அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘அரசன்’ ஷூட்டிங்! சிலம்பரசன் அப்டேட்! ரசிகர்கள் ஹேப்பி!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘அரசன்’ படத்தில் சிலம்பரசன் டிஆர், விஜய் சேதுபதி , ஆண்ட்ரியா ஜெரேமையா, சமுத்திரக்கனி, விக்ராந்த் , கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் க்ரைம் வித் ஆக்சன் த்ரில்லராக தயாராகி வரும் இந்த ப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டி, மதுரையில் அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை தியாகராய நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கி இருக்கிறது. இதில் சிலம்பரசன் டிஆர் கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை சிலம்பரசன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

2026 June 11 - 17 Angusam Book

மதுரையில் நடைபெற்ற ‘அரசன் ‘ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கான சீருடை அணிந்து நடித்திருந்தார் சிலம்பரசன். வெற்றிமாறனின் வடசென்னை சினிமாடிக் யுனிவர்ஸாக ‘அரசன்’ உருவாகி வருகிறது. இந்த 2026 இறுதியில் திரையரங்குகளில் ‘அரசன்’ வெளியாகும் வகையில் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

  -ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.