திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உன்னத் பாரத் திட்டம் 2.0 சார்பாக முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மத்திய அரசின் உன்னத் பாரத் திட்டம் 2.0 சார்பாக முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சியானது நாகமங்கலத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியின் மூலிகை தோட்டத்தில் கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மரியதாஸ் சே ச அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு விரிவாக்க துறையின் இயக்குனர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச அவர்கள் தலைமை வகித்தார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள்.
முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி
இந்நிகழ்ச்சியை இளநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் முருங்கைக் கீரை, முருங்கை பூ, முருங்கைக்காய் ஆகியவற்றின் பயன்களை பற்றியும் ஆதலால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றியும் நோய் எதிர்பாற்றல் சக்தியினைப் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், முருங்கையின் மதிப்பு கூட்டுவது , முருங்கையின் வகைகள் கண்டறியும் வழிமுறை முருங்கைக் கீரையை உலர வைத்து பொடி செய்வது பற்றியும் முருங்கை சூப், முருங்கை பவுடர், முருங்கை டிப் டீ, சோப் ஆயில் தயாரித்து அவற்றை சந்தை படுத்தும் முறை பற்றியும் அனைவருக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது பயிற்சி கூட்டத்தில் 167 மாணாக்கர்கள் கலந்து கொண்டார்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் முருங்கை சூப் கொடுக்கப்பட்டது.
— அங்குசம் செய்திப்பிரிவு.