எம்.ஜி.ஆருக்கு பிறகு புறக்கணிக்கப்படும் முத்தரையர் சமூகம் !

-தினகரன் ஜெய்

0

எம்.ஜி.ஆருக்கு பிறகு புறக்கணிக்கப்படும் முத்தரையர் சமூகம் !

 

முத்தரையர் என்றால் என்ன ?

https://businesstrichy.com/the-royal-mahal/

தமிழ் சமூகம் ஐந்து நிலப்பரப்புகளைக் கொண்டு தங்களுடைய வாழ்வியல் முறையை பிரித்து வைத்திருக்கிறது. இதில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த சங்ககால மனிதர்களான வேட்டுவர்களின் வழித்தோன்றலே முத்தரையர்கள். இவர்களை மருதம் நிலத்தில் வலைஞர் என்றும், நெய்தல் நிலத்தில் வலையர் என்றும் கூறுவர். மேலும் முத்தரையர் சமூகத்தினர் 29 உட்பிரிவுகளைக் கொண்டு அதாவது 29 பட்ட பெயர்கள் கொண்டு உள்ளனர்.

முத்தரையர்  சமூகத்தின் மாற்றுப் பெயர்கள் என்னென்ன?

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

முத்திரையர் சமூகம் தமிழகம் முழுவதும் பரவலாக வாழ்ந்து வருகிறது. குறிப்பாக மத்திய மாவட்டத்தில் 50 சதவீத மக்கள் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இப்படி திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் பெரும்பான்மைச் சமூகமாக முத்தரையர் சமுகம் உள்ளது.

முத்தரையர் சமூக  மக்களை திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் முத்துராஜா என்ற பெயரில் அழைப்பார்கள்.  இந்த ஊரில் இருக்கக்கூடிய மக்களின் ஜாதிச்  சான்றிதழ்களும் முத்துராஜா என்ற பெயர் குறிக்கப்பட்டிருக்கும்.  மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அம்பலக்காரர் என்று அழைப்பார்கள். மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்  செட்டிநாடு வலையர், இந்து வலையர், இந்து முத்துராஜா என்று அழைப்பார்கள்.  கொங்கு பகுதியிலும் இந்து முத்துராஜா,  வலையர் என்று அழைப்பார்கள். வடமாவட்டங்களில் பாளையக்கார நாயக்கர், பாளையக்கார நாயுடு, முத்துராஜா நாயக்கர், முத்துராஜா நாயுடு. பெரம்பலூர், அரியலூர் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தங்களை சேர்வை என்று அழைத்துக் கொள்வார்.   தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மூப்பனார் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஜாதி சான்றிதழில் இந்து முத்துராஜா என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

முத்தரையர் சமூகத்திற்கான சங்ககாலச் சான்றுகள் உள்ளதா?

நாலடியார் பாடலில் இரண்டு இடங்களில் முத்தரையர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சங்க கால மனிதர்களான வலையர்களின் வழித்தோன்றலே முத்தரையர்கள். முத்தரையர் என்ற சொல் தனிச்சொல் அல்ல, பரிணாம பட்டம். அரசர்களை அரசன் என்றும், அரையர் என்றும் கூறுவர், இதில் அரசர்கள் என்றால் பெருநிலப்பரப்பை ஆண்டவர் என்று அர்த்தம். அரையர் என்றால் சிறு நிலப்பரப்பை ஆண்டவர் என்று பொருள். இவர்களில் மூத்த அரையர்களை குறிக்கும் சொல்லாக முத்தரையர் இருந்தது. மேலும் தூத்துக்குடி, இராமநாதபுரம் பகுதியில் இருந்த முத்தரையர்கள் ஆரம்ப காலத்தில் முத்துக்குளிக்கும் தொழில் செய்ததால் அவர்கள் ஆரம்பத்தில் முத்து பிளஸ் அரையர் முத்தரையர் என்று அழைக்கப்பட்டனர். இதுமட்டுமல்லாது அரையர் மன்னர்களின் மூத்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முத்தரையர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இப்படி ஆரம்பத்தில் வலையர்கள் தோன்றி மக்கள் பிறகு முத்தரையர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

முத்தரையர் சமூகத்தில் தற்போதைய நிலை ?

முத்தரையர் சமுகம் தற்போது தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் பெரும்பான்மைச் சமூகமாக முத்தரையர் சமூகம் உள்ளது. இப்படி தமிழகம் முழுவதும் 60 லட்சத்திற்கும் அதிகமான முத்தரையர் சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இன்று வரை பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை, வேலைவாய்ப்பு, கல்வியிலும் எங்களுக்கான முன்னுரிமை தற்போது வரை வழங்கப்படவில்லை. முத்தரையர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் திருமயம், புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் கூட முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் களமிறக்கப்படவில்லை.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த 7 பேரை வேட்பாளராக களமிறங்கினார். அதைத் தொடர்ந்து வந்த எடப்பாடி பழனிச்சாமி கூட ஏமாற்றிவிட்டார். 6 சீட்டுகளில் மட்டுமே முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை களம் இறங்கினார்.

முத்தரையர் சமூகம் அதிமுகவுடன் மிக நெருக்கமான சமூகம் என்ற பேச்சு இருக்கும். உண்மை தான், காரணம் குலசெல்லையா திமுகவின் முக்கிய ஆளுமையாக இருந்தார். அவர் பேராவூரணியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றிருந்தார். அவருக்கு மீண்டும் சீட்டு தர கலைஞர் மறுத்துவிட்டார். அவர் சுயேட்சையாக சிங்கம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். பிறகு அதிமுக தொடங்கப்பட்ட போது கட்சிக்கான முன்மொழிவு கடிதத்தில் கையெழுத்து போட்டவர்களில் குலசெல்லையாவும் ஒருவர். இதனால் எம்ஜிஆருக்கும் முத்தரையர் சமூகத்திற்குமான நெருக்கம் அதிகரித்தது.

எம்ஜிஆர் முத்தரையர் சமூக மாநாட்டில் பங்கு பெற்று உரை நிகழ்த்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முத்தரையர் சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் அதிமுகவில் இணைந்தனர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகும் கூட  சமூகத்தைச் சேர்ந்த மூத்தவர்கள் எம்ஜிஆர்  மீது கொண்ட பற்றால் இன்று வரை அதிமுகவில் இருக்கின்றனர். வாக்களித்தாலும் இரட்டை இலைக்கே வாக்களிக்கின்றனர். இதனுடைய தொடர்ச்சி தான் ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைத்தார். மேலும் 29 உட்பிரிவுகளை முத்தரையர் என்ற பெயரின் அடிப்படையில் வரையறுத்த அரசாணை வெளியிட்டார். மேலும் திருச்சியை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் என்று அழைத்தார். என்றாலும் அரசியலில் பெரிதாக பிரதிநிதித்துவப்படுத்தாமல் போனதால் முத்தரையர் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

முத்தரையர் சமூகத்திற்கு தற்போது அரசியல் அங்கீகாரம் இல்லை என்று நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும் முத்தரையர் சமூகம் அதிகம் வசிக்கும் பகுதியில் கூட முத்தரையர் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது இல்லை. இதனால் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி வருகின்றனர். முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலோர் கிராமச் சூழலிலேயே இருந்து தற்போது தான் வெளியே வருகின்றனர். இளைஞர்கள் அதிகளவில் சமூகப் பற்றுடன் செயல்படவும் தொடங்கி இருக்கின்றனர்” என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.