பாஜக, அதிமுக, நாதக, மூவரும் சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும் – அர்ஜுன் சம்பத்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாஜக அதிமுக நாதக மூவரும் சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும் அர்ஜுன் சம்பத் தமிழன்னையிடம் வேண்டிக் கொள்வதாக பேட்டி..

தனித்தனியாக இருப்பவர்கள் தேர்தல் வரும் போது ஒன்றாக சேர்ந்து விடுவார்கள்.

Sri Kumaran Mini HAll Trichy

உலக தாய்மொழி தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கம் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பூஜைகள் நடத்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் …

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தாய் மொழியை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து தொிவித்துள்ளோம்.

தமிழன்னை
தமிழன்னை

திமுகவினர், மற்றும் முதல்வர் ஸ்டாலின் நடத்தும் பள்ளி, ஜோசப் விஜய் நடத்தும் பள்ளி என அனைத்து பள்ளிகளும் மும்மொழி இருக்கிறது. நவோதயா பள்ளி வந்தால் திமுகவின் கல்வி வியாபாரம் கெட்டுப் போய்விடும் என்பதற்காக மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கைதான் இருக்கிறது. திமுகவினர் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். தமிழர்களை ஏமாற்ற  நினைக்கிறார்கள். மும்மொழி கொள்கை நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை. கம்யூனிஸ்ட் காரர்கள் கேரளாவில் வேண்டும் என்கிறார்கள் தமிழ்நாட்டில் வேண்டாம் என்கிறார்கள்.

Flats in Trichy for Sale

நீண்ட காலமாக இந்த விவாதம் இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் கெட் அவுட் மோடி என்று சொல்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினால் நடத்த வேண்டியதுதான். ஈவேரா பாணியில் நமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது தான். அரசியல் தளத்தை உதயநிதி தாழ்த்தி விட்டார். எடப்பாடி பழனிசாமியை தவறாக பேசுகிறார். கெட் அவுட் மோடி என்று சொல்கிறார், ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி வைத்திருப்பவர்கள் திமுக. நாடு முழுவதும் உள்ள கட்சியை பாஜக, உலக மக்களின் தலைவர் நரேந்திர மோடி அவரை கெட் அவுட் மோடி என்று சொன்னால் அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார். உலகத்தில் நம்பர் ஒன் ட்ரெண்டிங் கெட்டவுட் ஸ்டாலின் தான்.

அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்

மும்மொழி கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு இருந்தால் உதயநிதி ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும். இரு மொழி கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் ஆங்கிலக் கல்வி திணிக்கப்படுகிறது.  கர்நாடகாவில் ஆங்கிலத்தை திணிக்க முடியாது கன்னடம் மட்டும்தான்.

உதயநிதி இந்த அரசியலை தரம் தாழ்ந்து கொண்டு போய்விட்டார். அவருக்கு அவர் பாணியில் பதில் கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறார். உதயநிதிக்கு பாடம் புகழ்த்துவதற்காக உலக அளவில் கெட் அவுட் ஸ்டாலின் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதிமுக மட்டும் எதிர்க்கட்சி அல்ல பாஜக, நாம் தமிழர் அனைவரும் எதிர்க்கட்சி தான் அனைவரும் சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும். தேர்தல் வரும்போது அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை,  போதைப்பொருள் புழக்கம் மிக மோசமாக உள்ளது இந்த ஆட்சியில்,  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் திமுகவை வீட்டிற்கு அனுப்ப அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும்  கூறியுள்ளார்.

 

—  ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.