ஆர்ம்ஸ்ட்ராங் அப்பட்டமான அரசியல் கொலை – ஏன் தெரியுமா ?
ஆர்ம்ஸ்ட்ராங் அப்பட்டமான அரசியல் கொலை – ஏன் தெரியுமா ? ஆருத்ரா முதலில் அடைக்கலம் வந்தது ஆர்ம்ஸ்ட்ராங் கிடம். அவர் பொதுமக்களின் பணத்தை திரும்ப தர நிர்ப்பந்திக்க, அது தஞ்சமடைந்த இடம் பாஜக. தற்பொழுது அது பாஜக வின் கம்பெனி.
ஆற்காடு சுரேஷ் குடும்பம் பாஜக கட்சி. சென்னையின் இரண்டு ராஜாக்கள் ஆர்ம்ஸ்ட்ராங், சேகர் பாபு. சேகர் பாபு பொண்ணு மேட்டர்ல அவர் கூட பகை. மாநில உளவுத்துறைக்கு விவரம் தெரிஞ்சும் நடவடிக்கை இல்லை.
ஆர்ம்ஸ்ட்ராங் மேல ஆற்காடு பாலுவுக்கு பகை இருப்பது உண்மைன்னாலும், அதற்கு அவரை கொல்லும் அளவிற்கு பாலு முட்டாளாய் இருக்க முடியாது. அது தற்கொலைக்கு சமம்.
பாலுவுக்கு பகை தீர்க்க பாம் சரவணன், ஒத்தக்கன் ஜெயராஜ் உயிர்கள் போதுமானது. அவர்கள் இருவர் உயிரை தீர்த்தால் மீண்டும் ரவுடி அந்தஸ்துடன் இன்னும் கொஞ்சம் நாள், இன்னும் பவரா வாழ முடியும்.
ஆனா அவங்களை விட ஆர்ம்ஸ்ட்ராங் பெரிய கை எனும்போதிலும், அவரை கொன்ற பிறகு இவர்களுக்கு எதிர்காலமே இல்லை என அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
பாலுவுக்கு கூட இதில் பகை தீர்த்தல் எனும் ஆறுதல் உள்ளது. ஆனா மற்ற பத்து பேருக்கும் இது வெறும் கூலிப்படை கொலை அளவிற்குதான். கூலிப்படை கொலை என்பது சம்பாதிக்க வக்கற்று, வேறு வழியில்லாமல் கொலையில் ஈடுபட்டு, குடும்பத்திற்கு பணம் தந்து சில நாள் சிறை அனுபவிப்பது ஒரு வகை. அல்லது அந்த கொலையின் மூலம் பெரிய ரவுடியாகி செட்டில் ஆக நினைப்பது இன்னொரு வகை.
இந்த கொலையில் இந்த இரண்டும் நடைபெறாது.
கொலையாளிகளுக்கு ஆருத்ராவின் பணமும், அதிகார வர்க்கத்திற்கு பணமும், அதிகாரம் இருப்பவர்களால் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள், நாங்கள் பாத்துக்கொள்கிறோம் எனும் (பொய்யான) நம்பிக்கைகளை கொலைகாரர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் ஒழிய அவர்கள் இதற்கு துணிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருத தோன்றுகிறது.
இது அப்பட்டமான அரசியல் கொலை.
முகநூலில்: தோழர் ஜே.கே.