசிரியர் நெடுஞ்செழியனையும் வாழ்த்துகிறேன். பெரியவர் திருமலை குடும்பம் என்பது பெரியார் சிந்தனையின்படி வாழ்ந்துவரும் குடும்பங்களில் ஒன்று. ஐயா திருமலை எழுதி வைத்த மரணசாசனத்தில்,‘என் இறப்புக்குப் பிறகு என் உடலுக்கு எந்தவொரு இந்துமத சடங்குகளும் செய்யக்கூடாது’ என்று எழுதி வைத்தார். ஐயா திருமலை வளர்த்த பிள்ளைகளும் பெரியார் வழியில்தான் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது சிறப்பான செய்தியாகும். அண்ணன் அன்பழகன் திராவிட இயக்க எழுத்தாளராக உள்ளார்.

பேராசிரியர் நெடுஞ்செழியன் பெரியார் சிந்தனையில் பகுத்தறிவோடு வாழக்கூடியவர். இவர்கள் இருவருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெரியார் விருது வழங்கியிருப்பது பொருத்தமுடையது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பெரியார் பிறந்தநாள் விழா 3 ஆண்டுகள் நடைபெறவேண்டும் என்று தனிமனிதனாக நின்று போராடியவர் பேராசிரியர் நெடுஞ்செழியன் மற்றும் பெரியார் பற்றாளர்கள். இவர்களின் முயற்சி வெற்றிப்பெற்று பல்கலைக்கழகம் 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து பெரியார் பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளது. பெரியார் பிறந்தநாள் விழா நடத்தவும் போராட வேண்டியுள்ளது என்ற நிலை வருங்காலத்தில் மாற்றப்படவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பெரியார் பற்றாளர்கள் பாராட்டு
பெரியார் பற்றாளர்கள் பாராட்டு

மதிமுகவைச் சேர்ந்த வெ.அடைக்கலம் பேசும்போது,“எங்கள் திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் அன்பழகன், தம்பி பேராசிரியர் நெடுஞ்செழியன் இருவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். வாழ்த்துகிறேன். எதிர்காலத்தில் பெரியார் கருத்துகள் இந்தச் சமூகத்தில் வேகமாக பரவ இவர்கள் செயல்படவேண்டும். நாமும் இவர்களின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று மீண்டும் இருவரையும் வாழ்த்துகிறேன்” என்றார்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ந்த தோழர் கோவன் உரையாற்றும்போது,“பெரியார் பிறந்தநாள் விழா 2023-24ஆம் ஆண்டுக்கு மட்டும் கொண்டாடப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்தபோது, விடுபட்ட 3 ஆண்டுகளுக்கும் கொண்டாடப்பட வேண்டும். 9 பேருக்கு விருதுகள் வழங்கப்படவேண்டும் என்று பேராசிரியர் நெடுஞ்செழியன் போராடினார். இவருக்கு உதவியாக பெரியார் பற்றாளர்களும் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, பதிவாளரைச் சந்தித்து, முறையாக பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வெற்றிப்பெற்றிருக்கிறது. இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. பெரியார் கொள்கைப்படி வாழ்ந்துவரும் தோழர் அன்பழகன், தோழர் பேராசிரியர் நெடுஞ்செழியன் பெற்றிருக்கிறார்கள். வாழ்த்துகிறேன்.

தோழர் கோவன்
தோழர் கோவன்

இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய செய்தி என்னவென்றால், பெரியார் கொள்கைகளைப் பேசுவது எளிமை. ஆனார் அவர் கொள்கைப்படி வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை என் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன். தாலி இல்லாத என் துணைவியாரை என் உறவினர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக் கொடுக்கமாட்டார்கள். நினைத்தால் நெஞ்சம் இன்றும் மனம் கணக்கின்றது. பெரியார் வழியில் வாழும் எங்கள் குடும்பத்தில் திருமண நிகழ்வுகளில் தாலியை மறுத்திருக்கிறோம். சாதி மறுப்பு திருமணங்களையும் செய்திருக்கிறோம். என்றாலும் சமூகத்தில் எங்களை ஒதுக்கி வைக்கும் மனநிலை இன்றும் தொடர்கிறது. பெரியார் சிந்தனையில் வாழ்வது சிக்கனமானது. பகுத்தறிவு நிரம்பியது. மூடநம்பிக்கையற்றது என்ற வகையில் வாழ்வது எளிமையான ஒன்றுதான். விருது பெற்றவர்கள் எதிர்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

வீடியோவை காண

தொல்லியல்துறை மேனாள் இணைஇயக்குநர் நாக.கணேசன் உரையாற்றும்போது,“பெரியார் பகுத்தறிவு சிந்தனைகொண்ட குடும்பம் திருமலை ஐயா குடும்பம். இந்தக் குடும்பத்தில் நான் திருமணம் செய்திருக்கிறேன். நான் ஒரு பொதுவுடமை சிந்தனையாளன் என்ற வகையில் நான் தாலி மறுப்பு திருமணத்தை மேற்கொண்டுள்ளேன். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மாமா அன்பழகன், பேராசிரியர் நெடுஞ்செழியன் இருவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் விருது பெற்றிருப்பது சாலப் பொருத்தமுடையது. இனி வருங்காலங்களில் பெரியார் சிந்தனை என்பது பரவலாக வளரவேண்டும். அதன் மூலம் அனைத்துத் துறைகளிலும் பெருகிவரும் பார்ப்பன ஆதிக்கம் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

பேராசிரியர் நெடுஞ்செழியன்
பேராசிரியர் நெடுஞ்செழியன்

ஏற்புரை வழங்கி பேசிய பேராசிரியர் நெடுஞ்செழியன்,“பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளுக்கும் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக நான் தனிமனிதனாகப் போராடவில்லை. பெரியார் பற்றாளர்களோடு இணைந்து போராடிதான் இந்த வெற்றி சாத்தியப்பட்டிருக்கிறது. நான் விருது பெற பெரியார் கருத்துகளைச் சமூகத்தில் பரப்பியதற்கான ஆதாரங்களைத் திரட்டி, பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்கு உதவியவர் பேராசிரியர் ரெ.நல்லமுத்துதான இதற்குக் காரணம். நான் பெற்ற விருது நல்லமுத்துவின் முயற்சிகள்தான் அடிப்படை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே சான்றோர் வழங்கிய வாழ்த்துகளைப் பெரியார் கருத்துகளைச் சமூகத்தில் பரப்பும் என் பணிகளுக்கான உரமாகவே எண்ணிக்கொள்கிறேன்” என்றார்.

தி.அன்பழகன்
தி.அன்பழகன்

தொடர்ந்து, ஏற்புரை வழங்கிய தி.அன்பழகன்,“1948ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னைக்கு வந்த காந்தியாரிடம் பிராமணர்கள்,‘தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளில் பிராமணர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்’ என்று கோரிக்கை மனு கொடுத்தார்கள். அரசிடம் பெற்ற அறிக்கையைப் படித்த காந்தியடிகள்,‘வேலைவாய்ப்புகள் எல்லா சமூகத்திற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் புறக்கணிக்கப்படவில்லையே’ என்றார். 1949ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் திருச்சி வானொலியில் பேசிய தந்தை பெரியார்,‘இந்த நாட்டுக்குக் காந்தி நாடு என்று அழைக்கப்படவேண்டும்’ என்று காந்திக்கு இரங்கல்உரை நிகழ்த்தினார். பெரியாரை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதன் வழியாகத்தான் பெரியாரியச் சிந்தனையில் வாழமுடியம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்’ என்றார்.

பொன்மலை மிசா தி.சாக்ரடீஸ்,
பொன்மலை மிசா தி.சாக்ரடீஸ்,

நன்றியுரையாற்றிய பொன்மலை மிசா தி.சாக்ரடீஸ்,“இங்கே வாழ்த்துரை வழங்கிய சான்றோர் பலரும் எங்கள் குடும்பம் சுயமரியாதை மிக்க பகுத்தறிவு சிந்தனைக் கொண்டது என்று குறிப்பிட்டார்கள். எங்கள் குடும்பத்தில் உள்ள 9 பேருக்கும் எங்கள் தந்தையார் திருமலை சுயமரியாதைத் திருமணம்தான் செய்துவைத்தார். பள்ளிக்கூடம் செல்லாத எங்கள் தாயார் எங்கள் தந்தையாரின் சுயமரியாதை வாழ்க்கை முறைக்கு உறுதுணையாக இருந்தார். இதனால்தான் எங்கள் வீட்டுக்கு வந்த மருமகள்கள் மற்றும் மருமகன்கள் என அனைவருமே பகுத்தறிவோடு வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் எங்களுக்குப் பெருமை. அந்தப் பெருமையின் தொடர்ச்சியாக அண்ணன் அன்பழகன், தம்பி பேராசிரியர் நெடுஞ்செழியன் இருவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். சான்றோர்களோடு நானும் இருவரையும் வாழ்த்துகிறேன். பெரியார் வழியில் வாழ எல்லாரும் முன்வரவேண்டும். அதற்கு முன்னர் பெரியாரைப் படிக்கவேண்டும் என்று வேண்டுகோளை முன்வைக்கிறேன்” என்று கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.