திருச்சியை கலக்கும் சின்னவர் கே.என்.அருண் நேரு !
திருச்சியை கலக்கும் சின்னவர் அருண்நேரு
தந்தை கே.என்.நேருவுக்கு உதவியாக இருந்து வரும் அருண் நேரு, கட்சியினர் வீட்டு நிகழ்ச்சிகளில் தவறாமல் தலைகாட்டி வருகிறார். திருச்சி லோக்கல் அரசியலில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் அருண்நேரு அப்பாயின்மெண்ட் கொடுத்து கலந்து கொண்டு வருகிறார்.
சரியாக சொல்ல போனால், தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, கடந்த 3 ஆண்டுகளாக தனது மகன் அருண் நேருவுக்கு அரசியல் பயிற்சி வழங்கி வருகிறார். தாம் ஊரில் இல்லாத நாட்களில் கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பது, கட்சியினரை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை தீர்க்க வைப்பது என மகன் அருண் நேருவை நேர்த்தியான அரசியல்வாதியாக உருவாக்கி வருகிறார் அமைச்சர் நேரு.
இதனிடையே அருண் நேருவை, அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் கட்சி போஸ்டர்களிலும், சுவரொட்டிகளிலும் முன்னிலைப்படுத்தி வருகின்றனர். வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அருண் நேருவை களமிறக்க வேண்டும் என இப்போதே அமைச்சர் கே.என்.நேருவிடம் ஆதரவாளர்கள் தூபம் போட ஆரம்பித்துவிட்டனர். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதால் இது பற்றி அமைச்சர் நேரு அலட்டிக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
ஆனால் ஆதரவாளர்களின் நச்சரிப்பு தான் அதிகமாக உள்ளதாம். ‘தம்பியை எம்.பி.தேர்தலில் களமிறக்க வேண்டும்’ என ஆதரவாளர்கள் அன்புத் தொல்லை கொடுப்பதால் விரைவில் இது குறித்து நேரு உறுதியான முடிவெடுக்கக் கூடும் எனத் தெரிகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேளை நேருவின் மகன் போட்டியிட்டால் பெரம்பலூர் தொகுதியில் தான் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்தத் தொகுதியின் எம்.பி.யாக, நேருவின் அக்கா மகனும் நடிகருமான நெப்போலியன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கட்டுமானத் தொழில் செய்து வரும் அருண் நேரு, இப்போதெல்லாம் திருச்சியில் தான் அதிகம் தங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மகனை அரசியலுக்கு கொண்டு வர அமைச்சர் நேருவுக்கு ஆரம்பத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் கூட, அரசியல் பயிற்சியிலும், ஆதரவாளர்களின் ஆர்வத்தையும் கண்டறிந்து அவரும் கிரீன் சிக்னல் கொடுத்ததாக கூறுகிறார்கள்.
இதைப்பார்க்கும் உடன்பிறப்பு கள், நடிகர் விஜய், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ‘ஜில்லா’ படத்தில் வரும் “சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா” பாடல் பாணியில் திருச்சியில் அப்பனும், மகனும் அசத்த போறாங்க என்று பேசுகின்றனர். எது எப்படியோ வருங்கால எம்பி அருண் நேரு என்ற முன்னேற்பாட்டில், தொண்டர்களையும், திமுக முக்கிய புள்ளிகளையும் நேரடியாகவே சந்திக்க திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் ஒரு பெரிய ஆபிஸ் ( அழகான பங்களா) கட்டப்படுகிறது.
டிசம்பர் 12ம் தேதி அருண் நேருவின் பிறந்தநாள் விழாவுக்கும் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன…
அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு அமைச்சர் தரப்பில் அன்பு கட்டளை இடப்பட்டுள்ளது… நாளைய எம்பி அருண் நேரு என்ற குறிப்பிடும் காலம் நெருங்கி விட்டதையே இவை காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது…
இளைஞர்களை ஈர்க்கும் அருண்நேரு
திருச்சியில் கோலோச்சும் கே.என்.நேரு கட்டளைப்படி, அருண்நேரு தனது அரசியல் நுணுங்கங்களை கற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல், கிராமங்களில் உள்ள இளைஞர்கள் கூட தற்போது அருண்நேரு புகைப்படத்தை தன் பாக்கெட்டில் வைத்து இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதுமட்மல்லாமல் தனது மெல்லிய புன்கையால் அப்படியே கட்டி போட்டு விடுகிறார். அவரது சித்தப்பா ராமஜெயம் போல வாரி வழங்கும் குணத்தையும் கொண்டுள்ளார். சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டு, தனது நம்பகத்தன்மையையும், தன்னை பற்றிய அரசியல் தன்மையும் தற்போது உயர்த்தி வருகிறார். பிசினஸ் மட்டுமே தனது இலக்காக கொண்டிருந்த அவர் தற்போது இளைஞர்களையும் கவர்ந்து வருகிறார் என்றால் அதில்
கிஞ்சிற்றும் தவறில்லை என்றே சொல்ல தோன்றுகிறது.
தொகுப்பு – அங்குசம் – செய்தியாளர் குழு
அமைச்சர் கே.என்.நேரு குறித்து அங்குசம் இதழில் வெளியான கட்டுரைக்கான லிங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. !
https://angusam.com/kn-nehru-the-secret-of-politics-and-the-necessity-of-the-future/