சொத்துகுவிப்பு வழக்கு அடுத்தடுத்து மரணம் ? சந்தேக வளையத்தில் மாஜி மந்திரி !
மாஜி மந்திரி சொத்துகுவிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து மரணம் ? அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த மாஜி பஞ்சாயத்து தலைவரின் சாவில், அதிமுக மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் மீது சந்தேகம் இருப்பதாக, இறந்தவரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…..
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மோளையானூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். கிருஷ்ணமூர்த்தி தற்போது தர்மபுரி அதிமுக மாவட்ட இளைஞர் அணி துனை தலைவராகவும் இருந்து வந்தவர்
இந்த நிலையில் காரிமங்கலம்-பெரியாம்பட்டி காமராஜர் நகரில் உள்ள , தனது மாமியார் வீட்டில் இருந்து , தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பூலாப்பட்டி மேம்பாலம் அருகே டூவீலரில் , சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோதியதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி தர்மபுரி அரசு மருத்துவமனையில் . தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
மனைவி புகார்
இதனிடையே, கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கவிதா, காரிமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று ஜூன் 17 ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தனது கணவர் கிருஷ்ணமூர்த்தி இறப்பில், முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகம் உள்ளது. எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் தொடரும் மர்ம மரணங்கள்?*
முன்னதாக கேபி அன்பழகனின் இளைய மகன் சசிமோகனின் மனைவி பூர்ணிமா , மீது சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் கடந்த 18-ம் தேதி வீட்டின் பூஜை அறையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் அருகே சென்ற போது பட்டுத் துணியிலான ஆடை அணிந்திருந்ததாகவும், அதனால் எளிதில் தீப்பற்றி மளமளவென பரவியதாகவும் . விளையாடிக் கொண்டிருந்த தனது குழந்தைக்கு அருகில் செல்லாமல் இருந்தபடியே தீயை அணைக்க முயன்றதால் மளமளவென தீயில் கருகி ? சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாக கூறப்படுகிறது .
கேபி அன்பழகன் மற்றும் அவரது மனைவி, மகன்கள், மருமகள் மீது ரூபாய் 1.32 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து அதன் ஒரு பகுதியாக 2020 ஜனவரி மாதம் அன்பழகன் வீட்டில் ரெய்டும் நடத்தப்பட்டது .
இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்தவர் தான் இந்த கிருஷ்ணமூர்த்தி , இவரும் தற்போது வாகன விபத்தில் பலியானதாக? கூறப்பட்டுள்ளது மாஜி அமைச்சர் கேபி அன்பழகன் சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து விபத்தில் மரணம் அடைந்து வருவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
–மணிகண்டன்.