திருச்சியில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆசாமிகள் கைது..
திருச்சியில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆசாமிகள் கைது..
திருச்சி மத்திய பேருந்து நிலையம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை மாநகர பகுதியில் கட்டுப்படுத்துவதற்காக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும் மன்னார்புரம் மற்றும் வில்லியம்ஸ் ரோடு பகுதியில் பேருந்து நிறுத்தங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளது.
அதனடிப்படையில் நேற்று 12/11/2020 இரவு மன்னார்புரம் பகுதியில் புதுக்கோட்டை அரசு பேருந்து ஓட்டுநராக இருந்து வருபவர் பாலசுப்ரமணி அவரிடம் திருச்சி காஜாமலை இப்பகுதியை சேர்ந்த விஜய், ஆல்வின், ஆட்டோ செந்தில், கார்த்தி ஆகியோர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு ஓட்டுநர் பாலசுப்ரமணி தாக்கியுள்ளனர் இதில் காயம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான ஓட்டுநர் பாலசுப்ரமணி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் அதனடிப்படையில் போலீசார் விசாரணை செய்து மேற்கண்ட விஜய், ஆல்வின், செந்தில், கார்த்தி ஆகியோரை விசாரித்து வழக்குப்பதிவு செய்தனர்.
-ஜித்தன்