ஜோதிடர்கள் அட்வைஸ் – பலனை எதிர்பார்த்து காத்திருக்கும் சசிகலா!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த ஓராண்டுகளாக உள்ளது. ஆனாலும் அவர்கள் தமிழ்நாடு அரசியலில் எந்தவித மாற்றத்தையும் தற்போது வரை பெரிய அளவில் ஏற்படுத்த முடியவில்லை. இதனால் அதிமுகவில் இருந்து சசிகலா விற்கும் மறைமுக ஆதரவளித்து வந்த பலரும் தற்போது மறைமுகமாக கூட ஆதரவு அளிக்க முன்வரவில்லையாம்.
அதேநேரம் டிடிவி தினகரனின் நடவடிக்கையை சசிகலாவிற்கு இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலாவுக்கும் டிடிவி தினகரனுக்குமான விரிசல் அதிகரித்திருக்கிறது. மேலும் சசிகலா தனது நெருங்கிய உறவினர் மூலமாக டிடிவி தினகரனை அழைத்து இனி சசிகலா விஷயங்களில் தலையிட வேண்டாம் என்றும், அமமுகவை தனியாக வழி நடத்திக் கொள்ளவும் கூறிவிட்டாராம். இதனால் டிடிவி தினகரன் சசிகலாவை புறக்கணித்துவிட்டு தற்போது அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க தொடங்கி விட்டாராம். இதன் ஒரு பகுதியாக தான் மார்ச் 20ஆம் தேதி சசிகலா கணவர் நடராஜன் நினைவு நாள் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் சசிகலா வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற பிறகு டிடிவி தினகரன் தனது படை பரிவாரங்களுடன் தனியே வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்.
அதேவேளையில் சசிகலா தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருவதை அடுத்து தனது குடும்ப ஜோதிடரை அழைத்து பலன் கேட்டாராம். அப்போது ஜோதிடர்கள் தற்போதைய நிலை தங்களுக்கு சாதகமாக இல்லை என்றும், இதனால் பின்னடைவுகளை தொடர்ந்து சந்தித்துக் கொண்டுதான் இருப்பீர்கள் என்றும் கூறியுள்ளனராம். மேலும் முக்கியமான கோயில்களின் பெயர்களை குறிப்பிட்டு சென்று வழிபாடு நடத்துங்கள் என்று அறிவுரை வழங்கினார்களாம், இதையடுத்துதான் சசிகலா தனது ஆன்மீகச் சுற்றுப் பயணத்தை தற்போது தொடங்கி பல்வேறு கோவில்களுக்கு பயணித்து வருகிறார், இவ்வாறு தனது தோழி ஜெயலலிதாவிற்கு பிடித்தமான கோயிலான கும்பகோணத்தில் அமைந்துள்ள அந்த புகழ்பெற்ற கோயிலுக்கு தற்போது மீண்டும் வழிபாட்டுக்கு சென்று வந்திருக்கிறார் சசிகலா.
இப்படி ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிறகு சசிகலா தற்போது சிறிய மன நிம்மதியோடு தன்னுடைய பயணத்தை தொடர திட்டம் தீட்டி வருகிறாராம்.