கொலை, வழிப்பறி மற்றும் கஞ்சா குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு !
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முசிறி, திருமுருகன் 4-வது தெருவில் புகார்தாரர் தர்மலிங்கம் 47/25 த.பெ தங்கவேல் என்பவர் இறந்தவரான சுப்பிரமணியன் 52/25 த.பெ ஆறுமுகம் என்பவரது வீட்டில் குடியிருந்து வருவதாகவும், கடந்த 16.06.2025-ம் தேதி இறந்தவருக்கும் முசிறி, திருமுருகன் நகரைச் சேர்ந்த கணேசன்@ கணேஷ் 39/25 த.பெ முனியப்பன் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் எதிரி கணேசன் @ கணேஷ் இறந்தவரான சுப்பிரமணியன் 52/25 என்பவரை கத்தியால் குத்தியதில் சுப்பிரமணியன் இறந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக எதிரி கணேசன் @ கணேஷ் கைது செய்து . 299/25, U/s 296(b), 103(1) BNS- 4 பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொணலையில் கடந்த 13.05.2025-ம் தேதி பாத்திமா விக்டோரியா 39/25 த.பெ ரிச்சர்ட் என்பவரிடமிருந்து Oppo A58 Cell Phone யை சமயபுரம், சோலை நகரை சேர்ந்த ராசய்யா 20/25 த.பெ சுப்பிரமணி என்பவர் பறித்து சென்றது தொடர்பாக சிறுகனூர் காவல்நிலைய குற்ற எண். 141/25, U/s 304(2) BNS -ன் படி வழக்கு பதிவு செய்து எதிரி ராசய்யா சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய காட்டூர் பாரத் பெட்ரோல் பங்கின் பின்புறம் கடந்த 09.06.2025-ஆம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த புதிய காட்டூர். 2-வது தெருவை சேர்ந்த சசிதரன் 47/25 த.பெ சண்முகன் என்பவரை . 157/25, U/s 8(c) r/w 20(b)(ll)(B) of NDPS Act -ன்படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி கொலை, வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட சிறையில் இருந்து வரும் குற்றவாளிகளான கணேசன்@ கணேஷ், ராசய்யா மற்றும் சசிதரன் ஆகியோர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு 10.07.2025-ஆம் தேதி சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் தற்போதுவரை மொத்தம் 60 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.